ஓம் ஶ்ரீசாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..🙏🙏
அன்னதானத்தின் மகிமையை எடுத்துக்கூறி, அனைத்து உயிர்களுக்கும் அன்னத்தை வழங்கி அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் சீரடி சாய்பகவான் என்பது குறிப்பிடத்தக்கது...பகவான் வாழ்ந்த காலத்தில் வீடுதோறும் இரந்து உணவு உண்பதை வழக்கமாக மேற்க் கொண்டாராம்..பகவானுக்கு உணவிட்டோர் புண்ணியம் செய்தவர்கள் என்றே கருதப்படுகின்றது...ஏனெனில் பகவான் உணவைப் பெற்றதால் அவர்கள் மஹா பஞ்சபாவங்களிலிருந்து விடுதலைப் பெறுகின்றனர்....ஐந்து வீடுகளில் மட்டுமே உணவை ஏற்றுக்கொண்டாராம்..அந்த உணவுப் பண்டங்களை எல்லாம் கலந்து அனைத்து ஜீவா ராசிகளுக்கும்வி நியோகிப்பது பகவானுக்கு பிடித்த ஒன்றானது.....தான் மட்டும் எதனையும் ஏற்காமல் தனக்கு கிடைத்ததை பிற உயிர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பகவான், சக பிராணிகளுக்கும்,
விலங்கினங்களுக்கும்..அதாவது ஈ, எறும்பு, காகம், நாய் ஆகிய அனைத்திற்கும் உணவு அளிப்பாராம்....இந்த பிராணிகளை அதிதீகள் என்பாராம்...சில நேரங்களில் தாமே உணவு தயாரிக்கக் முனைவதுண்டு..அந்த சமயத்தில் தேவையான பொருட்களைப் பகவான் வாங்கி வருவார், தானியங்களையும் தன் திருக்கரங்களினால் அரைப்பாராம்....இரண்டு வித தவலைகளில் உணவு தயாரிப்பார் பகவான் ..ஒன்றில் இனிப்பு அன்னமும், மற்றொன்றில் அசைவ உணவும் தயாரிப்பாராம்....மசூதியின் வெளியே அடுப்பை மூட்டி தவலைகளில் நீர் ஊற்றி கொதிக்க விடுவாராம்...உணவு பதமாகிவிட்டதா என அறிய தன் கரங்களை உள்ளே விடுவாராம்...(கொதி கலனே அவர் கரம் பட்டு குளிர்ந்து விடுமே!அவர் கரங்களுக்கு என்ன தீங்கு நேரிடும்....?அது இறைவனின் திருக்கரங்கள் அன்றோ..?)பக்தர்களோ சீரடி மகானின் கரம் பட்ட உணவை அமுதமாக நினைத்து உண்டு மகிழ்வார்களாம்....உணவை இறைவனுக்கு நிவேதனம் செய்த பின் அனைவருக்கும் வழங்குவாராம்....சைவ உணவை உண்பவர்க்கு அசைவ உணவை தொடவிட மாட்டாராம்....ஆயினும் சிலநேரங்களில் பக்தர்களிடம் சீண்டிப் பார்ப்பாராம்..ஒருமுறை சாந்தோர்கரை அசைவ உணவு பண்டம் வாங்கி வரக் கூறினார்...பிராமண குலத்தவராயினும் பாபாவின் கட்டளையை சிரமேற்க் கொண்டு கடைக்குச் செல்ல தயாரானார் சந்தோர்கர்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக