ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻.
தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது.., குட்டிகள் அந்தக் கரையில் பாலும், அரவணைப்பின் கதகதப்பும் இன்றி இருக்கின்றன...தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கையளித்து வளர்ச்சியடையச் செய்கிறது.குட்டி ஆமைகள் எப்போதும் தாயைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டாம், புல்லும் வேண்டாம், வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்கு போஷாக்கு. .யான் இவ்வாறாகவே உங்களைப் பாதுகாக்கின்றேன்...
நான் ஒன்பது வார விரதமிருக்கலாமா..? சப்தாகம் செய்யலாமா..? நேர்ந்து கொள்ளலாமா..? சீரடிக்கு போய் வரலாமா..? என்ன செய்தால் என் கஷ்டம் தீரும்? என்று யோசிக்கவே வேண்டாம் ..நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை... தாயான சாயீயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்போதும்! அது உங்களுக்கு போஷாக்கு தரும். வறுமையிலிருந்தும், பிரச்சினை போன்றவற்றிலிருந்தும் உங்களை மீட்டுவிடும்...
விதைத்தவுடன் அறுவடைக்கு செல்வது எப்படி மடத்தனமோ, அப்படித்தான் வேண்டியது உடனடியாக பலிக்க வேண்டும் என நினைப்பது. உனது வேண்டுதல் கேட்கப்பட்டாகிவிட்டது. அதற்கான வழிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்ற காலத்தில் எல்லாமே சுலபமாக, சுமூகமாக முடியும் என்பதை என்னிடம் வேண்டியவுடனே தெரிந்து கொள்ளவேண்டும். ..எனக்கு படையல் போடுவதைவிட, பசித்தவனுக்கு உணவு கொடுப்பதையும், ஆதரவில்லாதவனுக்கு உதவி செய்வதையுமே நான் விரும்புகிறேன். ஏனென்றால், நீ சுகமாக இருப்பதால் உலகத்திற்கு நன்மை விளையும் என்பதால் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து நிறைவாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய ஆவல் எமது குழந்தைகளே.
ஸ்ரீசீரடி சாய்பாபா..🙏🙏🙏.
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக