ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
🔥ஆன்மீக வாழ்க்கையில் குருவழிப் பாதையைப் பின்பற்றி எவ்வாறு நாம் உயர்ந்த நிலையை அடைவது. மற்றும் விழிப்புணர்வு தியானத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதன் விளக்கம்...🔥
எனதன்பு குழந்தைகளே.....ஆன்மீகம் என்பது என்னவென்றால்....
ஜெகத்துள் இறையுடன் கொண்டாடிக் கலந்து இகத்துள் எந்தவித அடையாளமும் இன்றி தன்னைச் சார்ந்தவர்களுடன் வாழ்வது தான் ஆன்மீகம்..இதன் தன்மை சூட்சம, ஸ்தூல நிலையாகவும் வெளிப்பட்டு உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்..மூல சூட்சமம் இது தானே எமது குழந்தைகளே.......எங்கே தேடி ஓடுகின்றீர்கள் ...உன்னுள்ளே தேடு.....உனக்குள் உள்ள ஏகத்தின் ஒரு துளியை உணர்ந்தாயா.....உணர முற்பட்டாயா...இல்லை.. அனுபவபடுத்தித் தான் பார்த்தாயா....இல்லை ..இறை அல்லது குருமார்கள் விதித்த இறைப்பண்புகளோடு உன்னை பிணைத்துக் கொண்டாயா.....இதில் எந்த தன்மையை நீ உன்னில் உருவேற்றினாய்... உன்னுள் உன்னை உயர்த்த ,உன்னை மேம்படுத்த இருக்கின்ற பரமாத்மாவின் ஒரு துளியான உயிராத்மாவை உயர்வடையச் செய்து ஆதி ஜோதி பரமாத்மாவோடு கலக்க நீயே உன் உள்ளம் என்கிற கோவிலை சுத்தம் செய்ய வேண்டும்....அதில் அன்பை நிரப்ப வேண்டும்.. அதில் இறை அமர ஆசனமாக நீ இருக்க வேண்டும்..பரமாத்மா ஜோதியை உன்னில் உயிராதமாவோடு ஒன்றிட வைத்து முச்சந்தி வெடித்துச் சிதற நீ தான் அகப்பயணம் மேற்க்கொள்ள வேண்டும்.. இதில் நீ மட்டுமே எஜமானன்..கட்டுமானன் நீ தான்...வேறு எவறும் உன்னை சரி செய்ய முடியாது.. நிமிர்ந்து நின்று உன் உள்ளத்திலே பரப்பிரம்ம பீடத்தை உருவாக்கு..தேடி ஓடாதே..நீ தானே அனைத்தும் எமது குழந்தைகளே....எங்கே ஓடினாலும் ஒடுங்குவது அவன் வாசம் செய்யும் உன்னில் தானே..உன்னில் உள்ள ஆத்ம லிங்கத்திற்கு அபிஷேகம் செய் ..உன்னை சரி செய்து கொள்..உன்னை சுற்றி உள்ளவற்றை விழிப்புணர்வோடு கவனித்து
சாட்சியாய் இருந்து அனைத்தையும் பற்றில்லாமல் இருக்க முயற்சித்துப்பார்..எல்லாவற்றையும் சரி செய்து கொண்டு வா..தாமரையாக மலர்வாய்.. சகஸ்ரா விழித்து கொண்டு ஆதியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்..எம்மோடும் இரண்டறக் கலப்பாய். தானே....அதனதன் பணியை அது தானாக நிறைவேற்றிக் கொள்ளும்..நீ செய்ய வேண்டியது என்பது என்னவென்றால் நான் என்பதை விட்டு நாம் என்கிற தன்மையைப் பெற்று அகங்காரம் இன்றி வாழ்தலே.....
அவனுக்கு ஏற்ற பாத்திரமாக நீ மாறும் போது இறை நம்மைத் தேடி வரும்.....வாழும் வாழ்க்கையையே தியானமாக ஆக்கிக் கொள்ள எதனையும் சாட்சியாகப் பார்த்து விழிப்புணர்வு நிலையில் வாழ்ந்தாலே போதுமானது.....இந்த நிலையில் உடல் மற்றும் மனம் பிரிந்து நான் என்ற நிலை நீக்கப் பெற்று இறை நம்மை இயக்க ஆரம்பிக்கும்...எதிலும் பற்றற்றத் தன்மையைத் நாம் நம்மை அறியாமலேயே கடைப்பிடிக்க இந்த விழிப்புணர்வு தியானம் உதவிகரமாக இருக்கும்... ஆகவே சாய் அன்பர்களே தினமும் ஒரு ஐந்து நிமிடங்களாவது உங்களை நீங்களே உங்கள் செயல் மற்றும் மனதில் ஓடும் எண்ணங்களை கவனியுங்கள்...இவ்வாறு கவனிக்க கவனிக்க எண்ண ஓட்டங்கள் குறைந்து நாளடைவில் மனதில் வெற்றிடம் ஏற்படும்....இந்த வெற்றிடமானது நம்மை நிகழ்காலத்தில் வாழ வைத்து அந்தந்த நாட்களுக்குரிய செயல்பாடுகளை விவேகத்தோடும், வீர்யத்தோடும் ,முழுமைத் தன்மையோடும் அந்தந்த செயலுடன் ஒன்றி நம்மை ஈடுபட வைக்கும்...அதே போல நாம் செய்யும் செயலைக் கவனிக்க கவனிக்க நான் என்ற தன்மை மறந்து நாம் செயலோடு ஒன்றி நம்மை அறியாமலேயே கரைந்து முழுமையோடு அந்தச் செயலைச் செய்ய ஆரம்பிப்போம்...அவ்வாறு செய்யும் செயலானது முழுமைத் தன்மைப் பெற்று ஒரு அழகான தீர்வின் வெளிப்பாடாக அமையும்....ஏனென்றால் நான் செய்கிறேன் என்ற நிலையில் நீங்கள் செயலை அணுகும் போது அதற்கு நீங்கள் முழுமையை கொடுக்கின்றீர்கள்....சாட்சி நிலையில் அச்செயலை கவனித்து செயல்படும் போது அந்த செயலுக்கான ஆற்றலானது மூலத்திலிருந்து வெளிப்பட ஆரம்பிக்கும்..இது தானாக உங்களின் அனுமதி இல்லாமல் மூல இறையாற்றல் உங்களை இயக்க ஆரம்பிக்கும்...நீங்கள் நான் என்பதனை விட்டு உங்களை அச்செயலில் இருந்து விடுவித்து கொள்கிறீர்கள்......இது சாட்சியாக இருக்கும் போதே தானாக நிகழும் அற்புத மாற்றம்..ஆகவே இந்த நிலையில் இறை முழுமையாக இயக்க வழி விடுகின்றீர்கள்..ஒரு பக்கம் எண்ணத்திலிருந்து விடுதலையும், மற்றொரு நிலையில் செயலை கவனித்து அச்செயலை இறை இயக்க வழி அமைக்கின்றீர்கள் .இதில் நான்மற்றும் எனது என்ற நிலைப்பாடு அகன்று உங்கள் உடல் மற்றும் மனம் வேறாகின்றது...நாளடைவில் மனம் என்பதே இல்லாமல் போகின்றது...இது உங்களுக்கு மிகப் பெரிய தியானம் செய்த பலனை கொடுக்கும்....வாழ்வே தியானமாகி விடும்....உயிர்ப்போடும் பேரானந்த நிலையோடும் வாழ்ந்து குருவின் ஆசியையும் எளிதில் பெற்று ஆதி இறையோடு இரண்டறக் கலக்க முடியும் அன்பர்களே....இந்த விழிப்புணர்வு தியானத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள். வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்..தேடி நாடி போக வேண்டாம் தியான மையங்களை. .. உங்களுக்குள்ளே உள்ள ஆதி மூல இறைத்துளியை உணர இத்தியானமானது வழி வகைச் செய்யும்.... .இதனால் குருவின் பேராற்றலையும் உணர்நது குருவோடு உங்களை பிணைத்துக் கொள்ள எளிதாக முடியும்.....விழிப்புணர்வுடன் இதனைப் பின்பற்றிப் பாருங்கள்...வாழ்வே கடினமாகத் தோன்றாது. .....உங்களின் ஆத்ம மலர்ச்சியையும் ...வாழ்வின் மேன்மையையும் நீங்களே உணருவீர்கள்...... ஆகவே இந்த விழிப்புணர்வு தியானத்தைக் கடைப்பிடித்து நான் என்ற தன்மையை நீக்கி, நாம் ஈன்ற இறைத் தன்மையைப் பெற்று இறை இயக்க நாம் வழிவகைச் செய்துக் கொள்வோம்....பேரானந்த நிலையை ஆன்மீக வாழ்வில் பெறுவோம்🔥🔥
ஓம் சாய்ராம்..🙏🏽
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக