ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

🔥🔥ஏன் சக உயிர்களை வெறுப்பு விருப்பின்றி நேசிக்க வேண்டும் என்று கூறுகின்றேன் என்றால்.....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏

🔥ஏன் சக உயிர்களை வெறுப்பு விருப்பின்றி நேசிக்க வேண்டும் என்று கூறுகின்றேன் என்றால்.....🔥

எமது குழந்தைகளே...அனைவரிலும் இருப்பது ஒன்றின் மூலமே..அது ஆதி மூல சிவப் பேராற்றல் என்கின்ற  ஏகத்தின் ஒரு துளியாக,  ஒவ்வொரு  மனித உயிரிலும் சிவமே சீவனாக  இருக்கின்றது.. இதனை சற்று கவனித்து  விழிப்புணர்வோடு உற்று நோக்குங்கள்.. அனைவரும் கடவுளே...பிண்டம் மட்டும் வேறாக இருக்கின்றது...ஏனெனில் அனைவரிலும் ஒன்றின் மூலமே நிறைந்து இருக்கின்றது.... உன்னில்  இருந்து யாரையும் வேறுப்படுத்திப் பார்க்க முடியாது...அனைவரும் ஒன்றின் மூல சிவப் பேராற்றலிருந்து உருவான உயிர்களே குழந்தைகளே....அண்ட சராசரத்தையும் இயக்குகின்ற ஆதி மூலமே உங்களிலும்,  மற்ற அனைத்துயிரிகளிலும்  நீக்கமற நிறைந்து இருக்கின்றது எமது குழந்தைகளே... 

இந்த அடிப்படையில் பார்த்தால் யார், யாரைப் பேதம் பார்ப்பது..பேதமின்றி மற்ற மனிதர்களை நேசித்தலே, நம்மை   படைத்தவனுக்கு  நாம் செய்யும் இறை வழிபாடு...அவன் போட்ட வித்தில்....அதுவாக அனைத்தும் இருக்கின்றதே. இந்த நிலையில்  யாரை குறைக் கூறினாலும், அந்த நபரிலும் மூல வித்தான சிவயேகத்தின் ஒரு துளியே  அடங்கியுள்ளது...இது தான் மூல சூட்சமம்  எமது குழந்தைகளே...மற்ற மனிதரை  உம்மில் வேறாகப் பார்த்தால், அது மூலத்தை உணராத அறியாமையைக் காட்டுகின்றது குழந்தைகளே.. ஏனெனில் உங்கள் அனைவரிலும் மூல வேர் என்ற ஆற்றலாக, ஆதி மூல சிவப் பேராற்றலே , உங்கள் யாவரிலும்  உயிராக இருந்து இயக்குகின்றது..ஆனால் அந்த மூல ஆற்றலானது  உங்களை உணர வைக்காமல்  தன்னை மறைத்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு காண்பிக்கின்றது.. இதுவே மூல சூட்சமம் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள் ...

ஆதி ஆற்றல்  தன்னை உணர வைக்கவே, வாழ்க்கை என்ற நாடக மேடையை கொடுத்து, பிண்டத்தை கொடுத்து, உயிரைக் கொடுத்து ,பற்பல பிறவிகளுக்கு ஏற்ப கர்ம வினைகளையும் சேர்த்து  கொடுக்கின்றது... இந்த வாழ்க்கை என்கின்ற மேடையில், நல்ல நடிகனாக  வேஷம் தரித்து சத்தியப் பாதையில் பயணம் செய்து, ,நல்ல நெறிமுறைகளைக் கடைப்பிடித்தும்,  சத்தியம், மனித நேயம், இறையச்சம், அஹிம்சை போன்ற நற்குணங்களோடு  வாழ்ந்தால் சித்தம் தெளிந்து குருவின்  பேராற்றலையும், மூல ஆதி சிவத்தையும் உணர முடியும்....இதனை உணர வைக்கவே குரு தேவைப்படுகின்றார்..  அனைத்து உயிர்களுக்கும்  அன்போடும் .. பரிவோடும்...சேவை  செய்வீராக... கடவுள் உங்களுக்கு மற்ற உயிர்களுக்கு  உதவி செய்யும்  சந்தர்ப்பத்தை கொடுத்து   இருந்தால்.  நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றே அறிவீராக... இந்த  சேவையை கடவுள் கொடுத்த வரமாக எண்ணி மகிழ்வீராக...ஆனால் உன்னை பற்றி அதிகமாக   பெருமையாக நினைத்துக்   கொள்ளாதே... கடவுளின்   விருப்பம் இல்லாமல்  இந்த   உலகில் எதுவுமே  நகராது.   நீங்கள் மிக்க

பாக்கியசாலிகள்..உங்கள் அனைவருக்கும்   யான் குருவாக அமைந்தது உங்களின் மூதாதையர் செய்த நற் புண்ணியங்களின் பலனே என்பதை அறிவீராக..மற்றவர்களுக்கு கிடைக்காத  பாக்கியம்  உங்களுக்கு கிடைத்துள்ளது..ஆனால்  அடுத்தவர்களை மறைத்துவிட்டு  நல்ல காரியம்  செய்ய முயலாதீர்கள்..என்னால் அனைத்தும்   முடியும் என்ற  அகங்காரத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்...அவ்வாறு ஏதாவது அகந்தை இருந்தால் அந்த  எண்ணத்தினை அறவே   விட்டு விடுவீராக....பிற உயிற்களை நேசிக்கும் போது எம்மையே நேசிக்கின்றீர்கள்..பிறரைக் காயப்படுத்தும் போது எம்மையே காயப்படுத்துகிறீர்கள்...வாயில்லா ஜீவன்களுக்கு உணவை வழங்கும் போது எமக்கே வழங்குகிறீர்கள்..

பிற  துன்பத்தைக் கண்டு மனம் வருந்தி, நீங்கள் எம்மிடம் வைக்கின்ற பிரார்த்தனையின் போது நான் உங்களுக்கு தேவையான அனைத்தையும் கேட்காமலேயே வழங்குவேன்...ஏனெனில் இந்த ஏகத்தன்மையைத் தான் உம்மிடம் எதிர் நோக்குகின்றேன்..தன்னுயிரைப்  போன்று பிற உயிரை நேசிக்கும் போது , உங்களுக்குள் ஏகத்தன்மை வெளிப்படும்..இறையாற்றலின் மூலத்தை உங்களுக்குள் உணர ஆரம்பிப்பீர்கள். இதனை அனைத்தையும் கடைப்பிடித்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு எக்காலமும் சேவை செய்ய உடன்பட்டவன் ஆவேன் எமது குழந்தைகளே...

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம் ..🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...