ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..🙏🙏

🔥🔥ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மகிமை வாய்ந்தவர்..கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!.தனது  பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே....🔥🔥

பகவான்  எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார்...அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகின்றாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார்..கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகின்றார்...அவரை தியானத்தாலும், பிரேமை பொங்கும் பஜனையாலும், அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி  அவர்களைப் பாதுகாக்கிறார்...எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும்...ஆனால், நம்முடைய நல்வாழ்வு பகவானைப்  பற்றிய சிந்தனையில் தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும், இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த பகவான் பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கின்றார்.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...