ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏
🔥ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பகவான் கூறுகின்றார் இங்கே.... 🔥
"ஒருபோதும் எமது பக்தனை அப்படி கூறாதே... எனது பக்தர்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகின்றார்கள்..... என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன்... நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன்... அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை... நான் அவர்களை என்னிடம் இழுத்துக் கொள்கிறேன்" என்றார்...இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.ஆகவே ஆத்மார்த்தமாக தூய அன்புடன் பக்தி செய்து சரணாகதி அடைவோமாக....
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக