ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி.சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

🔥🔥ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை"..ஶ்ரீசீரடி சாய்பாபா..🔥

சீரடி சாய்பாபாவின் பேச்சு சுருக்கமானது, வெகு ஆழமான வியாபகமுள்ளது.என்னிடமே நிலைத்திருப்பின்" என்ற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. இறுதிவரை, எத்தகைய சூழ்நிலையிலும், பாபாவை விட்டு நாம் விலக கூடாது என்பதன் மூல சூட்சமமே ...

பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும், எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயீபகவான்  நம்மைக் கைவிடமாட்டார் என்பதையும் அறிவோம்...

எவர் பகவானின் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகின்றார்களோ அவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது என்பதை அறிவீர்களாக....

இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை..துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை...அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே.அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.....

கள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.

ஸ்ரீ சீரடி சாய்பாபா.....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...