ஒம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏
எனதன்பு_குழந்தைகளே....நீங்கள் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்வீராக.. உங்கள் மீது முதலில் திடமாக நம்பிக்கை கொள்ள வேண்டும் குழந்தைகளே... எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ள வேண்டும்...கவுரவத்திற்காக வீண் செலவுகளில் ஈடுபடக் கூடாது...வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை...பணிவும், அன்பும் நிறைந்த ஒன்றே போதுமானது... வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்று கொண்டு நம்பிக்கையோடு செயல்படுவீராக...உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை உனக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கும். சுகமும் துக்கமும் வெளி யுலகில் இருப்பதாக நீ எண்ணுகிறாய்...அது உன் மனதில் இருக்கிறது. அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந் தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும்... .இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்ப மாக மாறலாம். துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும். இதை நீ உணர்ந்தால், வெற்றி நிச்சயம்...கடவுளை காண அனைவரும் விருப்ப படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கே வாய்ப்பு கிடை க்கிறது....
கடவுளை தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் துாய்மை பெறும்.. சுயநலத்துடன் வாழ்வது பாவம்... தனக்கும், பிறருக்கும் பயனுள்ளவராக வாழ வேண்டும்... பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம்..பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம். இனிய சொற்களால் மற்றவர் களை மகிழ்விக்க அறியாதவர்கள் மவுனமாக இருப்பதே சிறந்தது....சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.....இவைகளை பின்பற்றுங்கள்.... நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்...என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவீராக.. உங்களுக்கு என்றென்றும் நல்லதே நடக்க ஆசி புரிவேன் எமது குழந்தைகளே...எதற்கும் கவலைப்படாதீர்கள்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக