ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீ சீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
🔥குருவின் மறைஞான அருள்மொழிகளும், போதனைகளும் நமக்கு எந்த நிலையை உணர்த்துகின்றது என்பதனைப் பற்றியும், குருவின் ஆசியைப் விரைவில் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி விளக்கம்.🔥
சீரடிபகவான் அளிக்கும் பயிற்சி, போதனைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.அவரை நாடி வரும் ஒவ்வொருவருடைய இயல் நிலைக்கு ஏற்றவாறே குருவினுடைய உபதேசங்கள் இருந்தன...இப்போதும் தன்னை நாடி வரும் பக்தர்களின் சுயத்தன்மைக்கு ஏற்றவாறே ஆசிர்வாதமும், உபதேசங்களும் இருக்கிறது.....நாம் அனைவரும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, நாம் சாட்சியாக நின்று, எவ்வித எதிர்பார்ப்புமின்றி குருவை உற்று நோக்க வேண்டும்..அப்போது தான் குரு நம்மை வழிநடத்த தன் சேவகத்தன்மையோடு நம் முன் தோன்றுவார்.. எவ்வாறு குருவை நாம் இயங்க இயக்க வைக்கின்றமோ அவ்வாறுத் தான் பகவான் நம்மை வழிநடத்த முடியும்...இதனை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்...குருவாக நம்மை நாடி வர நாம் தான் நம் சித்தத்தை தூய்மைப் படுத்தி, முதல் படி நிலையாக நம் தூய்மையான அன்பினால் நம்முடைய மனதை நிறப்பி, அவரை ஆத்மார்த்தமாக அழைத்து நமக்குத் தெரிந்த பூஜை முறைகளை செய்து அவரை உள்ளன்போடு நேசித்து, மதித்து, ஒளிவு மறைவின்றி வேற்றுமைப் பாராமல் குருவை ஏற்றுக் கொண்டு வழிபட வேண்டும்...இதுவே குருவின் கருணைப் பார்வை நம் மீது செலுத்துவதற்கான முதல் நிலையாகக் கருத வேண்டும்... இதன் பிறகு நம்மை குருவிடம் ஒப்படைத்து விட்டு குருவின் பால் பேரன்புக் கொண்டு அவரோடு சூட்சமமாக கரைந்து.. கலந்து, அவரின் ஆசியைப் பெற குருவையே எதிர்நோக்கி சிறு குழந்தையாக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும்..மேலும் குருவழிப் பாதையைப் பின்பற்றி அவர் கூறிய அருள்மொழிகளை படித்து அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.....உயர்ந்த பண்புகள், இறையாளர்கள் கூறிய நெறி முறைகள்,வஞ்சகமின்மை,பேராசையின்மை, பிறர்க்கு தீங்கி இழைக்காத தன்மை,தானத் தருமத்தை கடைப்பிடித்தல்,ஏழை எளியவர்களின் பால் நேசமாக இருத்தல்,பிறர் துயரத் துன்பத்தைக் கண்டு வருந்துதல்,பிறர் மகிழ்வைக் கண்டு நாம் மகிழ்தல்,அனைவரும் நன்றாக, ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல்,அனைவரின் பால் பாகுபாடு இல்லாமல் அன்பு வைத்தல் மற்றும் குருக் கூறிய மானிட இறைப் பண்புகளையும் ,சத்திய ஒழுக்க கோட்பாடுகளைக் கடைப்பிடித்து இறையச்சத்தோடு வாழ்ந்து வந்தால் சித்தம் தெளிவடையும்....
சித்தம் தெளிவு பெறும் போது சித்தர்களும், மகான்களும் குருமார்களும் ..சித்தத்தின் இருப்பிடத் தவைனுமான ஆதி சிவப்பரமும் நம்மை நாடி வந்துவிடுவார்கள்...நீங்கள் கூறும் இறை நாமாக்களுக்கு ஏற்ப குரு முதல் அனைத்து உயர் ஆத்மாக்களும் தானாக முன் வந்து ஆசி வழங்கி உங்களை வழி நடத்துவார்கள்...இதுவே இறையை ஈர்க்கும் வழியாகின்றது அன்பர்களே. நாம் அனைவரும் இறையைத் தேடி ஓட வேண்டியதில்லை. இறைத்தன்மை நம்மை நோக்கி வர நாம் நம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்...நாம் நமக்குள் சிவத்தை உணரவும் சித்தத்தை தூய்மை படுத்தவும் மட்டுமே குரு வழிக் காண்பிக்கின்றார்...குருவின் ஆற்றலானது நாம் நம்மை எந்தளவிற்கு நம்மை ஒப்படைக்கின்றோமோ அவ்வாறே நமக்குள் குருவின் பேராற்றல் வந்து நம்மை ஆட்க்கொள்ளும்.. நமக்காக செயல் புரிய முன்வரும்..உங்களை ஒப்படைக்காமலும், சரணடையாமலும்,உங்களை வெற்றிடமாக்கிக் கொள்ளாமலும்,வெளிப்படையாக நீங்கள் உங்களை ஒப்படைக்காமல் இருந்தால் குருவால் கூட ஒன்றும் செய்ய முடியாது...எவ்வாறு நாம் குருவை கரம் பிடித்து அவர் வழியில் சென்று நம்மை இயக்க அனுமதிக்கின்றோமோ அவ்வாறுத் தான் குரு நமக்கான சேவகனாக பணியாற்றிட முடியும்...இந்த மூல சூட்சமத்தினை நன்றாக புரிந்து கொள்ளவும் சாய் அன்பர்களே..நாம் தான் குருவைக் நம்மை நோக்கி ஈர்க்க கைக்கொள்ள முயற்சிக்க வேண்டும்...தூய்மையான அன்பால் அவரை நம் பிண்ட உறவினர்களைப் போல், உள்ளன்போடு நேசித்து வழிப்பட்டு,கலந்து, கரைந்து, ஒளிவு மறைவில்லாமல் நம் இருப்பை வைத்துக் கொண்டு குருவை நம் பால் வர இறுக்கிக் கொள்ள வேண்டும்.. இவ்வாறு நாம் நம்மை குருவையும் இறைத்தன்மையையும் ஈர்க்க நாம் சில நடைமுறைப் பண்புகளை நமக்கு நாமே வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.. குரு, ஒரு உயர்ந்த தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கி வாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக சீரடி பகவான் அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு மட்டுமல்லாமல் .. அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்...குரு நம்மை மிகச் சிறந்தகர்ம யோகியாக செயலாற்ற வைத்துக் கொண்டே ஞான மார்க்கத்தையும் ஒரு சேர புகட்டுவார்..நாம் தான் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்..
ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென குரு எதிர்பார்க்கவில்லை. .. தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம்... பாபா அவரை ஏற்றுக் கொள்கின்றார்....ஆனால்...பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம்..... உதாரணமாக "பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்" என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.....இதுவே அனைத்திற்கும் மூல சூட்சமமாகின்றது ...
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக