ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🙏🙏
🔥🔥அனைத்திலும் மேன்மை உண்டாக நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்...சக உயிர்களைப் பேதமின்றி நேசித்து உதவிகளைச் செய்தும், பிறர் கூறுகின்ற நல்ல கருத்துக்களை ஏற்கும் போதும், இறைப்பண்புகளுடன் வாழ்க்கை நடத்துகின்றவர்களும், முழுமையான குரு சரணாகதியாலும் மேன்மை நிலையை அடையலாம்.. .🔥🔥
துன்பம் வந்த நேரத்தில் ஒரு நன்மை விரும்பி,நல்ல ஆலோசனையை சொல்பவர் யாராயினும், அவர்கள் இறைவனின் வடிவங்களே என்று சுய விழிப்புணர்வுடன் உணர்வீர்களாக.....இறைவனின் சங்கல்பம் இல்லாமல்,அவர்கள் அந்த நன்மை நல்கும் ஒன்றைச் சொல்லமாட்டார்கள்..இவ்விஷயத்தை அனைவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்..அந்த அறிவே இருக்க வேண்டும்...ஆகையால் அப்படிப்பட்டவர்கள் கூறும் இதமானவற்றைத் தள்ளி விடவேண்டாம்.. கேட்டு கடைப்பிடிக்க வேண்டும்...
துன்பங்கள் வராமலிருக்காது..வரும்...ஆனால் வந்தபோது நிலைமையை இன்னும் மோசமாக்கலாகாது நல்லவற்றைக் கூறுபவர்களின் பேச்சை ஏற்று பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் மேன்மை உண்டாகும்..அனைத்தும் நம்மிடமே இருக்கின்றது..எதனை உள்வாங்குகின்றமோ அதனையே வெளிப்படுத்துகின்றோம்...ஆகவே ஒவ்வொரு நிமிடத்திலும் உற்று கவனித்து, ஒவ்வொரு செயலையும் ,சொல்லையும் மனதையும் கவனித்து தேவை இல்லாததை நீக்கிக் கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஸ்ரீ சாயீ திருவாய்மொழி.🙏🙏🏼🙏🏼
🙏ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக