ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..🙏🙏🙏
🔥ஶ்ரீசீரடி பகவான் தன் பக்தர்களை கையாண்ட விதம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டான அனுபவ விளக்கத்தை பார்ப்போம்...பகவான் தன் பக்தர்களை வழி நடத்தும் விதமானது அற்புதமானவை..! 🔥
நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும், குஷ்டமாகவும், வலியாகவும், கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்..? ஆகவே இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று பாபா எழை ஆம்ப்டேகர்-ரிடம் போதனை செய்தார்.. பகவானின் அதிதீவிர பக்தர் சோல்கர் என்பவர், சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை விட்டுவிட்டார், இதனை அவர் எவரிடமும் கூறவில்லை...ஆனால் பகவான், அதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு, தன் பக்தனைப் பார்த்து... "சோல்கர்! நீர் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது...ஆகவே உம்முடைய விரதமும் நிறைவேறி விட்டது" என்று குறிப்பால் உணர்த்தி இனிப்பை உணவில் சேர்த்துக்கொள் என்று தாய்மையுணர்வுடன் அறிவுருத்தியது குறிப்பிடத்தக்கது...நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு, பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன் என்பதை மறவாதீர்.... ஸ்ரீசீரடி சாய்பாபா.....🙏🙏
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக