ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏
🔥சீரடி சாய்பாபாவின் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில், முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள மறைஞான சூட்சம உரை இங்கே.. கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதில் இடம்பெற்றுள்ள மறைஞான தத்துவ உட்கருத்தும் இங்கே ..🔥🔥
ஒருநாள் காலை நேரத்தில் அண்ணாசாஹேப் மசூதிக்கு சாய்பகவானை தரிசிப்பதற்காகச் சென்றிந்தாராம்.....சாஹேப் கூறுகின்றார்.... பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன். தமது முகம், வாய் இவற்றைக் கழுவிய பின்பு, பகவான் கோதுமை மாவு அரைக்கத் தயார்படுத்துவதில் முனைந்தார்.... ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதன்மேல் திருகையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து தம் கஃனியின் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார். திருகையைச் சுற்றி கோதுமையை அரைக்கத் தொடங்கினார்....பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியமென்ன என்றவாறு நினைத்தேன்.... அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள். ஆயின், ஒருவருக்கும் பகவான் என்ன செய்கின்றார் என்று கேட்கத் துணிவு வரவில்லை....
பகவான் மாவரைக்கும் இச்செய்தி உடனே சீரடி கிராமத்தில் பரவி ஆண்களும், பெண்களும் பாபாவின் செய்கையைக் காணப் பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர். கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய நுழைந்து, பகவானை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திருகையின் கைப்பிடியைப் பற்றி பகவானின் லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர்.
முதலில் பகவான் கடுங்கோபம் அடைந்தார்... ஆயின், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார்... அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க வேறு யாருமே இல்லை..அவர் பிச்சை எடுத்து வழ்ந்தவராதலாள் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவையிருக்கவில்லை...எனவே இவ்வளவு மாவை என்ன செய்வார்..? ஒருவேளை பகவான் அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்." என்றவாறு எண்ணமிட்டபடி, பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள்....
இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பகவான் கோபமடைந்து, "பெண்களே..! உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா..? யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கின்றீர்கள்....நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் இதற்கு முன்னர் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன? தயவுசெய்து இப்போது இதைச் செய்யுங்கள், இம்மாவை எடுத்துச்சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார்... இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடி அங்கே மாவைப் பரப்பிவிட்டார்கள்.
பகவான் கோதுமை அரைத்ததைப் பற்றி என்னக் காரணம் என்று சீரடி மக்களை வினவினேன்...காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டு இருப்பதாகவும், பகவான் கோதுமை அரைத்தது அதனை எதிர்க்க செய்யும் பரிகாரமே என்றும் கூறினார்கள்.. கோதுமை அரைக்கப்படவில்லை, காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டது என்பது தெளிவாயிற்று... இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.பகவான் எதனைச் செய்தாலும் அதில் மாபெறும் மறைபொருள் சூட்சமம் அடங்கியுள்ளது .எனவே பகவான் வழிமுறைகளை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளுதல் முக்கியமானது...நம்பிக்கை என்பது இங்கே பிரதானமாகக் கருதப்படுகின்றது...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக