ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..🙏🙏🙏
🔥பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம்....அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சனைகளை எதிர்க்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும்... சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும் என்பதை அறிவீர்களாக.....🔥
சத்குருநாதர் மகாபலம் படைத்தவராக இருக்கலாம்...ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும், தம்மிடம் அசையாத நம்பிக்கையையும், சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து. எதிர்பார்க்கிறார்..
மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே.... மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பகவானுக்குத் தெரியும்...எனவே பகவான் எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார்..... பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார்..
நீங்கள் எங்கேயிருந்தாலும், நீங்கள் என்ன செய்தாலும், நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுவது வழக்கம்...பகவான் சகலமும் அறிந்தவராக இருந்திருக்கின்றார் என்பதை ஸ்ரீ சாயீ சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான உபதேச மொழிகள் உணர்த்துகின்றது.....
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக