ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, மே 09, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥ஶ்ரீசீரடி  சாய்பாபாவின்  சாய்சரித்திர  உபதேச பொன்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு  போதனைகள்...🔥🔥

எமது குழந்தைகளே...உங்கள்  வாழ்க்கையில்  எனது பெயரால் ஒரு பாலத்தை அமைத்துக் கொள்வீராக..அதன் வழியாக நீங்கள் கம்பீரமாக நடந்து போகலாம்...வரலாம்...உங்களை ஆத்மார்த்தமாக ஒப்படைத்தால்,  உங்களின்  அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விரைவில் மீட்டெடுப்பேன்...வாழ்க்கையின் குறுகிய காலத்தை  நினைவில் கொள்ளுங்கள்... போனதெல்லாம் போகட்டும்... இனி செம்மையான வாழ்க்கையை நடத்த முடிவு செய்வீராக...இதில் இன்பத்திற்காக மட்டும்  ஏங்காமல், துன்ப நிலை வந்தாலும் எற்றுக் கொள்ளத் தயாராகுங்கள்....

எதுவந்தாலும் உங்களுக்கு என்ன கவலை... எதுவும் உம்மை  சேதப்படுத்தாமல் வழி நடத்திச் செல்ல நானிருக்கிறேன்...என்னுடைய விருப்பப்படி செயல்பட , உம் செயல் திட்டங்கள் அனைத்தும் ஒளிவு மறைவின்றி ஒப்படைப்பீராக...பிறருடைய  விமர்சனங்கள் பற்றிய எண்ணங்களை எண்ணிப் பார்க்காதே.. உங்களுக்குள் சுய ஆளுமை என்ற குணத்தை நான் வைத்திருக்கிறேன்...

நீங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய ஆத்மா... இப்போதுள்ள நிலையால் பின் தங்கியிருக்கின்றீர்கள்...எழுந்து வெளியே விவேகத்துடன் நடந்து வாருங்கள் குழந்தைகளே..இப்போதுள்ள எல்லா கஷ்டங்களும்  உங்களிடம்  இருந்து விடைபெறுகின்றன...உங்கள்  துக்கநாட்கள் முடிந்ததுவிட்டது....கவலையும் நோயுமாகக்  கழித்த நாட்களின் எண்ணிக்கை இதோ இனியில்லை....

எதைப் பற்றியும் கவலைப்படாமல்  வாழக்கையை  நடத்துவீராக...திடமான மனதை ஒருமுகப்படுத்தி என்பால் லயமாக்குவீராக... என்னையே அதில் முதன்மை படுத்துவீராக... எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்... எதற்கும் தயாராக இருப்பீராக... இதோ நான் உங்களுடன். இருக்கிறேன்,. உங்களுக்கு  உதவி செய்வதற்க்காக காத்துக் கொண்டு இருக்கின்றேன்...

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻

🙏🏼ஶ்ரீ சாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...