ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏
ஏன் சாய்பாபாவை நம்புகிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் பல கேள்விகளை எழுப்பின....!!!
பகவானை உணராது இருந்த ஆரம்ப கால கட்டத்தில் என்னுடைய சுயநலத்திற்காக என் தேவைக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்த எனக்கு பிறகு அந்த சுயநலம் மறைந்து படிப்படியாக என்னுடைய தேவைகளை குறைந்தன...என்னை முழுவதுமாக அப்பேராற்றலிடம் ஒப்படைத்தேன்...சாட்சியாக என்னை முன்னிருத்தி என்னை கவனிக்க என்னுள் உள்ளுணர்வால் பகவான் எம்மை ஆட்க்கொண்டு வழிநடத்தினார்..படிப்படியாக யாமும் பகவானும் வேறல்ல என்ற நாம் என்ற தன்மையால் நான் பகவானோடு இரண்டறக் கலந்து என்னையே பகவானிடம் ஒப்புக்கொடுத்தேன்...கருணை, அன்பு, அறம், போன்ற பல உயரிய நற்குணங்கள் என்னுள் உருவேற்றமானது... எனக்காக கேட்டுக்கொண்டிருந்த என்னுடைய பிரார்த்தனைகள் இப்பொழுது பிறருக்காக பிராத்தனை செய்ய ஆரம்பித்தேன். அதுவும் நடைபெற ஆரம்பித்தது. சாய்பாபாவின் இரண்டு குறிக்கோள்கள் பொறுமை மற்றும் நம்பிக்கை இரண்டும் கடைப்பிடித்தால் போதும் நாம் நம் பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து எளிதில் விடுபட்டு விடலாம் மேலும் பிறவா வரத்தை எளிதில் அடையலாம். சாய்பாபா நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைத்து விடுவார். நாம் பசியாறினால் இந்த உலக விஷயத்தில் நாட்டம் கொள்ளாமல் பற்று வைக்காமல் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக உணர்ந்தால் நாம் பிறவா வரத்தை அடையலாம் அதற்காகத்தான் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறார் இதை உணராமல் நாம் திரும்பத் திரும்ப தவறுகள் செய்து மீண்டும் பிறக்கிறோம். மேலும் சாய்பாபாவை வணங்குவதற்கும் நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம். எல்லோருக்கும் சத்குருவின் அருள் கிடைக்காது அப்படி கிடைத்துவிட்டால் நமக்குள் சுய விழிப்புணர்வு அடையப் போகிறோம் என்றும் பொருள் அவர்மேல் முழு நம்பிக்கையும் பொறுமையும் கொண்டால் பிறப்பு இறப்பு சூழல்களிலிருந்து நாம் எளிதில் கடந்துவிடலாம் நமக்கு தேவை ஒன்றும் இருக்காது எனக்கு அந்த ஆன்மீக அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது..
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக