ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
🔥புனிதத்தலமான சீரடியில் நாம் அனைவரும் இன்று வணங்கி மகிழ்ந்து இளைப்பாறும் இடமான சமாதி மந்திர் உருவானது எவ்வாறு என்பதன் விளக்கம்...🔥
செப்டெம்பர் இருபத்தெட்டாம் நாள் பகவான் உடல் நிலை மிக மோசமாக நலிவடைந்தது... ஆயிரத்து தொள்ளயிரத்து பதினெட்டாம் ஆண்டு பதினைந்தாம் தேதி விஜய தசமி நாளன்று,ஏகாதசி துவங்கியதும் பூவுலகை நீத்தார் சீரடி பகவான்..அதற்கு முன் கோடீஸ்வரரான பூட்டி என்பவர் கனவில் பகவான் தோன்றி சீரடியில் ஒரு அழகிய கட்டிடம் கட்டி அதை இறைவன் இருப்பிடமாக நிர்மாணிக்கும் படியும் அறிவுருத்தினாராம் பகவான்...அதே நேரம் உன்னத சீடரான ஷாமா கனவிலும் தோன்றி பூட்டிக்கு உதவும்படி கூறினாராம்..பூட்டி உடனே பாபாவிடம் ஆசி பெற்று வேலையை துவங்கினாராம்..
அனைவரும் அழகிய ராதா கிருஷ்ணர் சிலையை வைக்க திட்டமிட்டார்களாம்.ஆனால் பகவானோ " நான் அங்கு தங்குவேன்... ஆடுவேன் ..பாடுவேன்.. என்று சூட்சமமாக கூறியிருக்கின்றார்....பகவான் உடல் நலிவுற்றபோது வாகே என்பவர் , சீரடிக்கு பகவானைக் காண வந்தாராம்..அவரை ராம விஜயம் என்ற நூலை படிக்கும்படி அறிவுருத்தினாராம் பகவான்....தொடர்ந்து சில நாட்கள் படித்த வாகே களைப்புற்றாராம்...பாபா தன்னை பூட்டி கட்டியுள்ள கட்டிடத்திற்கு அழைத்து செல்ல கூறினாராம்.இவ்வண்ணம் கூறியவாறே பாகோஜி மீது சாய்ந்து சமாதி நிலையை அடைந்து விட்டார்....இந்து முஸ்லிம் மத நல்லிணக்க செல்வரான பகவானின் உடல் பூட்டி கட்டிய புதிய ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது..அதுவே நாம் அனைவரும் தொழும் சமாதி மந்திர் ஆயிற்று...பகவான் உடல் நலிவுற்ற நேரம் அவருடன் சிறு வயது முதலே அன்பு பாராட்டி அவர் சேவையிலே வாழ்நாளை கழித்த தாத்யா படேல் உடல் நலம் குன்றி ரத்த வாந்தி எடுத்து உயிர் பிரியும் நிலையில் இருந்தாராம்....ஆனால் பாபாவோ அவர் வேதனையை தான் வாங்கிக் கொண்டு தாத்யாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதுபோல் தன் உயிரைக் கொடுத்தாராம்...தன் பக்தருக்காக தன் உயிரை ஈந்தார் பகவான் ஏனென்றால் ...அப்படி தன் இன்னுயிரை அளித்து அவரைக் காத்தார் பகவான் என்றால், தாத்யாவின் அன்னை பாய்ஜாபாய், பாபா காடு மேடுகளில் திரிந்து கொண்டிருந்த காலங்களில் அவர் மேல் சாலப் பரிந்து தாயினும் மேலான அன்புடன் அவரைத் தேடி அலைந்து அவருக்கு பசியாற உணவளித்தாராம்....பகவானும் பாயஜாவின் மகனை தன் உயிரினும் மேலாகக் காப்பேன் என்று அவருக்கு வாக்களித்தாராம்..பயஜாபாய் செய்த தொண்டுக்கு நன்றிக் கடனாக தன் மேல் கொண்ட பக்திக்காக அவர் தந்த பரிசே அவர் மகனை காக்க பகவான் தன் இன்னுயிரை அளித்தார்......இன்றளவும் கூட பகவான் தன் பக்தர்களைக் காப்பாற்ற எவ்வேடத்தையும் ஏற்பேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார்..ஆகவே சாயீயைப் பணிவோம்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக