ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏
அகத்திய மாமுனிவர் என்பவர் யார்..?
முக்தி விக்கினத்தை அழிப்பவர் அகத்திய மாமுனிவர்....
கேள்வி : ஶ்ரீசீரடி சாய்பாபாவை பற்றி..?
அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு..!
இறைவனின் கருணையால், மனிதர்களை நல்வழியில் திசை திருப்புவதற்கு அவ்வப்பாெழுது இறைவன் பல்வேறு ஞானிகளைப் படைக்கிறான். சில ஞானிகள் தங்களை அடையாளம் காட்டிக் காெள்கிறார்கள். பல ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக் காெள்ளாமலேயே மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர்தான் இன்னவள் விளம்பிய அன்னவன்(ஶ்ரீசீரடி சாய்பாபா)...
பல்வேறு விதமான இறை நிகழ்வை, தன்னை ஒரு கருவியாக வைத்துக் காெண்டு இறைவன் செய்ய, தன்னுடைய புண்ணிய பலத்தை அதற்கு இறைவன் பயன்படுத்திக் காெண்டார் என்ற மனநிறைவாேடு பல்வேறு மக்களுக்கு நல்லுபதேசங்களையும், கர்மவினை குறித்தும், அந்தந்த சமுதாய சூழலுக்கு ஏற்ப அவன்(ஷீரடி சாய்பாபா) இறைவன் அருளால் எடுத்து இயம்பியிருக்கிறான். இறைவன் விரும்பி பல்வேறு மகான்களை அனுப்புவது உண்டு.சில மகான்கள் தாமாகவே விரும்பி இது பாேன்ற பணிகளை தேர்ந்தெடுப்பதும் உண்டு. இஃதாெப்ப நிலையில் இறைவன் அனுப்பிய மகான்களில் ஒருவரே அவன்(சீரடி சாய்பாபா).
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக