ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச உரைகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🙏🙏.
🔥விக்ரக வழிபாடும்..பாபாவும்..🔥🔥
ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்...பகவான் அந்த பக்தையின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக் கொடுத்து) உங்களுக்கு தலைவலி இல்லையா..?
பக்தை :... இருந்தது...இப்போது (நின்றுவிட்டது.தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது) என்று கூறுகின்றார்...
பாபா : இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்...
பக்தை :....நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.
பாபா : சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....பக்தை குழப்பமடைந்தார்.
பாபா :.. உங்கள் வீட்டில் என்ன பூஜை....
பக்தை : கணபதி பூஜை.
பாபா : உங்கள் தாயார் வீட்டில்...?
பக்தை:....கணபதி...நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும்,பழங்களும், தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.
பாபா : அவை எல்லாம் என்னை வந்தடைந்தன...ஆகவே சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.....
பக்தை :.... பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால், அந்த சிலைதூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர்...
அது சரிதானா...?
பாபா : உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி எறிவீர்களா...?அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக