ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏
🔥🔥ஶ்ரீ சீரடி சாயீன் பாமாலை..🔥🔥
எங்கள் சாய் அன்னையே...
உம்மை யாசிக்கின்றோம்...
உம்மை சுவாசிக்கின்றோம்.
உம்மில் உயிருடன் ஒன்றாகின்றோம்....
உம் அன்பின் ஆதிக்க மூல பேராற்றலை உணர்ந்து.. தெளிந்து ....கரைந்து..... உம்மோடு கரைகின்றோம்....
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் உம்மை எதில் இல்லையென்று தேடுவேன் எமது சாய் அன்னையே.....
யான் காணும் அனைத்திலும் நிறைந்த உன்னை, எதில் நீ இல்லையென்றுத் தேடி... எந்த வஸ்துவை உமக்கு உவமானமாக கூறுவது எமது சாய் அன்னையே.. ...
காட்சிப் பொருளும் நீர் தானே...
சாட்சியாகவும் இருப்பது நீர் தானே...
அண்ட சராசரத்தை ஆட்சி செய்யும் மூலப் பொருளாகவும் இருப்பது நீர் தானே சாய் அன்னையே......
எங்கே பார்த்தாலும் அதில் நீர் தானே உறைந்து இருக்கின்றாய்...
எதிலும் நீர் ...
எங்கு நோக்கினாலும் நீர்..
உயிரிலும் நீர்...
உணர்விலும் நீர்..
காற்றிலும் நீர்..
காலத்திலும் நீர்.....
காண்கின்ற பொருளிலும் நீர்...எண்ணங்களில் நீர்...
ஏற்றத்தில் நீர்....
சுவாசத்திலும் நீர்.. வாசத்திலும் நீர்....
நேசத்திலும் நீர்...
பரிவிலும் நீர்...
யான் பரிதவித்து நிற்கும் போதும் நீர்....
என் வாழ்விலும் நீர்...
என் வறுமையிலும் நீர்..
என் துன்பத்திலும நீர்...
இன்பத்திலும் நீர்..
யான் வீழும் போதும் நீர்.
யான் வாழும் போதும் நீர்...
அனைத்திலும் நீர் தானே. ...
எதில் பேதம் பார்ப்பேன்...
யாரை வெறுப்பேன்...
யான் வெறுப்பவரும் நீரல்லவா...ஏனெனில் யான் வெறுத்த மனிதரிலும் உயிராக நீர் தானே இருக்கின்றாயே...எனது சாய் அன்னையே...
யாராய் நினைக்கிறேனோ அவராய் நிற்கின்றாயே...
யாவரையும் காத்து அகிலத்தில் சிறக்கின்றாயே..
தோராயமாய்த் திரிந்த என்னைத் தூக்கி நிறுத்தி தோளில் சுமக்கின்றாயே...
பாராமல் நின்றாலும் பக்கத்தில் இருக்கின்றாயே..
பங்காளியாய் நின்று எமது துயரங்கள் பகிர்கின்றாயே....எமது சாய் இரத்தினமே.....
வேராக நீயிருக்க பழமாக இனிக்கின்றேனோ.......
ஒன்றாக நினைத்தாலும் நூறாகத் தெரிகின்றாயே...
குருவாய் வந்து என்னின் குறைகளைப்போக்குகின்றாயே...
குறைகளை நீக்கி குன்றின் மேல்லிட்ட விளக்கின் சுடரைப் போல் எம் உள்ளத்தை ஒளிர வைத்தாயே...
எமது சீரடி அரசரே....வாழ்க்கைப் பாடமதனைப் எனது மாயை மனதிற்கு புரியும் படி புகட்டுகின்றாயே....
தந்தையாக இருந்து தன்னந்தனியாக தவித்த என்னை பாதுகாத்து பாதுகாவலனாக இருக்கின்றாயே...
தனித்து கண்மூடி கதறும் போது ஒளிச்சுடராக உள்ளத்தை நிறைக்கின்றாயே....
உன் தோள் மீதெனை வைத்து உலகைக் காட்டுகின்றாயே....
தாயாய் இருந்து தரணியை எம் எழுத்து மூலம் ஆள கற்றுக் கொடுக்கின்றாயே...
தாயாய் இருந்து யாரும் உணராத பேரன்பை எம்மீது சொரிகின்றாயே...
தூய அன்பின் மூலத்தை உணர்த்தி எம்மை, உன்னுள் உறையச் செய்துவிட்டாயே...
அன்னையே...உம் அன்பிற்குத் தான் நிகரிண்டோ இவ்வுலகில் எம் சாய் அன்னையே....
உம் அன்பை உணரும் போது ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கின்றாயே...
இதுவே பரன்வசம் என்கின்றாயே... பேரானந்தமும் என்று உரைக்கின்றாயே..
அன்பே அனைத்தும் என்பதை உம் பேராற்றலை உணர்ந்த கணம் உறைந்து போனேன் என்னுள். உறைந்த கணம் அறிந்தேன்... என்னுள் ஏற்கெனவே இருந்துக் கொண்டு தான் இருக்கின்றாய் என்பதனை எனது அன்னையே...
எம் மாயை கண்ணோட்டத்தால் உம்மை வேற்றுமைப் படுத்திப் பார்த்த என்னை, வேராக நானே இருக்கின்றேன் என உணரச் செய்தாயே அன்னையே....
எனக்குள் வேராக சாய்நாதமாக இருந்து மாயையின் பிடியில் இருந்து விலக்கினாயே...
சத்தியம், தர்மம், மனிதநேயம் ,மனிதம் என்பது என்ன என்று சூட்சமமாக உணர வழி நடத்தினாயே....
நீர் எம் இல்லத்தில் வாசம் செய்து இல்லத்தை இறையறமாக மாற்றினாயே....
என்னை உம்மை மட்டும் நோக்கச் செய்து மூல சூட்சமத்தை போதித்தாயே.
பாசாங்கு செய்து வேஷம் போடும் மானிடரை இனம் கண்டு ஒதுங்கிச் செல்லக் கற்று கொடுத்தாயே...
பொருத்தார் பூமி ஆள்வார் என்பதனை உமது வாக்கின் மூலம் நடைமுறைப் படுத்தினாயே.....
குழந்தையாய் என்னை உன் மடியில் சீராட்டும் போது யான் வெள்ளேந்தி குழந்தையாகிறேனே...
கள்ளம் கபடமற்ற தூய உள்ளம் கொண்ட குழந்தைகளாக எங்களை உருவாக்குகின்றாயே....
சொற்களால் உமது பேராற்றலை உருவகம் செய்ய முடியாது எமது சாய் அன்னையே..... உம்மை உணர்ந்தால்.... உம்மில் கரைந்தால் கலந்தால்...மட்டுமே முடியும்...ஆம் அன்பர்களே...
ஆத்மார்த்தமாக கரைந்து அவரின்பால் அனைத்தையும் ஒப்படைத்து அவர் காட்டிய நேர் வழிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே இந்த சாய் இரத்தினத்தின் மகிமைப் புரியும் தானே......
நாங்கள் வாழ்நாள் முழுக்க உன்னடி கிடந்து தொழுது பணி செய்து கிடக்க வரம் தருவாயோ... எங்களின் சாய் அன்னையே...... சீரடியில் வாழ்கின்ற சீராளனே...சீரடி அரசனே....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
சாயீயைப் பணிக...அண்ட சராசரமெங்கும் சாந்தி நிலவட்டும்....குருவே சரணம்..🙏🏻🙏🏻
தெளிவு குருவார்த்தை கேட்டல்...🙏🙏
தெளிவு குரு நாமத்தை செப்புவது.🙏🏻🙏🏻..
குருவில்லாமல் திருவில்லை....🙏🙏
குருவின் பாதையே ஆதி மூலத் திருவை அடைய சிறந்தவழி....ஆம்....உணருங்கள்..போற்றுங்கள்...சாயீயை சுவாசித்து வாழ்வோம் சாயீனில்..🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக