திங்கள், ஏப்ரல் 15, 2024

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷிகளால் உணர்ந்து உரைக்கப்பட்டவையான இதில் ஜகத் என்பது நமக்குள் இருக்கின்ற எண்ண உலகம், உணர்ச்சி உலகம், மன உலகம் ஆகியவையும், வெளி உலகமும் சேர்ந்தது ஆகும். ஜகத் என்றால் உலகம் என்று மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நமக்குள்ளேயும், வெளியேயுமாக விரிந்திருக்கின்ற ஜகத் பற்றி இப்போது தான் தெரிய வருகின்றது இல்லையா...?

கண்களால் நாம் காண்பது மட்டும் உலகம் அல்ல. நமக்குள்ளேயே இருக்கின்ற மேற்குறித்தவையும் உலகங்களே. ஜீவனாகிய நம்மைப் பற்றியும் ஜகத் எனப்படுகின்ற நாம் காணும் உலகத்தையும் ஈசன் என்று குறிப்பிடுகின்ற உண்மை இருப்பைப் பற்றியும் மேலும் எனக்கும் உலகத்திற்கும், எனக்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் ஆராய்ந்து தகுந்த சொற்களால் எடுத்துரைப்பதே வேதாந்தத்தின் நோக்கமாகும். இந்த மூன்றும் ஒன்றே என்ற ஆராய்ச்சியில் தான் குருவும் சிஷ்யனும் சேர்ந்து ஈடுபடுகின்றனர். இந்த ஞானவேள்வியில் பங்குபெற்று ஞான ஆராய்ச்சி செய்கின்ற மாணவனுக்கு ஜிக்ஞாசு என்று பெயர்...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

எந்த ஜீவன் தன் பிறப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தனது ஐம்புலன்களாகிய குதிரைகளை மனமெனும் கடிவாளத்தின் மூலம் இறுக்கிப் பிடித்து அடக்கிப் புத்தியென்ற சாரதியை ஆத்மாவின் ஒளியில் இயங்க வைக்கின்றானோ அல்லது ஆத்மாவாகிய பரம்பொருளிடம் யார் சரணடைகின்றார்களோ அத்தகைய உண்மையான பக்தனுக்கு உதவ அந்தப் பரந்தாமனே, தன் அம்சத்தால் புத்தியாக அவனது இதய பீடமாகிய தோ;த்தட்டில் அமர்கின்றார். அவர் இந்த உடலாகிய வாகனத்தை (தேரை) ஒரு கையில் லகானும், மறு கையில் சாட்டையுமாகக் கொண்டு செலுத்துவார்....

இந்த உண்மையைத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னைச் சரணடைந்து உதவி கேட்ட அர்ச்சுனனுக்குத் தானே தேரோட்டியாக இருந்து பணிபுரிவதாகக் கூறியிருக்கின்றார்...சரணாகதியின் பெருமை புலப்படுகின்றதல்லவா...!இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உன்னிடமுள்ள சிறப்பு அம்சங்கள் எவையோ அவையெல்லாம் நானே..! என்று கிருஷ்ணர் அறிக்கை விட்டபின் , நம்மிடம் தற்பெருமை இருக்குமா..? “நான்” என்னும் அகந்தை இருக்குமா..? தந்தவர் அவர்..! என்ற எண்ணத்துடன் செயல்பட்டால், கர்மா ஏறுமா...?...

வாழ்க்கையில் கர்மாவை அனுபவிப்பதற்காகப் பிரச்னைக்குள் போக வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும், இவற்றையெல்லாம் நீ தான் செய்கிறாய்...! என்ற தெளிவு புத்தியில் ஏற்பட்ட பிறகு, வருவது எது என்றாலும் அவற்றை ஏற்றுச் சரியான விதத்தில் தீர்வு காண முற்படுகின்ற மனப்போக்கு எழ வேண்டும். அப்படி அந்தப் பிரச்னையை ஏற்கின்றபோது “தண்ணீருக்குள் மிகச் சுலபமாக இழுபடுகின்ற அம்மி” போல மிக இலேசாக அது தீர்ந்துவிடுகின்றது. கருவி நான், என்னை இயக்குபவர் அந்தப் பரம்பொருளே..! என்பதை நன்றாகத் திரும்பத் திரும்ப சிந்தித்து மனதில் பதித்துக்கொள்வதோடு, இங்கு எல்லாமே அவன் தான்..! என்னிடம் எதிர்த்து நிற்பதும் நானே..! என்ற உண்மையையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த முயற்சியால் வாழ்க்கை சிறக்கும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய.. .🙏🏻🙏🏻🙏🏻

வெள்ளி, ஏப்ரல் 12, 2024

அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன...!!??

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன...!!??

அக்ஷரம் என்றால் அழியாதது. மாறாததும் அழிவற்றதுமான பிரம்மத்தைப் பற்றிய ஞானமே அக்ஷர பிரம்ம யோகம். இறைவனும் நானும் ஒன்று என்பதை அறிந்து வாழும் ஞானிக்கு அடுத்த பிறவி இல்லை என்ற கிருஷ்ணரின் உறுதிமொழியே இவ்வத்தியாயமாக மலர்ந்திருக்கின்றது.

இந்த உடல், மனம், புத்தியே நான் என நினைக்கின்ற வரை நான் ஷரப் பிரம்மம். அழியக்கூடிய, வரையறைகளுக்கு உட்பட்டவன். இது அறியாமைக்குரிய நிலை. ஆனால் உண்மையில் நான் அழிவற்றதும் மாறாததுமான அக்ஷரப் பிரம்மமே. இந்த உண்மையை நான் அறியவேண்டுமென்றால், நானல்லாதவற்றை, அழியக்கூடிய தன்மை கொண்ட உடல், மனம், புத்தியை விலக்கி நிறுத்தி, அந்த பிரம்மம் தான் இங்கு நானாக இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் அக மாற்றத்தை என்னுள் ஏற்படுத்துவது தான் ஒரே வழி. இறைவனாகிய நான் படைக்கப்பட்ட பாத்திரமாக நடிக்கிறேன். அந்த இறைவனே படைப்பவனாக நடிக்கிறான். ஆனால் இரண்டுமே ஒன்றுதான்...

இந்த உண்மையை அறிவது தான் ஆன்மீகம்... ஆன்மாவை நான் என அறிகின்ற பயிற்சி இது. இந்த ஆன்மீகத்தை அறிந்த ஞானிகள் அதனால் தான் இந்த உலகம் ஒரு நாடகமேடை – நாமெல்லாம் நடிகர்கள்...! என்றார்கள். “இந்த ஞானத்தால் என்னை அறிபவன் என்னைச் சேர்ந்தவனாகின்றான்...!” என்கிறார் கிருஷ்ணர். யார் ‘நான் செய்பவனில்லை, நான் அனுபவிப்பவனுமில்லை,ஆகையால் எனக்குச் செயல்களின் பலனில் அக்கறையில்லை’ என்பதை உண்மையாகக் கருத்தில் கொண்டு வாழ்க்கையைச் செலுத்துகிறானோ அவனுக்கு எந்தவித கர்ம பாதிப்பும் இல்லை. ஏனெனில் கர்மாவால் தான் பிறவி ஏற்படுகிறது. இந்தத் தெளிவு ஞானத்தால் ஏற்பட வேண்டும். வெறும் விதண்டாவாதப் போக்கு கூடாது. “எவன் ஞான உபதேசம் பெற்று ஞானத்தை அடைகிறானோ அவன் சம்சார சுழற்சிச் சக்கரத்திலிருந்து விடுபடுகின்றான்” என்று கீதை அழுத்தந் திருத்தமாகக் கூறுகின்றது. கர்ம பாதிப்பு இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன் பிரம்மத்தில் கலந்து, வாழ்கின்றபோதே ஜீவன் முக்தன் ஆகிவிடுகின்றான்...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஒரு மனிதனின் வளர்ச்சி அவன் தனக்கு வருபவற்றை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்து அமைகின்றது. சாதாரண வாழ்க்கை முறையில், வருகின்ற பலனை ஏற்றுக்கொள்வதில் ஒருவரது விருப்பும் வெறுப்பும் கலக்கின்றன. விருப்பு வெறுப்பு இல்லாவிடில் நமக்கு வருவதை அப்படியே ஏற்றுச் செயல்படும்போது சமநிலை கெடுவதில்லை. ஏனெனில், மனச்சமநிலை இருந்தால் தான் பக்தி செலுத்த முடியும். அறியாமையால் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இறைவனை வணங்குவது உண்மையான பக்தியல்ல. எனக்குத் தரப்பட்டவையெல்லாம் என்னுடையவை என நாம் நினைக்கிறோம். இது என்னுடையது என்ற எண்ணம் நமக்குள் இருக்கின்றவரை அகங்காரம் அகல்வதில்லை. இது இறைவன் தந்தது என்று பிரசாதமாக ஏற்பதும், எல்லாம் இறைவனுடையது என்று நினைத்து வாழ்வதும் சிறந்தது. அந்த நிலையில் நம்மில் பெருகுகின்ற அன்பும், கருணையும் தான் உண்மையான பக்தியாகும்.

பக்தி என்பது கனிந்த அன்பு. அகங்காரம், மமகாரம் (நான் – என்னுடையது) என்ற இரண்டும் இருக்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது. இவை இரண்டும் இருக்கும் வரை வீண் கோப தாபங்கள், மனக்கசப்பு, பிரச்னை என எல்லாமே இருக்கும். உறவின் இரண்டு பக்கங்களிலுமே இவை இருப்பதால் மனச்சமநிலை கெட்டுப்போகிறது. வாழ்க்கையில் வரும் பிரச்னைகள், மன முரண்பாடுகள் ஆகியவை மனச் சமநிலையைக் குலைத்து விடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் பக்தி செய்ய இயலாது. எதிர்பார்ப்பும், ஏக்கமும், ஆசையும் இருந்தால் பக்தி செய்ய முடியாது. பசி இருந்தாலும் பக்தி பண்ணமுடியாது...

அர்த்தமற்ற சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் உண்மையான பக்தி என்று சொல்ல முடியாது இறைவா..! என்று நினைக்கும்போதே இந்த உள்ளம் கரைந்து உருக வேண்டும். அவன் கருணையை உணர்ந்து கண்கள் பெருக்கெடுக்க வேண்டும். ஒருவர் எந்த தெய்வத்தை வழிபடுகிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பக்தியுடனும் உள்ளன்புடனும் பகவானிடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொள்கிறார் என்பதுதான் முக்கியம்.....

நானும் இறைவனும் ஒன்று என்பதை அறிந்து அவனையே தியானிப்பதே சிறந்த பக்தி. “தைல தாரைபோல் உனது உணர்வு முழுவதையும் ஊடுருவி, உனது ஆத்மாவில் சென்று கலப்பதே முழுமையான பக்தி” என்கிறார் ஆதி சங்கரர். காதலாகிக் கசிந்து உருகி இறைவனுடன் ஒன்று சேர்ந்து கலக்கின்றபோது உலகத்திற்கே உன்னத நன்மை ஏற்படும். பக்தியின் சிறப்பு இது.....

பக்தியில் அன்பு கலக்க வேண்டும். அன்புதான் உலக மகா சக்தி என்றார் புத்தர். எல்லாம் இருந்தும் நம்மீது ஒருவர் அன்பு செலுத்தவில்லை என்றால் நமக்கு வாழ்க்கையே வெறுக்கும். இறைவன் நம்மீது அன்பு செலுத்துவதனால் தான் நாம் மூச்சு விட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலுள்ள எல்லாமே அன்பு என்னும் பசையினால்தான் ஒட்டப்பட்டிருக்கிறது. இயற்கைச் சக்திகள் அன்பாலேயே இயங்குகின்றன...

ஓம் நமசிவாய..🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

புதன், ஏப்ரல் 10, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!???

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

சனாதன தர்மம் இதைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்திய விதம் தான் இந்துக்கள் யாரை சந்தித்தாலும் கரம் குவித்து அவர்களை வணங்குவது. எல்லாம் தெய்வம் என்று பார்க்கின்ற பக்குவ வெளிப்பாடு இது. யாதும் ஊரே...! யாவரும் கேளிர்...! என்று உலகத்தையே அணைக்கச் செய்தது இந்த உயர்ந்த ஞானத்தால் தான்.

இந்தப் பக்குவம் நமக்குள் வந்துவிட்டால் பிறகு கீதையை ஒவ்வொரு சொல்லாக நுணுக்கி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் ஒன்று. அவ்வளவுதான். பிரச்னையே இருக்காது. எதிரில் இருப்பவரும் நானும் ஒன்று என்று அணைக்கத் தெரிந்தால் தீர்ந்தது. இதைவிட சுலபமான வழி ஏதாவது இருக்கிறதா...? எது தடுக்கிறது என்று பார்த்தால் நமக்கு நாமே தான் தடை. புரிகிறதா...?

கீதையில் கிருஷ்ண உபதேசம் மேலும் இப்படித் தொடர்கிறது. ‘‘என்னிடமிருந்துதான் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்னும் முக்குணங்கள் உருவாகின்றன. நான் அவைகளைக் கடந்து அவைகளுடன் ஒட்டாமல் இருக்கிறேன். ஆனால் உலக மக்கள் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களில் மோகித்து வாழ்கிறார்கள். அதனால் தான் முக்குணங்களைக் கடந்தவனும், அழிவற்றவனுமாகிய என்னை அறிய முடியாமல் போகிறது.”

“என்னுடைய முக்குணங்களாகிய மாயையைக் கடப்பது மிகவும் கடினம். எந்த சாதகர்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு என்னையே புகலாக அடைகிறார்களோ, அவர்கள் என் அருளால் இந்த மாயையைக் கடக்கிறார்கள். மாயையிலிருந்து விடுபட்ட பிறகு என்னை அறிந்துகொள்கிறார்கள்.”

“அசுர குணம் கொண்டவர்களும், மாயையால் மறைக்கப்பட்ட ஞானத்தைக் கொண்டவர்களும், மிகக் கேவலமானதும் பாவமுமான செயல்களைச் செய்பவர்களும் என்னைச் சரணடைவதில்லை.”..

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!!???

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

இறைக்கருணை எவ்வளவு அற்புதமாக நம்மைப்போன்ற அற்பப் பிறவிகளுக்கு, நீ கொஞ்சமாவது என்னை நம்பி என்னிடம் பக்தி கொண்டு, என்மீது அன்பு செலுத்தியிருந்தாயானால் அதன் தொடர்ச்சியான பயன் உனக்கு அடுத்த பிறவியிலும் கிடைக்கும் என்ற சலுகையை வழங்கியுள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்..!வாழ்நாளில் பக்தி செலுத்தி வழிபடத் தவறினாலும், உடலை விட்டு உயிர் பிரிகின்றபோது எத்தகைய எண்ணம் மனிதனின் மனதில் இருக்கின்றதோ, அதற்கேற்ற வாழ்க்கையையே மறுபிறவியில் பெறுகின்றானாதலால், மரணிக்கும் தருணத்தில் கடவுளை தியானித்திருப்பது அவசியம். (மீண்டும் வாசிக்கவும்).

ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்கின்ற காரியமா..? உலகத்திலுள்ள அத்தனை ஆசைகளும் ஏக்கங்களாக அப்போது தானே மனதில் முண்டியடிக்கின்றன...! அவனுக்குக் கல்யாணம் நடக்கவில்லையே, இவளுக்குக் குழந்தை பிறக்கவில்லையே, இன்னும் சொத்து சேர்க்க வழியில்லாமல் நான் இப்படி சாகக் கிடக்கிறேனே என்றெல்லாம் கன்னா பின்னாவென்று ஏதேதோ விதத்தில் மனம் அலை பாய்ந்து அல்லல்படுமே அல்லாமல் கிருஷ்ணா! ராமா..! என்று ஜெபிக்க முற்படுமா...? ஓம் நமசிவாய என்று தான் சொல்லுமா...?

கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். அவரது அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மருமகள் அறைக்குள் வந்து அந்த விளக்கைத் தூண்டி விட்டு சிறிது எண்ணெயை விளக்கில் ஊற்றுகிறாள். கிழவர் சத்தம் போடுகிறார். போதும்! போதும்! ரொம்ப ஊற்றாதே...! எண்ணெய் சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறது! என்று. எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கவலை...?

இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் இப்படிப் பாடுகிறார்.

“குழந்தைக்கோ நாட்டம் பல விளையாட்டம்,

யுவனுக்கோ நாட்டம் யுவதியின் தேட்டம்

கிழவனுக்கோ பல மனக்கவலோட்டம்

பரம்பொருள் (மீது) இனி யார்க்குமில்லை நாட்டம்” என்று...

நாம் வாழ்ந்திருக்கும்போதே, மனதைக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினால் தான், நமது மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலை பெறும். இந்த வாழ்க்கையைப் பற்றின்றி வாழ்ந்துகொண்டு, பக்தியால் தன்னுடனேயே ஒன்றிய நிலையில் வாழப் பழகினால் தான், மனதால் கடவுளைத் தியானம் செய்து கொண்டே தமது கர்மங்களைச் செய்தால்தான் அந்தப் பழக்கத்தின் காரணமாகவாவது இறக்கும் தருவாயில் இறைநாமம் நம்மில் ஒலிக்கும்...

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻

திருச்சிற்றம்பலம்...தில்லையம்பலம்..🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

வியாழன், ஏப்ரல் 04, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

சிவம் என்கிற பிரபஞ்ச பேராற்றல் என்பது அண்டசராசரத்தை இயக்கும் அற்புத ஆற்றல்.  ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும்.நீர்,நிலம்,நெருப்பு,காற்று, ஆகாயம், சூரியன்,சந்திரன் மற்றும் மலை போன்ற சொற்கள் எங்ஙனம் உலகத்தார் அனைவரும் பொதுவார்த்தையாக எடுத்துக்கொள்வது போல ‘சிவம்’ என்ற சொல்லும் பொது வார்த்தை அதுவும் மெய் வார்த்தை...! சிவம் என்றால் என்ன..? தமிழ் அகராதி படி, .நன்மை, முடிவான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது .இங்ஙனம் பொதுப் (இயற்கையாய் உள்ள) பொருளை தரும் ‘சிவம்’ இன்று ஒரு குறிப்பிட்ட சமய சொல்லாக பார்க்கப் படுகிறது. சிவன், சிவலிங்கம், பரமசிவம், சிவபிரான் இவை உலக மாபெரும் சமயமான சைவசமய கடவுளரை குறிக்கும். சிவபுராணம்,சிவலோகம், சிவசாதனம்,..சிவாகமம்,சிவராத்திரி இவை அச்சமயம் சார்ந்தவை. ஆனால் ‘சிவம்’ என்றால்.. எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஒளி எனப்படும். ஆக,சிவம் என்பது..இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருள் ஆகும்.

சிவம் என்றால் என்ன..?

சிவம் என்னும் சொல்லுக்கு மங்களம் என்று பொருள்..!எங்கும் நன்மை…எதிலும் நன்மை உள்ளது…என்பதையே…எங்கும் சிவம்…எதிலும் சிவம்…என்கிறார்கள்..!நன்மை உண்டாகட்டும் என…சிவ சிவா என அழைக்கிறார்கள்.சிவம் என்பதில் …சி-சிகாரம் + வ-வகாரம் + ம்-மகாரம்)இதில் சிகாரம் என்றால் - அறிவு, வகாரம் என்றால் - மனது, மகாரம் என்றால்- ஆற்றல் (மாயை) என பொருள்படும்...அறிவை கொண்டு மனதில் உள்ள மாயையை விலக்குவதையே சிவமயமாதல் என்கிறார்கள்..!பக்தியின் மைய கருத்து…கடவுளை அடைவதில்லை..!மனிதனாய் வாழும் காலத்தில் உயர்வு, தாழ்வு, இச்சை என மனதின் அனைத்து மாயையை நீக்கி வாழ்வதேயாகும்…!சிவனும் சக்தியும் இணைந்ததே சிவம் ஆகும்...

சிவன்(சீவன்,ஜீவன்,உயிர்+சக்தி(ஆற்றல்)=சிவம்ஆற்றலை ஆக்கவோ,அழிக்கவோ முடியாது.தொடக்கமும் முடிவும் இல்லாதது....ஆற்றல் உள்ள யாவும் இயங்கி கொண்டிருப்பது.இயங்கும் அனைத்தும் உயிர் பெற்றுள்ளது...உயிர் எனும் இயக்கம் பெற்ற அனைத்தும் மற்றொரு  ஆற்றலை அதாவது தன்னுடைய ஆற்றலினால் பிறவற்றை நகர்த்தவும்,உருவாக்கவும் மூலம் ஆகும்...இதன் உட்பொருள் தான் உயிருள்ள அனைத்தும் சிவம்(உயிர்-ஜீவன்,ஆற்றல் பெற்றது)உயிரற்ற அனைத்தும் சவம்(உயிரற்றது-ஜீவனற்றது,..ஆற்றலற்றது).இவ்விளக்கம் இறை நம்பிக்கை இல்லார்க்கும் பொருந்தும்.உயிர் தரும் ஆண்,..உடல் தரும் பெண் இரண்டும் சமம் என்று உணர்த்தும் சிவசக்தி வழிபாட்டின் சிவம் என்றால் என்ன...? 

தமிழ் அகராதி படி...நன்மை, முடிவான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது...சிவம்- பெயர்ச்சொல்லா..? இல்லை பண்புப் பெயரா...?பித்த உடம்பு என்றால் என்ன...? பித்தம் என்றால் என்ன?

சுயம்பு லிங்கம் என்பது என்ன...? தானாக லிங்கம் தோன்றும் என்பது உண்மையா...? இதனை நீங்கள் பார்த்துள்ளீர்களா...?

உடலே நீ பிறந்தாய் பஞ்சபூதங்களால் நீ இறந்தாய் பஞ்ச பூதங்களால் . உடல் எங்கே அங்கே மண்ணில். மனம் எங்கே இங்கே பிராணனில். புத்தி எங்கே அங்கே அலைகளாய் போய்விட்டது ஆனால் ஜீவன் மட்டும் சிவனாக சிவன் ஜீவனாக பிறப்பெடுக்கும் அன்பே சிவம்

அன்பே சிவம்…

இவ்வுலகத்தில் இறைவன் உண்டு. என்று சாதிப்போர்களும் உள்ளனர். இல்லை என்று சாதிப்பவர்களும் உள்ளனர். கடவுளை நம்பினோர் கைவிடப்படோர். என்பது ஆன்றோர் வாக்கு. வாக்காலும் மிக்க மனத்தாலும் அறிதற்கரிய அப்பரம்பொருளை உணரும் சிறந்த மார்கத்தை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அன்பே சிவம் என்பது அவர்கள் கூரிய அருள்வாக்கு. இதனையே திருமூலர் தமது திருமந்திரத்தில்

அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார்

அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார்

அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...என்றார்.

அன்பும் தெய்வமும் இரண்டு என்று கூறுவது அறியாமை. அன்புதான் தெய்வம் என்பதனை ஒருவரும் அறிந்திலர். அவ்வாற ஒன்றும் இல்லாாதது.அதாவது,தொடக்கமும் முடிவும் இல்லாதது....எ.கா.பிரபஞ்சம்...அன்பே சிவம் என திருமூலர் கூறியது அன்பு தான் சிவம் என்னும் பொருளா...? அல்லது சிவன் தான் அன்பு என்னும் பொருளா...?

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,

அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்.

அவன் ஒருவனே மெய்ப்பொருள்.

அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை.

இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது.

இதனைத் திருமந்திரம் ″ஒன்று அவன்தானே″ என்கிறது.

சிவனும் சக்தியும் ஒன்றென கூறுகிறது வேதங்கள்.

பொருளும் சக்தியும் (ஆற்றல்) ஒன்றென கூறுகிறது அறிவியல்.

இஸ்லாமிய மார்க்கத்தில் பொருள், சக்தி எல்லாம் ஒன்றாக இருந்தன, நானே பிரித்தேன் என்கிறான் இறைவன்...உடலை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே என்கிறார் திருமூலர்.

பொருளிலிருந்து ஆற்றலை உருவாக்கலாம்..ஆற்றலிருந்து பொருளை உருவாக்கலாம்...இது அறிவியல்.


“அவன்தான் ஒன்று” என்கிறது திருக்குரான்.

“ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம்.

“எல்லாம் ஒன்று” என்கிறது அறிவியல்.

ஆற்றல் அழியாது, ஆனால் மாறக்கூடியது,

பொருளும் அழியாது, ஆனால் மாறக்கூடியது,

ஆனால் நினைவுகள் அழியாது, மாறவும் மாறாதது...முடிவாக என்னை பொறுத்தவரையில்

பொருள் (உடல் அல்லது சிவம்)

ஆற்றல் (உயிர் அல்லது சக்தி)

ஆன்மா (நாம் அதாவது நமது நினைவுகள் அதாவது அன்புள்ளம்)...!

ஓம நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் சாயீராம்..🙏🏻🙏🏻

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...?

 

ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...? 

இதைப் புரிந்து கொள்ள முதலில் பொறுமை, பணிவு தேவை. இறைவனின் மகிமையை  ஒரு கேள்வியின் மூலம் புரிந்து கொள்ள முடியுமா..? நம் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றை சில வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா..?ஆயினும் சிறிய முயற்சி எடுப்போம்..! ஒரு உவமை கொண்டு தான் இதை புரிந்து கொள்ள முயலமுடியும்.

கடவுள் என்பதன் ஸ்வபாவம், அதாவது இயல்பு "சுயஒளிர்வு". இதை வடமொழியில் ஸ்வயம்பிரகாசம் (Self Illuminated). வள்ளலார் இதை அருட்பெரும்ஜோதி என்று சொன்னார். சுய ஒளிர்வு என்றால், அது எப்பொழுதும் ஒளிமயமானதாக இருக்கிறது, தோன்றவும் இல்லை, அழிவதும் இல்லை. இதை தான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று சொல்வார்கள். இன்னொரு இயல்பு, தன்னை வெளிப்படுத்துதல். அது இறைவனின் விருப்பம் மற்றும் ஆற்றல். அவன் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது. இந்த ஆற்றல் தான் அதன் சக்தி...

இதையே மனித அறிவினால் புரிந்து கொள்ள உவமையாக சும்மா இருக்கும் பொழுது சிவனாகவும், வெளிப்பட செய்யும் பொழுது சக்தியாகவும் கருதப்படுகிறது. இறைவனுக்கு பால்வகை (gender) கிடையாது. நம் அறிவுக்கு எட்டாத ஒன்றை விவரிக்கும் பொழுது ஒரு அளவுகோல் தேவை படுகிறது. அதனால் இறைவனுக்கு பெண் பால் கொடுத்து சக்தி என்றும், ஆண் பால் கொடுத்து சிவன் என்றும் விவரிக்கப்படுகிறது.

உங்கள் கேள்வியின் படி அந்த விசை தான் சக்தி, பராசக்தி, ஆதி சக்தி என்று நம் விருப்பத்திற்கு ஏற்ப அழைக்க படுகிறது. அந்த விசை ஒடுங்கி, அசைவற்று இருக்கும் பொழுது, சிவம், அச்சலம் என்று அழைக்கபடுகிறது. அதனால் தான் திருவண்ணாமலையில் இறைவனை அருணாச்சலம் என்று அழைப்பர். அருணா என்றால் ஒளி, அது மௌனமாக, அசைவற்று இருக்கும் பொழுது அச்சலம். (ஹிமாச்சலம் என்றால் அசையாது இருக்கும் பனிமலை என்று பொருள்). அதனால் தான் சிவனுக்கு மௌனகுரு என்று பெயர். இதையே ரமண மகரிஷி, அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் "சும்மா இரு" என்று சொன்னார்கள். இயேசுநாதரின் "Be Still and know that I am God" என்ற வாக்கியமும் இதையே குறிக்கிறது...

ஆற்றல் வெளிப்படும் பொழுது இப்பிரபஞ்சம் உருவாகிறது. ஆற்றல் ஒடுங்கும் பொழுது பிரபஞ்சம் மறைகிறது....ஆற்றல் குண கலவைகளால் (சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்கள்), வேறு வேறு உருவம் பெறுகிறது. ஆணாக, பெண்ணாக, பல உடல்களில், உருவங்களில் இந்த ஆற்றல் நிகழும். எல்லா குணங்களும் ஒடுங்கியபின் சிவம் நிலைக்கிறது. இந்த ஆற்றல் நிகழும் பொழுது மாயையும் சேர்த்து உருவாக்குகிறான் இறைவன். அதனால் நாம் இந்த உடல் என்று நினைத்து அல்லல்படுகிறோம். இந்த மாயையில் சிக்கி, ஆணவ மலம், மாயா மலம் மற்றும் கர்ம மலம் உண்டாகிறது. அதுவே மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வைக்கிறது...

இதில் இருந்து விடுபட வேண்டும் என்று தோன்றும் பொழுது, ஒரு தக்க குரு அமைகிறார். அவர் வழிபடி நடந்தால் மாயையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடைகிறோம். இதையே மோட்சம், நிர்வாணம், சமாதி நிலை, ஆன்ம விடுதலை, வீடுபெறுதல் என்று பலவாறு அழைக்கபடுகிறது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

செவ்வாய், மார்ச் 19, 2024

நம்பினால் நம்புங்கள்..வணங்கினால் வணங்குங்கள்...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

நம்பினால் நம்புங்கள்..வணங்கினால் வணங்குங்கள்...!

உயிர்களுக்கு ஆதாரனமானது சிவம் என்கிற ஆற்றல்..சொல்லால் அளவிடமுடியாத அளவில் சிறியவையான இந்த ஆற்றல் உயிர்களின் தனித் தன்மையை நிர்ணயிப்பது எப்படி...! இதை இயக்கும் அந்த வல்லவன் யார்...! உலக உயிர்களின் அனைத்து ஜீன்களையும் ஒன்று சேர்த்தால் ஓர் கட்டைவிரல் அளவிற்குத்தான் இருக்கும் என்கிறது விஞ்ஞானம். இவ்வளவு சிறிய ஜீன்களும் அதன் துணைகளான குரோமஸோம் செல்களும் ஒவ்வோர் உயிர் மூலத்துணுக்கில் இருந்து கொண்டு அந்தந்த உயிர்களின் அதாவது அனைத்து மனித, விலங்கு, பறவை, தாவரங்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதன் யார்....

இயற்கையில் சிக்கனத்தை பார்க்க முடியுமா...! முடியும். நிர்வாக சிக்கனம் காணமுடியும். அவற்றை உருவாக்கியவன் யார்...!வேலியாக ஒரு வகைக் கள்ளிச் செடியை நட்டார்கள். இந்த கள்ளியை அழிக்கக்கூடிய பூச்சி வகைகளே அவ்விடத்தில் இல்லாததால் கள்ளி வளர்ந்து பரவி விட்டது. மக்கள் அப்பகுதியில் வாழமுடியா நிலைக்கு கள்ளி வளர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் முயன்று அந்தக் கள்ளிச் செடிக்கு ஒரு மாற்றாக ஒரு பூச்சியைக் கண்டு பிடித்தனர். நாளடைவில் அந்தக் கள்ளியினம் அழிந்தது, கள்ளி இல்லாததால் அந்த பூச்சினமும் அழிந்தது. இது போன்ற தடைகளும் அதை சமன் செய்ய மாற்றுகளும் புவி எங்கும் நிறைந்துள்ளன.

அதி வேகமாக இனவிருத்தி செய்யும் பூச்சிகள் பெரிய அளவிற்கு வளர்வதில்லை. அவற்றிற்கு மனிதனைப் போல சுவாசப்பைகள் கிடையாது. குழாய் வழியே மூச்சை விடும். அவை வளரும் அளவிற்கு குழாய்கள் வளர்வதில்லை. இந்த வரம்பு அவற்றின் பெரிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது. இல்லாவிடின் யானையைப் போல் ஒரு குளவி வளர்ந்தால் என்ன ஆவது! இந்த வரைமுறையை நிர்ணயித்த வலியவன் யார்...! இதுதான் சிவம்...

மனிதனுக்குத்தான் கற்பனை வளம் உண்டு. இந்த கற்பனைச் சக்தியால் மனித உயிர்கள் கண்ணுக்குப் புலனாகாத பொருள்கள் அனைத்திற்கும்  சான்று தேடி அந்த எல்லையற்ற காட்சியை காண்கின்றன. அதே சக்தி பக்குவமடைய அடைய பிரபஞ்சப் பொருள்கள் எல்லாவற்றிலும் ஓர் திட்டத்தையும் நோக்கத்தையும் காண்கின்றான். அப்போது ஓர் ஆன்மீக உண்மை அவனுக்கு புலப்படுகின்றது.

உயிர்கள் உண்ட உணவு எப்படி ஜீரணமாகின்றது. உணவிலிருந்து சக்திகள் எப்படி உடல் இயங்க உடலுக்கு கிடைக்கின்றது. மழை காற்று வெய்யில் குளிர் இதெல்லாம் எப்படி நடக்கின்றது என்பது கண்ணுக்குத் தெரியா உண்மைகள் என்றாலும் கண்ணுக்குத் தெரிந்த உடலே அந்த உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நடந்த .நடக்கின்ற நடக்கப்போகின்ற எல்லாவற்றையும் கண்காணித்து அவ்வப்போது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயக்கங்களைச் செய்யும் அந்த அற்புத சக்தி எது...! அது தான் சிவம்...

மாகா சூட்சுமமான தந்திரமும் சிருஷ்டித் திறன் வாய்ந்த பரம் ஞானம் பெற்ற ஒன்றிலிருந்தே எல்லாம் தோன்றியிருக்க வேண்டும் இந்த அதிசய சிருஷ்டி சித்தாந்தத்தை வேறு எந்த விதமாக நினைக்க முடியும்.! அந்த சித்தாந்தபதி யார்...!பிரபஞ்சத்தை ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை, சித்தாந்தபதியை, அவற்றிற்கு வரைமுறையை நிர்ணயித்த வலியவனை, சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளியை. உயிர்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதனை, நிர்வாக சிக்கனத்தை உருவாக்கியவனை, உயிர்களுக்கு ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவனை, சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தியான அவனை வணங்கி வழிபடுவதில் என்ன தவறு...!

காரணங்களைச் சொல்லிவிட்டோம்...! நம்புங்கள்...! வழிபடுங்கள் இறைவனை...!

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஞாயிறு, மார்ச் 17, 2024

என்னிடம் வந்து இணைந்த பலருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் எழுவது இயற்கை...!

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

என்னிடம் வந்து இணைந்த பலருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் எழுவது இயற்கை. ஆனால் நான் அப்படி எவரையும் அணுகுவது இல்லை. எவரிடம் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை அவர்களிடம் இருந்து அடைய முயலுகின்றேன். என்னைப் பொறுத்தவரை நான் அனைவரிடமும் காட்டும் அன்பின் அளவு ஒன்றுதான். சில நேரங்களில் செல்லும் பாதை தவறானது என்றாலும் கூட தான் செய்வதே சரி என விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணடிப்பவர்களிடம் நான் கோபம் அடைவது உண்மையே. ஆனால் அப்படிப்பட்ட கோபம் எப்பொழுதாவது மட்டுமே எனக்கு வரும். ஆனால் கெடுதல் செய்பவனைக் கண்டு நான் கோபம் அடையாமல் அவர்களைத் திருத்தவே முயலுகின்றேன்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

நான் உன்னை ஏமாற்றமாட்டேன்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நான் உன்னை ஏமாற்றமாட்டேன்...!

ஒ,... வலுவற்ற பேதையே, பயமென்னும் திரையால் கடவுளின் திருமுகத்தை உன்னிடமிருந்து மூடி மறைக்காதே..!கெஞ்சிக் குறுகும் பலவீனத்தோடு அவரை அணுகாதே..அவரது திருமுகத்தை நன்கு பார்...!அங்கு நீ ஒரு அரசன் அல்லதுநீ திபதியின் பயமூட்டும் பார்வையை காணமாட்டாய்..உன் இனிய அன்பனின்பு ன்னகையை மட்டுமே காண்பாய்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

சிவமயம் சிவாய நம ...!

 



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

சிவமயம் சிவாய நம 

முனிவர்.....

 ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர்...அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து, ”மரத்தடியில் பார்த்தீர்களா...?” என்றாள்...''பார்த்தேன்” என்றார் பரமன்..''பார்த்த பிறகு சும்மா எப்படி போவது...? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை...'அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை. வேண்டாம் வா! நம் வழியே போகலாம்...”ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

''வணக்கம் முனிவரே..!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்...முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே..! எம்பெருமானும் பெருமாட்டியுமா...! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர்...தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார்...அவ்வளவு தான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கி விட்டார்...சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

'மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்...அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார்...“முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம்” என்றார்...முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்...அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்..இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்..''ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்..?” என்று அம்மை பணிவாய்க் கேட்டார்...''அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்..?” என்று கேட்டார் முனிவர்...முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு, மகிழ்ச்சியாய் சென்றனர்...

'இருள்நீங்க இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு....

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻


சனி, மார்ச் 16, 2024

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர்.. வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில்இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை....வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்றுஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம்....

ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம்...சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும்  ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறுஉருவாகப் போவதில்லை.கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது.அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும்,

தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்தசக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழியஅதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது..?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

வியாழன், மார்ச் 14, 2024

உங்களுக்குத் தெரியுமா....?

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

உங்களுக்குத் தெரியுமா....? 

போன தலைமுறை வரையிலுமே கூட நம் பெரியவர்கள், அதாவது ஆன்மீக நெறிமுறையில் பக்திபூர்வமாகப் பற்றற்று வாழ்ந்தவர்கள், தங்கள் இறப்பைப்பற்றி முன்னரே அறிந்து வைத்திருந்தனர் என்பது! மகாபாரதத்தில் துரோணர், பீஷ்மர் போன்ற சான்றோர்களுக்குத் தங்கள் மரணம், அது நிகழும் காலம், நிகழும் விதம் போன்ற எல்லாமே தெரிந்திருந்தது.

ஏன், பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் கூட இத்தகைய தீர்க்கதரிசிகள் நம் சமூகத்தில் வாழ்ந்திருந்தார்கள். எனவே நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், வேதங்கள் சொல்லியபடி இவ்வுலகத்திலிருந்து நீங்கிச் செல்லும் வழிகள் இரண்டு. ஒன்று ஒளியின் வழி. மற்றது இருளில் செல்வது. ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை. இருளில் நீங்குபவன் மீண்டும் வருகிறான். ஆனால் இரண்டுமே நம் விருப்பப்படி அமைவதில்லை என்பதும் உண்மை.

இப்படி இந்த இரண்டு மார்க்கங்களைப் பற்றிய விபரங்களைக் குருவின் வாயிலாக நன்கு அறிந்துகொள்ளும் ஆன்ம சாதகர்கள் பிறகு இவ்வுலக வாழ்வில் மயங்கி ஈடுபடுவதில்லை. உலகியல் வாழ்வில் வாழ்கின்றபோதே எவ்விதப் பற்று, வெறுப்பு, ஒட்டுறவு என்று எதுவுமில்லாத நிலையில் இறைபக்தியிலேயே மனதைச் செலுத்தித் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி ஆன்ம சாதனையில் ஈடுபட்டு இறைவனிடம் பக்தி செலுத்தி, செய்கின்ற செயல் அனைத்தையும் சேவையாகச் செய்பவர்களின் வாழ்வு தவம், யாகங்கள், தானங்கள், தத்துவங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் மேம்பட்ட உயர் உணர்வு நிலையில் அமைகின்றது. இறுதியில் அவர்கள் இருள் பாதையை விலக்கி, ஒளிப்பாதையில் குரு கிருபையாலும், இறையருளாலும் பயணித்து ஆதி நிலையாகிய பரமாத்மாவை அடைகின்றனர்...

ஓம் ஸ்ரீ சாயீராம்.. 🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

புதன், மார்ச் 13, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...???!!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...???!!!

இறக்கும் தருவாயில் பிராணனைப் புருவ மத்தியில் நிறுத்தி வைத்து ஒளிமயமான என்னை தியானிப்பவன் என்னையே வந்தடைகின்றான். எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி உயிரைத் தலையின் உச்சியில் நிலை நிறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று, ஓம் என்ற ஒற்றைப் பிரம்ம எழுத்தை ஜபித்துக் கொண்டு என்னையே துதித்துக் கொண்டிருக்கும் நிலையில் உடலைத் துறப்பவன், பரமகதி பெறுகின்றான்”“என்னைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் தன் சித்தத்தைச் செலுத்தாத பக்தன் நித்திய நிரந்தரமான என்னையே சிந்தித்து வாழ்வதால், என்னிடமே எப்போதும் ஈடுபட்டிருக்கின்ற இந்த யோகிக்கு நான் எளிதில் கிட்டுகிறேன்.”

“இப்படி எந்த மகாத்மாக்கள் என்னிடம் பேரன்பு கொண்டு என்னையே புகலாகக் கொண்டு என்னோடு இணைகிறார்களோ அவர்களுக்கு அழிவுள்ளதும், துயரங்களுக்கு இருப்பிடமானதுமான மறுபிறவி ஏற்படுவதில்லை...!” என்றெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் அழியாத பிரம்ம தத்துவத்தின் சிறப்பையும், அதைத் தானாக அறிவதனால் உண்டாகும் நன்மையையும் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார். இந்நிலையில் அர்ச்சுனன் அத்தகைய யோகத்தைச் சாராத ஜீவனின் நிலை என்ன...? என்று வினவுகின்றான்.

“என்னில் சித்தத்தை வைக்காமல் உலக நினைவுகளுடன் ஆசாபாசங்களுடன் உடலை விட்டுப் பிரிகின்ற ஜீவன் என்னை அடையாமல் தங்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப வேறு வேறு உலகங்களை அடைந்து பிறகு மீண்டும் மழை மூலமாக பூமியை அடைந்து பிறக்கின்றன.”ஜீவன் என்னென்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமற் போனதோ அதற்குரிய பிறப்பையே அவை அடைகின்றன. உடலின் மிருக இச்சையைத் தீர்க்கின்ற அந்த வாழ்க்கைக்காகக் கீழ் மட்ட நிலைப் பிறப்பிற்கே போய்விடும். இப்படிப் புலனின்பங்களில் ஆசை இருக்கும் மட்டும் பிறப்பு இருந்துதான் தீரும். மாறி மாறி, மாறி மாறிப் பிறந்து இறக்கத் தான் வேண்டும்.”

இந்த உண்மையை அறிந்து, ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தால் நான் அவன் என்பதையே தொடர்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் நமக்கு இயல்பாகவே அந்த இறை சிந்தனை ஏற்பட்டு, அவனையே அடைந்து விடுவோம். இதை அறிந்தவராய்த்தான் நம் முன்னோர், நான் மறக்கினும் என் நா மறக்காத நாமம் நமசிவாயவே...! என்று சொல்லியிருக்கின்றனர். மூச்சுக் காற்றின் ஓட்டத்தையே ஸோஹம்...! என்ற ஒலியாகக் கேட்கப் பழகி நான் அவன்...! என்ற உணர்வைத் தமக்குள் உருவேற்றியிருக்கின்றனர். இவ்வாறு மிகப்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்...

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

செவ்வாய், மார்ச் 12, 2024

பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இயற்கையின் எட்டு அம்சங்களும் நமக்குள் இருக்கும் சத்தியத்தை மறைக்கின்றன.



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

 பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இயற்கையின் எட்டு அம்சங்களும் நமக்குள் இருக்கும் சத்தியத்தை மறைக்கின்றன. கிருஷ்ணர் சொல்கிறார், “இவற்றிற்குள்ளே, இவற்றிற்கப்பாலாய் நான் மூலமாய் இ ஶ்ரீ ருக்கின்றேன். எனக்கு இரு வகை சொரூபங்கள் உள்ளன. உயிருள்ளதாயும், உயிரற்ற ஜடப்பொருளாகவும் இருப்பது நானே! இவ்விரு சொரூபங்களின் சேர்க்கையால் தான் எல்லா உயிரினங்களும் உற்பத்தியாகின்றன” என்று. அதாவது இயற்கைத் தன்மையுடன் கூடியதாய் அமைந்துள்ள இந்த உடலும் பிரபஞ்சமும் ஜடப்பொருள்கள். இவற்றோடு சைதன்யம் சேருகின்றபோது அவை இயங்குகின்றன. சைதன்யம் இவற்றைக் கைவிடுகின்றபோது இயக்கம் நின்று சடப்பொருளாகிவிடுகிறது. கண் இருந்தாலும் பார்க்க முடியாது, கைகள் இருந்தாலும் அசைக்க முடியாது...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது.

 ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

குருவின் பணி...

என்னவன்றால் ஒரு தனிப்பட்ட மனித உயிரின் மனதின் உள்ள மனமாயைகளை அகற்றி, அவ்வுயிரின்  ஆத்ம திருப்திக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும்  பாடுபடுவதே...அவ்வாறு குரு என்பவர் மனதை உழுகின்ற உழவன் போல் மனதை செம்மைப்படுத்தக்கூடிய  முயற்சியை சிஷ்யனுக்காக மேற்க்கொள்கிறார்....இதற்கு இறைவன் என்பவரே தான் படைத்த உயிரின் அக புறத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக அந்தந்த உயிருக்கு எந்த ஊடகம் வாயிலாக அதாவது புறத்தேவைகளுக்கு பல பற்பல மனித உயிர்கள் மூலமாகவும் தானே செயலாற்றுகிறார்...அகத்தேவைகளுக்கு  எவ்வாறு நாம் விரும்பி தேர்ந்தெடுத்த குருவின் மூலம் நாம்  போதிக்க முடியுமோ அவ்வாறாக போதிக்கவே குருமூலமாகவும் மனித உயிரின் ஆன்ம விடுதலைக்காக பாடுபடுகிறார்....தன் சிஷ்யனுக்காக இறைவனிடம் தான் பெற்றதை பகிர்கின்றார்...ஆகவே ஆன்மாவே குரு...குருவே சிவம்...

தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது. அப்படி முயல்பவர்களும் தானாக அறிந்துகொள்ள முடியாது. பிரம்மத்தைப்பற்றி அறிந்த, பிரம்மத்தைத் தான் என்று உணர்ந்துகொண்ட, அந்த பிரம்மத்திலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்ட, அதைப்பற்றி அறிந்தவர்களின் தொடர்பிற்குள்ளே இருப்பவரான தக்க குருவின் மூலமாகவே ஒருவன் இந்த அறிவைப் பெற முடியும்.

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

திங்கள், மார்ச் 11, 2024

ஞான உபதேசம் செய்ய குரு வேண்டும்.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஞான உபதேசம் செய்ய குரு வேண்டும். அவர் சொல்வதைக் கேட்பதற்கு நான் உடலால் அங்கு இருக்க வேண்டும். என் காது எந்தவிதக் குறையுமின்றி நன்றாகச் செயல்பட வேண்டும். மனம் அங்கு இருந்து சொல்வதைக் கவனிக்க வேண்டும். குரு சொல்வதைக் கேட்பதற்குரிய தயார் நிலையில் நான் இருத்தல் மிக மிக அவசியம். அதாவது மனம் தூய்மை பெற்று கேட்பதற்குரிய தகுதியுடன் இருத்தல் வேண்டும். குரு எவ்வளவு விளக்கமாகவும் நுணுக்கமாகவும் வேதாந்தக் கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கினாலும் அதைக் கேட்டுப் புரிந்து அனுபவிக்கின்ற பக்குவ நிலை மாணவருக்கு இருந்தால் தான் அந்த போதனை பயனளிக்கும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻🙏🏻

ஞான அறிவைப் பெற்று என்னை நான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவைக் காண வைத்தால் ஜீவனாகப் பிரிந்து நிற்பது மூலத்துடன் சேர்ந்துவிடும்.



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஞான அறிவைப் பெற்று என்னை நான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவைக் காண வைத்தால் ஜீவனாகப் பிரிந்து நிற்பது மூலத்துடன் சேர்ந்துவிடும். நான், நான் என்று மார்தட்டி, எனக்கும் நிம்மதியின்றி மற்றவருக்கும் நிம்மதியைத் தராமற் செய்த இந்த நான் என்பது இப்போது ஆத்மாவுடன் சேர்ந்துகொள்ளும் வழியைத் தெரிந்துகொண்டுவிட்டது என்று சொல்லலாமா...? வேதாந்தத்தின் துணையுடன் இந்த நானைப் பிரித்தெடுத்து ஆத்மாவுடன் இணைக்கின்ற பரமாத்மாவாகிய  சிவத்துடன் கலக்க வைப்பதே குரு ஆவார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஞாயிறு, மார்ச் 10, 2024

ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும்.



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயேருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மனஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்காது. உதாரணத்திற்கு சுமார் இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல்திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனதுஆற்றலும், அறிவுக் கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்தசெயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா...?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்...மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழவிரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவறவிடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாகநிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல்செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது. அனுபவிக்கின்ற நிலை அது. அனுபவத்தைச் சொல்ல முடியாது. உணரத்தான் முடியும். அப்படி உணர்ந்ததை உணர்த்தவும் சொற்கள் மட்டும் தான் வழி. இது தான் ஞான விஞ்ஞானச் சிறப்பு. உணர்த்தவும் உணரவும் கூடிய யோக வழி இது. அதுவே சொல்கின்றது. அப்படிச் சொல்வதை அதுவே கேட்கின்றது...

நீ முழுமையானவன். நீ பிரம்மம்..! என்று சொல்வது வேதாந்தம். வேதத்தின் முடிவு இதுதான். வேதங்கள் நம்மைப்பற்றித்தான் எடுத்துச் சொல்கின்றன. நம்மைக் கடவுளாக நமக்குத் தெரியப்படுத்துகின்றன. வேதம் நீ, நீ என்று என்னை நேரடியாகச் சுட்டிக் காட்டுவதற்குக் குருவின் சொற்களே பிரமாணமாக அமைகின்றன...

ஒன்றைப்பற்றி அறிவதற்கு அறிபவர், அறியக்கூடிய பொருள், அறிவதற்கு உரிய கருவி ஆகிய மூன்று அம்சங்கள் தேவை. இங்கு குருவின் சொற்களைக் கேட்கின்ற நான், என் காது, கேட்கும் சத்தம் மூன்றும் என்னைப்பற்றி அறிய உதவுபவை. இவை மூன்றும் ஒத்து இருந்தால் தான் இவ்வறிவு ஏற்பட முடியும்...

ஓம் நமசிவாய..🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்.. 🙏🏻🙏🏻

வியாழன், மார்ச் 07, 2024

ஞானம் முழுமையற்றது.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

ஞானம் முழுமையற்றது. பிறர் சொல்வதைக் கேட்டு ரசிக்கின்ற வரை அது வெறும் அறிவாக மட்டும் இருக்கும். நம்மை அந்தப் பரம்பொருளிடம் முழுமையாகச் சமர்ப்பிக்கின்றபோதே அது முழுமையானதாக மாறும். ஞானத்துடன் கூடிய பக்தியான விஞ்ஞானமே முழுமையானது. விஞ்ஞானம் தான் உண்மையைக் கண்டறியக் கூடியது. ஞானம் என்பது அறிவு. விஞ்ஞானம் என்பது அந்த அறிவை உண்மையெனக் கண்டுக் கொள்வது. அதுதான் நம்மை இறைவனாக்கும்.

ஞானம் பெற்றுத் தெளிந்த அறிவுடன் தொடர்ந்து தியானத்தின் மூலம் தன்னை அவனுடன் இணைத்துக் கொள்பவரே ஞானியாகின்றனர். அத்தகைய ஞானியிடம் தான், தான் என்றோ, பிறர் என்றோ, இறைவன் என்றோ பேதம் இருக்காது. அப்படிப்பட்டவரே கிருஷ்ணருக்குப் பிரியமானவர். மாயையின் தலையீட்டால் மதி மயங்கிய மனிதர்கள், மதிமயங்கிய கணங்களில், புலனின்ப வழிகளைச் சேர்ந்து வீணாக சக்தியை இழந்து அழிகிறார்கள். அறிவு தெளிந்த நிலையில் இருந்தாலும் மனதால் தடைப்பட்டு, பழகிய பழக்கங்களால் ஏற்படுகின்ற புத்தி மயக்கத்தால் அறிவை இழந்து, ஞானம் மறந்து, பழைய பழக்க வழக்கங்களையே தொடர்கின்றபோது, ஞானத்தையே அது தடுக்கின்றது. ஞானம் பெற்றும் இப்படிப் பழைய நிலையிலேயே நடந்து கொண்டால், பிறகு பெற்ற ஞானத்தால் பயனில்லை.

யார் ஞானத்தால் தெளிவு பெற்றுத் தன்னில் தானே அன்பைச் செலுத்தித் தன்னையே பரம் பொருளின் ஒரு துளி என்று நினைத்துத் தொடர்ந்து தன்னில் அன்பும் பக்தியும் கொண்டிருக்கிறாரோ, அவரிடம் அந்தப் பரம்பொருள் வசப்படும். அதோடு மட்டுமின்றி எல்லாப் பொருள்களுமே அவரை நோக்கிக் கவரப்படும். இது ஒரு ரகசியமான உண்மை. ‘‘என்னைத் தேடு...! உன்னைத் தேடி எல்லாமே வரும்...!” என்றார் இயேசுநாதர். தியானத்தை நீங்கள் முறையாக முழுமையாக செய்தால், உங்களுக்குத் தேவைப்படுகின்றவை எல்லாம் தாமாகவே உங்களைத் தேடி வரும், மனமும் புத்தியும் தான் இதைத் தடுக்கின்றன என்று எங்கள் குரு எம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்...

எதை நாம் பெற விரும்பினாலும் ஒன்றை இழந்தால் தான் அதைப் பெற முடியும். எதுவென்றாலும் கூட..! உலக விவகாரங்களை அல்லது பழைய பழக்க வழக்கங்களை விட்டால் தான் ஞானம் நிலைத்து நிற்கும். அதையும் பிடித்துக்கொண்டு இதற்கும் முயற்சி செய்தால் முன்னேற்றமில்லை...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஓம் நமசிவாய..🙏🙏

தில்லையம்பலம்...திருச்சிற்றம்பலம்..🙏🙏

சனி, பிப்ரவரி 24, 2024

மரப்பலகை - பாபாவின் படுக்கைக்கானது,


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ... 🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்... 🙏🙏

மரப்பலகையில் பாபா உறங்குவதில் இருக்கும் சூட்சமம் என்ன....🙏🏻

தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா உறங்கினார்.  பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுத் துண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்.  (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார்.  இதைக்கேட்டுக்கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்க விடுகிறேன்" என்றார்...

பாபா:  மஹல்ஸாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை.

காகா: ...பகத் மஹல்ஸாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன்.

பாபா:  அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்...?  பலகையின் மீது தூங்குவது எளிதல்ல.  தன்னிடத்து பல நல்ல குணங்கள் - பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும்... தனது கண்கள் 'அகல விழித்திருக்கும் நிலையில்' தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும்....நான் தூங்கப்போகும்முன் மஹல்ஸாபதியை என் அருகில் அமரச் சொல்லி எனது நெஞ்சின் மீது கைவைத்துநாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன்.  இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை.  தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்...எனது நெஞ்சில் அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான்...தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்க முடியாமல் தடுமாறுபவனும் தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்?மற்ற அநேக முறைகளில் அடியோர்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது." " எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார். பாபா மகல்சாபதியை மிகவும் நேசித்தார் என்பது தெரிகிறது. 

ஒரு சமயம்"மகல்சபாதி வருகிறான். அவன் சாப்பிடவில்லை. அவன் பசி தாங்க மாட்டான். அதனால் அவனுக்கு உணவை எடுத்து வையுங்கள்.” என்றார் சாய்பாபா. அதற்கு சாய்பாபாவின் அருகில் இருந்தவர், “பாபா..மகல்சபாதி அஸ்தினாபுரம் சென்று இருக்கிறார். நாளைதான் வருவார்.” என்றார். அப்போது, “பாபா” என்று வேதனை கலந்த குரல் வந்த திசையை அனைவரும் திரும்பி பார்த்தார்கள். மகல்சபாதி கண்ணீருடன் நின்றிருந்தார். “வா மகல்சபாதி. உனக்காகதான் காத்திருக்கிறேன். அஸ்தினாபுரத்தில் நடந்த தகராறில், உன்னை அழைத்தவர்கள் உன்னையே மறந்துவிட்டார்கள். முதலில் நீ போய் சாப்பிடு. பிறகு பேசலாம்.” என்றார். சாய்பாபா. “பாபா… என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பேச்சை கேளாமல் சென்று, உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் வேதனையும் கஷ்டங்களும் அனுபவித்துவிட்டேன். இனி உங்கள் பேச்சை மீற மாட்டேன்.” என்றார் மகல்சபாதி...காகா சாஹேப் தீஷித் அவரேப்பற்றி- ஆன்மீகத்தின் அதிகாரம் என்று கூறினார். அவர் உலக விஷயங்களுக்கு எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல் இருக்கிறார். இவர் மூலம்   பாபாவின் அடியவர்கள் பலர்    ஆன்மீகத்தை கற்றுக் கொண்டனர். 

பாபா மூலம்   பல தெய்வீக அனுபவங்கள் அவர்  பெற்றார். ஒரு சமயம்  கண்டோபா கோயிலின் வருடாந்திர விழாவுக்கு செல்கையில்,  தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். வரும் வழியில் கிணறுகள் வற்றி விட்டன. பாபாவை மனதில் வேண்டிக் கொண்ட சில நிமிடங்களில் கிணற்றில் தண்ணீர் வந்தது அதை  அவருடன் வந்தவர்கள்  அருந்தி தாகம் தீர்த்தனர்....இன்னொரு சமயம்  கண்டோபா பல்கி யாத்திரை செல்கையில்,  ஒரு இடத்தில் பிளேக் நோய் பரவியிருந்தது. அனைவரும் மேலே எவ்வாறு செல்லமுடியும் திகைத்தனர். மகல்சபாதி பாபாவை வேண்டியபடி இருந்தார். தீடீரென்று தன்அருகில் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பினார். பாபா அங்கே அவருக்கு தரிசனம் தந்தார். சிறிது நேரத்தில் பாபாவை அங்கு காணவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்களிடமிருந்த பயம் போய்விட்டது. பிரயாணத்தில்  தடங்கல் இல்லாமல் சென்றனர்.

திரும்பவும்  சீரடி வந்து பாபாவை பார்க்கையில்"" ,பகத்,விழா நன்றாக நடந்தது இல்லையா..? "என்றார்   பின்பு பாபா தான் அவரது பின்புறம் வந்து நின்றதும், விழாவுக்கு தான் வந்ததையும்  தெரிவித்தவுடன் மகல்சபாதி  பாபாவை வணங்கினார்...தான் எப்போது   போவோம் என்பதை முன்கூட்டியே அறிந்த மகல்சபாதி  தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்க்கு இது பற்றி கூறினார். காகா சாஹேப் தீஷித் வருவதற்காக ஒரு நாள் காத்திருந்தார்.பாபா அவருக்கு 12ம் தேதி செப்டம்பர் 1922ல்  சத்கதி அளித்தார். ..ஒரு சமயம் பாபாவின் கஃனி, தண்டம், பாபாவின் உதி மூன்று வெள்ளி காசுகள்  இவை எல்லாம் பாபாவால்   மகல்சாபதிக்கு கொடுக்கப்பட்டது.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻 

வியாழன், பிப்ரவரி 22, 2024

ரமண மகரிஷி ,சுவாமி சின்மயானந்தா , வேதாத்திரி மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர்,சுவாமி ஷீரடீ சாய்பாபா போன்ற எல்லா சக்தி படைத்த குருக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்துள்ளார்கள்..அவர்கள் சக்தியால்( self -healing) அவர்களை அவர்கலாலே காப்பாற்ற முடியாமல் போனதா...?

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏

ரமண மகரிஷி ,சுவாமி சின்மயானந்தா , வேதாத்திரி மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி சீரடீ சாய்பாபா போன்ற எல்லா சக்தி படைத்த குருக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்துள்ளார்கள்..அவர்கள் சக்தியால்( self -healing) அவர்களை அவர்கலாலே காப்பாற்ற முடியாமல் போனதா...?இந்த உடம்பே ஆத்மாவுக்கு வந்த வியாதி தான்...அந்த உடம்புக்கு நோய் வந்தால் அது வியாதிக்கே வியாதி வந்த மாதிரிதான்....இது ஷீரடீ சாய்பாபா,பகவான் ரமண மகரிஷியின் கூற்று.

ஆன்மீக அனுபவத்தின் உச்சத்தை அடைந்து நிலை பெற்ற மகான்களுக்குத் தான் உடல் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர்களுக்கு உடல் துச்சம். எப்படி பசி, தாகம் இவையெல்லாம் உடலுக்கு வருகின்றனவோ அதைப் போலவவே உடலுக்கு நோயும் நோவும் வரத்தான் செய்யும். பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடம்பு நோகும், தேயும், அழியும். அது இம் மகாத்மாக்களுக்கு ஒரு பொருட்டல்ல.

கண்டிப்பாக மகாத்மாக்கள் தமது சங்கற்பத்தால் தம் உடல் நோயை நீக்கிக்கொள்ள முடியும். எத்தனையோ பக்தர்களின் நோய்களைத் தீர்ப்பவர்களுக்குத் தம் உடலிலுள்ள நோயைக் குணப்படுத்திக்கொள்ள முடியாதா என்ன...!பக்தன், தன் உடல் மீது பற்று வைத்திருக்கிறான்...அவன், தன் உடல் நோயைத் தாங்க முடியாமல் வேதனையில் தவிக்கிறான்...அவன் குடும்பத்தினர் அவனைக் குறித்துத் தீராக் கவலையில் வாடுகின்றனர்.. அதனால் மகாத்மாக்கள் தமது அபார கருணையின் காரணமாக, தம் பக்தர்களின் பிராரப்தங்களைத் தாம் ஏற்றுக்கொண்டு அவர்களை நோயிலிருந்து விடுவிக்கின்றனர். தாம் ஏற்றேடுத்த நோய்களை அனுபவித்துத் தீர்க்கின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரே தாம் புற்று நோயால் அல்லலுறுவது பக்தர்களின் நோய்களை ஏற்றெடுத்ததால் தான் என்று சொல்லியதுண்டு...மகான்களுக்குத் தமது உடம்பைப் பேணி நீண்ட நாள் வாழ்ந்து மேலும் பலருக்கு வழி காட்டலாமே என்கிற கணக்குப் போடும் புத்தியெல்லாம் இல்லை. அவர்கள் இயற்கையின் போக்குக்கு வணங்கி அதன் வழியே நடப்பது நடக்குமாறு விட்டு விடுகிறார்கள்...

மெய்யாய் நோக்குகையில், இந்த உடம்பைச் சுமந்துகொண்டு அவர்கள் சுற்றி வருவது ஒரு விதத்தில் பாரம் தான். பக்தர்கள் மீது உள்ள தம் கருணையின் காரணமாகவே அவர்கள் உடம்பைச் சுமந்துகொண்டு திரிகின்றனர். அதன் காலம் முடியவரும் சமயத்தில், அவர்களுக்கு அதனை நீட்டிக்க யாதொரு ஆர்வமும் இருப்பதில்லை.

"தலையில் பெரும் பாரத்தை சுமந்துகொண்டு நடக்கும் ஒரு கூலியாள் 'எப்போதடா பாரத்தை இறக்கி வைப்போம்' என்று இருப்பானா, இல்லை இன்னும் இன்னும் சுமந்துகொண்டு தூரம் நடக்கலாமே என்று நினைப்பானா...?" என்பார்கள் ரமண மகரிஷியும்..ஷீரடீ சாயீபாபாவும்...!

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🙏

ஓம் நமசிவாய....🙏🙏

செவ்வாய், பிப்ரவரி 20, 2024

நான் அல்லாவிடம்(இறைவனிடம்)சென்று திரும்ப வேண்டும்..

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் அல்லாவிடம்(இறைவனிடம்)சென்று திரும்ப வேண்டும்..

நீ எனது உயிரற்ற உடலை மூன்று நாட்கள் பாதுகாக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்துக் காப்பாற்றப்பட்ட அந்த சடலத்தில் எனது உயிர் திரும்பவும் புகுந்துவிடும்...பக்தர் பகத்  மஹல்சாபதியிடம் சீரடி சாயீபாபா கூறியபோது, அப்படியே செய்வதாக அவரும் வாக்களித்தார்..அவர் வாக்களித்த மறுவினாடியே பாபாவின் உயிர் அவரது உடலைவிட்டு வெளியேறியது. பாபாவின் உயிரற்ற உடல் மட்டும் கிடந்தது. ஊரார் கூடினர். உயிரற்ற உடலாகக் கிடந்த பாபாவின் பிரேத விசாரணைக்காக அதிகாரிகள் வந்துவிட்டனர்.

“பாபா இறந்துவிட்டார். இவரது சடலத்தை உடனே நல்லடக்கம் செய்யுங்கள்” என்று அதிகாரிகள் கூறினர்...“அய்யா அது சாத்தியமில்லை. பாபாவின் உயிர் அல்லாவைச் சந்திக்கச் சென்றிருக்கிறது. மூன்று நாள் கழித்து அவர் மீண்டும் உயிர் பெற்று வருவார். அதுவரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று பக்தர் மஹல்சாபதி கூறினார்...

“இதென்ன சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே. செத்தவராவது பிழைத்து எழுவதாவது… பிணத்தை வைத்துக் கொண்டு நாறடிக்காதீர்கள். நீங்கள் கூறயதுபோல் நடக்கவில்லையென்றால் நாங்கள் நான்காவது நாள் வந்து அடக்கம் செய்துவிடுவோம்” என்று வெறுப்படைந்தவராய் அதிகாரி ஒருவர் கூறிவிட்டுப் போய்விட்டார்..ஆனால், என்ன ஆச்சர்யம். சாயிபாபா கூறியபடி மூன்று நாள் கழித்து தமது உயிரற்ற உடலை எழுப்பித்து உயிருடன் நின்றபோது பக்தர்களும், ஊர் மக்களும் ஆனந்தம் அடைந்தனர்...எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் எண்ணற்ற சித்து விளையாட்டுகளை விளையாடி பக்தர்களின் மனம் கவர்ந்தார் பாபா..சாயீபாபாவிடம் ஒரு சாக்குத் துணி இருந்தது. படுப்பதற்கும், சில நேரங்களில் உட்காருவதற்கும், குளிர் காலத்தில் போர்த்திக் கொள்வதற்கும் அவர் அதனைப் பயன்படுத்தி வந்தார்.

அதனைப்பார்த்து மனம் சங்கடப்பட்ட பக்தர்கள், “பாபா இதென்ன ஒரு சாக்குத் துணியை வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் இனிமேல் சாக்குத் துணியில் படுக்கக் கூடாது. நீங்கள் இனிமேல் இந்த பலகை மீதுதான் படுக்கவேண்டும்” என்று அன்புடன் கேட்டுக் கொண்டு ஐந்தடி  நீளமும், ஓரடி அகலமுள்ள ஒரு பலகையைக் கொண்டு வந்து கொடுத்தனர்.

பாபாவும் பக்தர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டார்களே என்பதற்காகப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்...பாபா அந்த மரப்பலகையை மசூதியின் கூரையிலிருந்து மூன்றடி தாழ்வாகவும், தரையிலிருந்து ஏழடி உயரத்தில் அந்தரத்தில் இருக்குமாறு செய்து நான்கு மூலையிலும் மண் அகல் விளக்குகளையும் எரியவிட்டு அதன் மீது இரவு முழுவதும் படுத்து உறங்குவார். பின்பு விடியற்காலை நான்கு மணிக்குள் கீழே வந்துவிடுவார்...பாபா அந்தரத்தில் படுத்துறங்கும் செய்தி பக்தர்கள் மூலம் ஊர் முழுக்கத் தெரிய ஆரம்பித்ததும் அவர்கள் அந்த அதிசயத்தினைப் பார்க்க வந்து தொல்லை கொடுத்தனர். இதனால் எரிச்சலுற்ற பாபா அந்தப் பலகையை ஹோம குண்டத்திலிட்டு எரித்துவிட்டார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஒருவருடைய மனம் எப்போது அமைதி பெறுகிறதோ,...!???

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🔥ஒருவருடைய மனம் எப்போது அமைதி பெறுகிறதோ, எப்போது அது மதிப்பிடுதல் என்பதை நிறுத்துகிறதோ, அது பெற்ற அறிவில் இருந்து எப்போது தன்னை விடுவித்துக் கொள்கிறதோ, அப்போது அவர் தனது வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்...!🔥

இறைவனுடன் ஒரே ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டால், ஓர் உண்மையான, இயல்பான நேர்மையான அனுபவம் ஏற்பட்டுவிட்டால்,அந்த கணத்தில் அந்த அனுபவத்தில், நாம் எல்லாவற்றையும், அதற்கு மேலும் , அறிந்து கொள்வோம்....னணஅதனால்தான் உனக்குத் தெரிந்தது சிறிதளவே ஆயினும் நீ முழு நேர்மையுடன் அதன்படி வாழ்வது மிகவும் முக்கியமாகும் . அப்பொழுது உன்னால் அனுபவங்கள் பெறவும் , அனுபவங்களின்மூலம் அறிந்துக் கொள்ளவும் முடியும்...இங்கே அறிதல் என்று சொல்வது மனத்தினால் அறிதல் அல்ல ,நீ அந்த உண்மைகளின்படி வாழ்வாய்..அவை உன்னுடைய ஜீவனின், உன்னுடைய உணர்வின் ஒரு பாகமாக ஆகிவிடும்...நீ சிறிதளவே தெரிந்து கொண்டிருந்தபோதிலும் அதன்படி வாழ்வதே மேலும் தெரிந்து கொள்வதற்கு மிகச் சிறந்த வழியாகும் . உண்மையிலே நேர்மையாகச் சிறிதளவு நடைமுறைக்குக் கொண்டுவருவது ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதற்கு மிகச் சக்தி வாய்ந்த சாதனம் ஆகும் ....

உதாரணமாக செய்யக்கூடாது என்று தெரிந்த ஒன்றைச் செய்யாதிருத்தல் . உன்னுடைய ஜீவனில் ஒரு பலவீனத்தை, ஒரு இயலாமையைக் கண்டு கொண்டபின், மீண்டும் அது நிகழுமாறு நீ அனுமதிக்க கூடாது ; நீ எதுவாக வேண்டுமோ அதன் காட்சியைக் கண்டு விட்டப்பின் அதுவாக ஆக வேண்டும் என்பதை நீ ஒரு போதும் மறக்கக்கூடாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

திங்கள், பிப்ரவரி 19, 2024

லட்சுமிபாய் தாமோதர் அண்ணா நினைவலைகள்..


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

லட்சுமிபாய் தாமோதர் அண்ணா நினைவலைகள்...🙏🏻🙏🏻

லட்சுமிபாயின் முன்னோர்கள் கோரே என்னும் சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள். லட்சுமிபாய் அங்குதான் பிறந்தார். அவருடைய குடும்ப பெயர் புரந்தரே என்பதாகும். அவர்கள் விவசாயம் செய்பவர்களாகவும், ஏராளமான பண்ணை நிலங்களின் சொந்தக்காரர்களாகவும் விளங்கினர். லட்சுமி பாய் 1862- ல் பிறந்தார். அவர் குழந்தையாக இருக்கும் போதே தாமோதர் அண்ணாவிற்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்...அது ஓர் குழந்தை திருமணம் ஆகும். லட்சுமியை விட அண்ணாவிற்கு இரண்டு வயதுதான் அதிகம். அண்ணா லட்சுமியை விட மிகுந்த வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வாடே, நெவாலே, சிஞ்சினி, ஆகிய ஊர்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏராளமான நிலபுலன்கள் சொந்தமாக இருந்தன. துரதிர்ஷவசமாக அந்த நிலங்களின் மீது சட்ட சிக்கல்களும், வழக்குகளும் அதிகமாக இருந்தன.

தன் வாழ்நாளில் பெரும்பகுதி, சிஞ்சினி என்னும் சிறு கிராமத்திலேயே வாழ்ந்த அண்ணாவிற்கு எழுத, படிக்க வராது. உண்மையில் அவர் கிராமத்தை விட்டு வெளியில் வந்ததே கிடையாது. மற்ற நகரங்களை பார்த்ததும் கூட கிடையாது. தன் நிலங்களின் மீதுள்ள வழக்குகளின் காரணமாகவும், உறவினர்களோடு கொண்ட இடைவிடாத  சண்டைகளாலும், மனத்தாங்கல்களாலும், நிம்மதி இழந்த அவர் ஒரு சத்புருஷரின் பாதங்களில் சரணடைந்து அமைதியும், ஆறுதலும் அடைய விரும்பினார்.

அவர் அதிகம் படிக்காதவராக இருந்த போதும் அவருக்கு ஒரு நல்ல குணம் இருந்தது. அதாவது, அவர் தன்னுடைய எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் சட்டப்பூர்வமாக எழுதி வைக்கக் கூடியவர்.  அவர் வாடே யிலுள்ள தன் நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை வசூலிக்கும் பொறுப்பை பண்டரிநாத் ஆத்மாராம் என்ற தன் உறவினரிடம் ஒப்படைத்திருந்தார்...

நெவாலே மற்றும் சிஞ்சினியிலிருந்து தன் நிலங்களில் வரும் வருவாயை அவரே நிர்வகித்தார். அவர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த வசதி படைத்தவர்களாக இருந்தபோதும் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை. அந்த சமயத்தில் தம்பதிகள் இருவரும் ஐம்பதுகளில் இருந்ததால் குழந்தை பெறும் நம்பிக்கையையே முற்றிலுமாக இழந்து விட்டிருந்தனர்..

அண்ணா இளைஞராக இருக்கும்போதே அவருடைய தந்தையார் இறந்து விட்டார். அவருக்கு இருபது வயதான போது அவரது தாயாரும் இறந்து போனார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே அவரது தம்பியும் இறந்து போனார். எனவே வாரிசுகளற்ற தன் தம்பியின் மனைவியின் குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பும் அண்ணாவின் மீதே விழுந்தது.

இப்படி அனைத்து பிரச்சனைகளையும் ஒழுங்கு செய்து விட்டு தன் சற்குருவை தேடி புறப்பட அவருக்கு எந்த தடையும் இருக்கவில்லை. இப்போது அவரது முக்கிய கவலையே "மெய்ஞான மடைந்த சற்குருவை எங்கனம் கண்டறிவது"  என்பதேயாகும். ஆனால் சரியான நேரம் வரும் போது சற்குருவே நம்மை தேடி வருவார். என்று சொல்லப்படுகின்றது. இதைப்பற்றி அவர் சிந்தித்த வேளையில், சாய்பாபாவின் தெய்வீகத்தன்மையை பற்றி அவர் கேள்விப்பட்டார்....

காலத்தை வீணாக்காமல் உடனடியாக அண்ணா தன் குடும்பத்துடன் பாபாவின் தரிசனச்துக்காக சீரடிக்குப் புறப்பட்டார். அதன் பின் நடந்ததெல்லாம் சீரடி வரலாற்றில் பதியப்பட்டதாகும். பாபாவின் சாவடிக்கு மேல் உள்ள பெயர் பலகையில் ஸ்ரீ சாய்நாத் பாபாஞ்சி லட்சுமி பாய் தாமோதர் பாப்ரே, சிஞ்சனகர் சாவடி, ஷகே 1850 என்று பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

சீரடியையே தமது இல்லமாக்கிக் கொண்ட அந்த தம்பதியர் பாபாவின் சேவையில் தமது நேரத்தை செலவிட்டனர். அவர் சீரடிக்கு வந்த போது கோண்ட்கர் சந்தில் தங்கியிருந்தார். பிறகு அவர் ஷிண்டே சத்திரத்தில் தங்கத் தொடங்கினார்...அண்ணா பாபாவை விட்டு எங்குமே செல்வது கிடையாது. பாபாதான் முதல்முதலாக அவரை அண்ணா என்று பெயரிட்டு அழைத்தார். பிறகு எல்லோரும் அவரை அண்ணா என்றே அழைக்கத் தொடங்கினர்..அண்ணாவிற்கு பிடித்தமான சேவை, பாபாவின் முதுகையும், வயிற்றையும் அமுக்கி மசாஜ் செய்வதாகும்.

10.7.1919 அன்று அண்ணா, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சீரடி சாய்பாபா சமஸ்தானத்திற்கு தானமாக உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த சொத்துக்கள் மீதான சட்ட சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு கடன்களும் செலுத்தப்பட்ட பிறகு அந்த சொத்துக்களில் இருந்து சமஸ்தானத்திற்கு மாதம் ஐநூறு முதல் எழுநூறு ரூபாய் வரை நிரந்தரமான வருமானம் கிடைக்கத் தொடங்கியது...

அந்தப் பணம், பாபாவின் நைவேத்தியத்திற்கும், சமாதி மந்திரில் அகண்ட விளக்குகளை ஏற்றுவதற்கு எண்ணை வாங்கவும் பயன் படுத்தப்பட்டது. அந்நாட்களில் இத்தொகை ஒரு பெரிய தொகை என்பதால் இச்சேவை மிகப் பெரிதென மதிக்கப்பட்டது...கிராமத்து மனிதராக இருந்தாலும், பாபாவின் மிகப்பெரிய பக்தராக வாழ்ந்த இவர் 15.4.1920 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். அதற்கு ஒரு வருடம் முன்னதாகவே லட்சுமிபாய் உயிர் நீத்தார். சிஞ்சனியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பாபாவிற்கென ஒரு அழகான கோவில் கட்ட வேண்டும்  என்பது அண்ணாவின் மிகப் பெரிய ஆசை...

இன்று அவருடைய விருப்பம் வடிவம் பெற்று சிஞ்சனியில் அவருடைய இடத்திலேயே அழகிய பாபாவின் திருக்கோவிலாக கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. இக்கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சீரடி சாய்பாபா சனஸ்தான் நிதியுதவி செய்திருப்பதை பார்க்கும் போது பாபாவே தன் வாயால் அண்ணா என்று அழைத்த அன்பு பக்தனின் விருப்பத்தை நிறைவு செய்திருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.

எல்லாம் சாயீ..!  எல்லாமே சாயீ..!

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

வெள்ளி, பிப்ரவரி 16, 2024

ஒரு நாள் மத்தியான ஆரத்தி முடிந்து,...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

ஒரு நாள் மத்தியான ஆரத்தி முடிந்து, மக்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபொழுது பாபா என்ன திருவாய் மொழிந்தார் என்பதை இப்பொழுது கேளுங்கள்... 

"நீங்கள் எங்கிருந்தாலும் சரி. என்ன செய்தாலும் சரி. இதை நன்கு ஞாபகம், வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக விவரமாக தெரியும். 

  "நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லோருக்கும் மிக அருகில் இருப்பவன் ஒவ்வொருடைய இதயத்திலும் உறைபவன், எங்கும் செல்பவன். நான் எல்லோருக்கும் சுவாமி...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻

வியாழன், பிப்ரவரி 15, 2024

ஸ்ரீசீரடிசாய் பகவானின் நேரடி சுயவிழிப்புணர்வு அறிவுரை..🙏

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஸ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீன் மறுபிறப்பு இன்னும் அறிவிக்கபடவில்லை..சீரடியில் அவர் இன்னும் உயிருடன் இருப்பதால் உயிருடன் இருக்கும் ஒரு ஆத்மாவுக்கு மறுபிறப்பு என்பது சாத்தியமில்லை ...அதிகாரபூர்வமாக சொல்கிறேன் சாய் க்கு அடுத்த பிறப்பு அறிவிப்பு கண்டிப்பாக இந்த கலியுகத்தில் இல்லை ..இந்த மக்களுக்கு சுயவிழிப்புணர்வு இல்லாமல் ஏமாறுவதே விதி..சாயின் வாக்கு அவரின் சத்சரித்திரம் மட்டுமே....கலியுகத்தில் நிறைய போலி சாய் பகவான்கள் தோன்றுகிறார்கள் அவர்களிடம் இருந்து விலகி தயவுசெய்து மக்கள் சுயவிழிப்புணர்வு கொள்ளவேண்டும்...மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இந்த கலியுகத்தில் சாய்பகவானுக்கு ஷீரடி அவதாரத்தை தவிர வேறு இல்லை...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

சதாசிவ திரயம்பக் வாதவ்கரின் நினைவலைகள்..!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

சதாசிவ திரயம்பக் வாதவ்கரின் நினைவலைகள்..!🙏🏻🙏🏻

சுமார் 28 வருடங்களுக்கு முன்பு அதாவது 1909 ஆம் ஆண்டு நான் தாதாரில் குட்ஸ் கிளார்க்காக இருந்தேன். இன்னுடைய தூரத்து உறவினரான தமாநே என்பவர் தீவிர சாயி பக்தர். அவர் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்கும்படி என்னிடம் கூறினார். ஆகவே 1909 ஆம் ஆண்டு என் நண்பர் தாமநேயுடன் புறப்பட்டு, கோபர்காம்மிலிருந்து சீரடிக்கு போய்வர ஒரு டோங்கா வண்டியை அமர்த்திக் கொண்டோம்.

நாங்கள் பாபாவிடம் செல்லும் முன்பு,  பாபாவிற்கு பிரசாதம் செலுத்துவதற்காக வாங்கிக்கொண்டு வந்திருந்த மாம்பழங்களில் இரண்டை பின்னர் சாப்பிடுவதற்காக வண்டியிலேயே வைத்துவிட்டு, எஞ்சிய மாம்பழங்களையும், கொஞ்சம் புகையிலை, சில செப்பு நாணயங்கள் ஆகியவற்றையும் பாபாவிடம் கொண்டு போய் கொடுத்தோம்...

நாங்கள் கொடுத்ததை பெற்றுக்கொண்ட பாபா, " அந்த இரண்டு மாம்பழங்கள் எங்கே..?, ஏன் அவற்றை அங்கே வைத்துள்ளாய்..? அவற்றையும் இங்கே கொண்டு வா" எனக்கூறினார்....தமது வியத்தகு சக்தியால் பாபா அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்பது எனக்கு நன்கு விளங்கியது. உடனே வண்டிக்குச் சென்று மாம்பழங்களை கொணர்ந்து பாபாவிடம் சமர்பித்தோம்.

உடனே பாபா எல்லா பழங்களையும் துண்டுகளாக்கி குழுமியிருந்த அனைவருக்கும் விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் பாபா புகைபிடித்தார்...நான் வழக்கமாக காலை 9 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிடுவேன். ஆனால் அன்று 11 மணி ஆகிவிட்டதால் எனக்கு பசி. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. இருப்பினும் சங்கோஜத்தினால் என் பசியைப் பற்றி நான் எதுவும் பேசாமல் மசூதியிலேயே இருந்தேன்...

அப்போது பாபாவை காண வந்த பக்தர் ஒருவர் ஒரு பாக்கெட் பேடாக்களை பாபாவிற்கு அளித்தார். வழக்கமாக பாபா எதையும் தொடுவதில்லை. ஆனால் இன்று பாக்கெட் கொடுக்கப்பட்ட உடனேயே, பாபா அதைப் பிரித்து அதில் இருந்து ஒரு பேடாவை எடுத்தார். அது நல்ல பெரிய அளவில் இருந்தது.

அவரிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த என் மடியில் விழும்படி பாபா அந்த பேடாவை வீசினார். அது சரியாக என் மடியில் விழுந்தது. அது வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டிய மதிப்பு வாய்ந்த பிரசாதம் என்றும், இங்கே நான் அப்போதே சாப்பிட வேண்டிய பிரசாதம் இல்லை என்றும் நான் எண்ணினேன்...ஆனால் நான் அதை சாப்பிடாமல் கையிலேயே வைத்துக் கொண்டி ருப்பதை பார்த்த பாபா, " கையில் வைத்துக்கொள்வதற்காக அது உனக்கு கொடுக்கப்படவில்லை" என்றார். உடனே நான் அதை சாப்பிட வேண்டியதாயிற்று. என்னுடைய பசி ஒரளரவிற்கு அடங்கியதான உணர்வு எனக்கு ஏற்பட்டது.


அப்போது மீண்டும் ஒரு பேடாவை எடுத்து என்னிடம் தூக்கிப்போட்டார். இந்த பேடாவையாவது வீட்டிற்கு எடுத்துச செல்ல வேண்டும் என்று என்னியவாறே என் கையில் வைத்துக்கொண்டிருந்தேன். முன்போலவே பாபா," இது கையில் வைத்துக்கொள்ள அல்ல" என மொழிந்தார்.


ஆகவே அதையும் நான் சாப்பிட என் பசி முழுவதும் அடங்கியது. அதன் பிறகு பாபா பேடா எதைய்ம் தூக்கிப்போடவில்லை. வேறு எவருக்கும் கொடுக்கவில்லை. நான் ஒரு வார்த்தை பேசாமலே என்னுடைய பசி அடங்கியதைப் பற்றி பாபா அறிகின்றார் என்பது விளங்கிற்று...பின்னர் ஆரத்தி முடிந்தது.நானும் நண்பனும் சாப்பிடுவது பற்றி சிந்தித்தோம். அதற்குமேல் போய் சமைப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் பாபா எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிகின்றார் அல்லவா..? சீரடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மம்லத்தார், பாலா சாகேப் பாடேயிடம், எங்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைக்கு படி பாபா கூறியிருக்கின்றார்...அதன்படியே அவருடைய இல்லத்தில் எங்களுக்கு மதிய உணவு தயாராக இருந்தது. ஆரத்தி முடிந்ததும் பாடே எங்களிடம் வந்து, எங்களை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று திருப்தியாக உணவளித்தார்....

அந்த பிரமுகரிடம், எங்களை சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பாபா, என்னை சுட்டிக்காட்டி, "இந்த சிறுவன் அவசியமின்றி கவலைப்படுகின்றான். அவனது வேலை ஏற்கனவே நடத்தப்பட்டடு விட்டது" எனக்கூறினார். அந்தப் பிரமுகர் பாபா கூறியதை எங்களிடம் கூறிவிட்டு நாங்கள் சீரடிக்கு வந்ததன் நோக்கம் என்னவென்று கேட்டார்...எனக்கு பாபாவிடம் உபதேசம் பெற வேண்டும் என்ற நோக்கம். பாபா எனக்கு உபதேசம் அளிப்பார் என்று எதிர் பார்க்கின்றேன் என்றேன்....

அன்று பிற்பகல் எங்களது வண்டிக்காரன் ஊருக்கு திரும்பிச் செல்ல நேரம் ஆகிவிட்டது என்று எங்களை அவசரப்படுத்திக் கொன்டிருந்தான். அங்கே வந்த அதே தினத்தில் பாபா திரும்பிப் போக அனுமதிக்க மாட்டார் என்று சிலர் கூறினார்கள்...ஆனால் இரண்டு காரணங்களுக்காக நாங்கள் அன்றே திரும்பிப் போக வேண்டியிருந்தது. முதலாவதாக, அன்றே புறப்படாவிட்டாலும் கூட வண்டிக்காரனுக்கு போகவர பேசிய கூலியை கொடுத்தே ஆக வேண்டும். இரண்டாவது, எனக்கு உடம்பு சரியில்லை என்று என் அலுவலகத்தில் கூறிவிட்டு வந்திருந்தேன்...

மறுநாள் காலையில் தாதரில் உள்ள ரெயில்வே மெடிக்கல் ஆபீசரிடம் நான் சென்றாக வேண்டும். இருந்த போதிலும் நாங்கள் வண்டிக்காரனை சிறிது காத்திருக்கச் சொல்லிவிட்டு பாபாவின் முன் அமர்ந்தோம். வண்டிக்காரன் அங்கேயும் வந்து விட்டான். பாபா அவனை உற்றுப்பார்த்து, " என்ன அவசரம்"..? எனக்கூறி போகச் சொல்லி விட்டார்..அதன் பின்னர் நாங்கள் கூறாமலேயே எங்கள் பிரச்சனைகளை அறிந்த அவர் எங்களை போக்ச சொல்லி அனுமதி அளித்தார். உதி எடுத்துக்கொள்ளும் படி என்னிடம் கூறினார். நான் எடுத்துக்கொண்டேன். நாங்கள் புறப்படும் போது பாபா கூறிய சொற்கள், " கவலை வேண்டாம் உன் காரியம் ஏற்கனவே நிறைவேறி விட்டது" என்பது..அவர் எதை என்னுடைய காரியம் என்றும், ஏற்கனவே நிறைவேறி விட்டது என்றும் குறிப்பிடுகின்றார் என்று எனக்கு விளங்கவில்லை. நான் அவரிடம் வந்த ஓரே நோக்கம், அவரிடம் உபதேசம் பெற வேண்டும் என்பதே.! அவர் உபதேசம் எதுவும் அளிக்காததால் அது நிறைவேற வில்லை என்ற கருத்துடன் நான் தாதர் திரும்பினேன்.

எட்டு நாட்களுக்குப்பின் நான் ஒரு கனவு கண்டேன். இந்தூரில் இருந்து எங்கள் குடும்ப புரோகிதர் எனக்கு உபதேசம் அளிக்க வருவதாக கனவு. நான் காலையில் விழித்த போது,புரோகிதர் வரப் போவதாக கடிதமோ, வேறு தகவலோ இல்லை...ஆனால் சில தினங்கள் கழித்து, ஓர் நாள் அவர் திடீரென என் அலுவலகத்திற்கு வந்து ஓர் நாள் என்னுடன் தங்க விரும்புவதாகக் கூறினார். அவரிடம் நான் கண்ட கனவைப் பற்றி கூறினேன். அதற்கு அவர் தனக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும் என்றும், எனக்கு உபதேசம் அளிப்பதற்காகவே தான் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் நான் கண்ட கனவைப் பற்றி அவருக்கு எப்படி முன்னமே தெரியும் என அவர் சொல்லவில்லை. அடுத்த நாள் காலை, முறைப்படி செய்யவேண்டி விரதங்களை முடித்த பின்னர் சிவ மந்திர உபதேசத்தை எனக்கு அவர் அளித்தார். நான் ஓர் சைவ சமயத்தை சேர்ந்தவன். இவ்வாறாக என் நோக்கம் நிறைவேற்றப்பட்டது....இந்த உபதேசத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று சில காலத்திற்கு முன்பே புரோகிதர் தீர்மானித்திருந்தால், பாபாவின் வாக்கு சத்தியவாக்கு, அல்லது சக்தி மிகுந்த வாக்காகிறது. பாபாவே புரோகிதர் மனதில் எண்ணியிருந்த காரியத்தை செய்யும்படி தூண்டியிருக்க வேண்டும். அதனால்தான், பாபா என்னிடம், உன் காரியம் ஏற்கனவே நிறைவேறி விட்டது என்று கூறியிருக்கின்றார்..என்னளவில் பாபாவின் எல்லாம் அறியும் சக்தி மிகச்சிறப்பாகவே என்னால் உணர்ந்து கொள்ளப்பட்டது. நான் என் கடைசி காலம் வரை பாபாவிடம் நன்றியுணர்வோடு இருந்தேன்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

செவ்வாய், பிப்ரவரி 13, 2024

மௌனம்

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

மௌனம்..🙏🏻

மனதிற்குள் மறைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்த அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் யாரும் சத்தமிட்டு பேசினால், நீங்களும் பதிலுக்கு அப்படியே பேச வேண்டுமென்பதில்லை. அவரது பேச்சிற்கு அமைதியை பதிலாக கொடுங்கள். அதிலேயே அவர் எதிர்பார்க்கும் பல பதில்கள் புதைந்திருக்கும். அதனை புரிந்து கொள்ளும்வரையில்தான் அவர் சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டால் அமைதியாக சென்று விடுவார். ஏனென்றால், அமைதியானது விவரிக்கமுடியாத பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

தன்னம்பிக்கை பதிவு...முடிந்தவரை பகிரவும் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் மனிதர்களுக்கு..!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

தன்னம்பிக்கை பதிவு...முடிந்தவரை பகிரவும் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் மனிதர்களுக்கு..!!

ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது. எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள்..!இந்த 400 மில்லியன்  விந்து, தாயின் கருப்பை நோக்கி பைத்தியம் போல் ஓடும்போது 300-500 விந்து மட்டுமே உயிர்வாழ்கிறது...மற்றும் மீதமுள்ள அணுக்கள் வழியில் சோர்வு அல்லது தோல்வியால் இறக்கின்றனர். இந்த 300-500 விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடிந்தது. அவற்றில் ஒன்று மட்டுமே மிகவும் வலுவான விந்து, கருமுட்டையை உரமாக்குகிறது அல்லது கருமுட்டையில் ஒரு இடத்தைப் பிடிக்கும். அந்த அதிர்ஷ்ட விந்து நீங்கள் அல்லது நான் அல்லது நாம் அனைவரும்...இந்த மாபெரும் போரைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..?

1. நீங்கள் ஓடியபோது "கண்கள், கைகள், கால்கள், தலை இல்லை, இருந்தும் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் .

2. நீங்கள் ஓடியபோது ​​உங்களிடம் எந்தவிதமான சான்றிதழும் இல்லை,.உங்களுக்கு மூளை இல்லை, ஆனால் நீங்கள் வென்றீர்கள்.

3. நீங்கள் ஓடும்போது உங்களுக்கு கல்வி இல்லை, யாரும் உதவி செய்யவில்லை, ஆனால் நீங்கள் வென்றீர்கள்.

4. நீங்கள் ஓடும்போது உங்களுக்கு ஒரு இலக்கு இருந்தது, நீங்கள் ஒரே மனதுடன் ஓடி அந்த இலக்கை இலக்காகக் கொண்டு, இறுதியில் நீங்கள் வென்றீர்கள்.- அதன் பிறகு, தாயின் வயிற்றில் பல  குழந்தைகள் இழக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் இறந்துவிடவில்லை. நீங்கள் 10 முழு மாதங்களை முடித்துவிட்டீர்கள்..பிறக்கும்போதே பல குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள்... வாழ்க்கையின் முதல் 5 ஆண்டுகளில் பல குழந்தைகள் இறக்கின்றன. நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்கள்..பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர். உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை... பலர் வளர்ந்து வரும் வழியில் உலகை விட்டு வெளியேறிவிட்டார்கள். நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள்.....மற்றும் இன்று ......

ஏதாவது நடக்கும்போது நீங்கள் பீதியடைகிறீர்கள், நீங்கள் விரக்தி அடைந்து விட்டதாக நினைக்கிறீர்கள் ஏன்..? நீங்கள் ஏன் தோற்று விட்டதாக நினைக்கிறீர்கள்..? நீங்கள் ஏன் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்..? இப்போது உங்களுக்கு நண்பர்கள், உடன்பிறப்புகள், படிப்பு சான்றிதழ்கள் எல்லாம் இருக்கிறது. கைகளும் கால்களும் உள்ளன. கல்வி இருக்கிறது. திட்டமிட மூளை இருக்கிறது. உதவி செய்ய மக்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள். வாழ்க்கையின் முதல் நாளில் நீங்கள் கைவிடாதபோது. 400 மில்லியன் விந்தணுக்களுடன் மரணத்துடன் போராடி, எந்த உதவியும் இல்லாமல் தொடர்ச்சியாக ஓடுவதன் மூலம் தனியாக போட்டியில் வெற்றி அடைந்தீர்கள்.

ஏதாவது நடக்கும்போது ஏன் மனம் உடைக்கிறீர்கள்..??

நான் வாழ விரும்பவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்..?

நான் தோற்றேன் என்று ஏன் சொல்கிறீர்கள்..?

இதுபோன்ற ஆயிரக்கணக்கான விஷயங்களை முன்னிலைப்படுத்த முடியும், ஆனால் நீங்கள் ஏன் விரக்தியடைகிறீர்கள்?

நீங்கள் ஆரம்பத்தில் வெற்றி அடைந்தீர்கள். இறுதியில் வெற்றி அடைவீர்கள். நடுவில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நேரம் கொடுங்கள். உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...பாதுகாப்பாக இருங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻🙏🏻

மனிதர்களுக்கு உதவ வேண்டும்,...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

மனிதர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் அமைதியாக, மனமகிழ்வுடன் வாழ வேண்டும். ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திய வண்ணம் இருக்க வேண்டும், மற்றும் இறை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும் போன்ற செயல்களை நிறைவேற்றுவதே ஒரு இறைசேவை செய்பவர்கள் எதிர்பார்க்கும் நிலை....ஒருவர் மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அந்த நிலைக்குச் சென்று விட்டால் தானாகவே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

கடவுள் மறுப்பு கேள்விகளை கேட்க்கும் மனிதர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க தவறாமல் சிந்தியுங்கள்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கடவுள் மறுப்பு கேள்விகளை கேட்க்கும் மனிதர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க தவறாமல் சிந்தியுங்கள்...வேதாந்திரி மகரிஷி அவர்கள் கூறியது போல. ஒரு கிண்ணம் நிறைய தயிர் சோறு தருகிறேன். எந்த விஞ்ஞானத்தாலும் அதை ரத்தம் ஆக்கித் தர முடியுமா..? அதே தயிர் சோறு...இதோ நான் சாப்பிட்ட உடன். உள்ளே சென்றுரத்தம் ஆகிவிடுகிறது...அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


திங்கள், பிப்ரவரி 12, 2024

பாபாவின் மிக நெருங்கிய அடியவர் பகத் மகல்சபாதி,


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பாபாவின் மிக நெருங்கிய அடியவர் பகத் மகல்சபாதி..

பகுதி-2 

பாபாவின் முதல் பக்தர் மகல்சாபதியை பாபா ‘பகத்’ என்றுதான் அழைப்பார். தன் எல்லா கவலைகளையும் சாயிநாதனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு சலனமின்றி இருந்தார்..அதே போன்று எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் உடனிருந்து பாதுகாக்கவும் செய்தார் பாபா....பொதுவாக, பிறர் தன்னை வழிபடுவதை விரும்பாத பாபாவால்கூட, முழுமையாகத் தனக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்துகொண்ட மகல்சாபதியின் வழிபாடுகளைத் தடை செய்ய முடியவில்லை. தன்னை மனப் பூர்வமாக நேசித்து நம்பும் அடியவர்களின் அன்புக்கு பாபா எப்போதும் அடிமை....

“தேவா நீங்கள் என்னுடன் இருக்கும்போது என் தேவைகளை அறிந்து நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் எனும்போது நான் என் உலகாயத விஷயங்களை நினைத்துக் கவலைப்பட வேண்டுமா என்ன?” என்று கேட்பார். 

அந்த நம்பிக்கையே பாபா விரும்புவது. மகல்சாபதி பாபாவின் அனுமதியின்றி எதையும் செய்வதில்லை. எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் உடனிருந்து பாதுகாக்கவும் செய்தார் பாபா.மசூதி பழுது பார்த்ததில் கூட மகல்சபாதி மூலமாக    பாபாவிடம் சம்மதம் வாங்கப்பட்டது. தாத்யா கோதே பாடீல், பகத் மஹல்ஸாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயிபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.  பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார்.  இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினர்.  தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களை பற்றி  நள்ளிரவு நெடுநேரம் வரை படுத்திருப்பர்.  

அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பி விட வேண்டும்.  உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மஹல்ஸாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார்.  இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் கூட இருந்தனர்

பாபாவிடம் அருகிலிருந்து அவரின் உயரிய வாழ்க்கை முறை, உபதேசங்கள் ஆகியவற்றை அறிந்து உயர்ந்த ஆன்மிக நெறியில் தன் வாழ்வைச் செலுத்தினார் மகல்சாபதி...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻🙏🏻

இப்பொழுது சரணாகதி பற்றி பேச போகிறேன் ...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

இப்பொழுது சரணாகதி பற்றி பேச போகிறேன் ...?
நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா...? 

ஆனால், உங்களுடையது என்று நீங்கள் நினைக்கும் எதையும் ‘விட்டு விடுங்கள்’ என்றே நான் சொல்வேன்...! எதையாவது நீங்கள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தால், ‘தளர்வாகுங்கள்...!’ தளர்வதே சரணாகதி.. வேறு எதுவும் இல்லை. உங்கள் மனதை ஏதாவது உறுத்திக் கொண்டிருந்தால், அந்தக் கவலையை சரண் செய்வதே சரணாகதி. இது ஆகுதி போலத்தான். (ஆகுதி என்பது யாகத் தீயில் பிரார்த்தனையுடன் போடப்படும் பொருட்கள்).எனவே உங்களை என்ன உறுத்திக் கொண்டிருந்தாலும் அல்லது உங்களிடம் கவலை இருந்தாலும் அதை ஆகுதியாகக் கருதி இறைவனிடம் அளித்து விடுங்கள்.

எதை உங்களால் சமாளிக்க முடியவில்லையோ, எது உங்களுக்கு பாரமாக இருக்கிறதோ... எதை சுமப்பதால் நீங்கள் சோர்வடைகிறீர்களோ, அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றால் போதும். சரணாகதி என்பதின் பொருள் இதுதான். இல்லையென்றால் சரணாகதிக்கு என்ன இருக்கிறது..? உங்கள் உடம்பு இறைவனுடையது. உங்கள் மனம் கூட இறைவனுடையது தான்...எல்லாம் இறைவனுடையது...ஆனால், இது உங்களுடையது என்று நினைக்கிறீர்கள். எனவே, எல்லாம் போகட்டும், இறுக்கம் தளந்து புன்னகை செய்தால் போதும்.

புத்த சமயத்தில், ‘புத்தம் சரணம் கச்சாமி’, என்பார்கள். அதன் பொருள் உங்களால் சுமக்க முடியாத சுமையை புத்தரிடம் அளித்து விடுங்கள் என்பதே. அல்லது குருவிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது இறைவனிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது உங்களுக்கு நெருக்கமான யாரிடமாவது சமர்ப்பணம் செய்யுங்கள். உங்களைச் சேர்ந்தவர்கள் யாரோ ஒருவர் இருக்கிறார், அவர் உங்களுக்கு அன்பானவர், நீங்கள் அவருக்கு அன்பானவர் என்று நீங்கள் உணரவே இது.உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்...ஒரு குழந்தை தன் அம்மா வீட்டில் இருக்கிறாள் என்றால் வசதியாய் உணர்கிறது. அந்தக் குழந்தை இங்கும் அங்கும் ஓடி விளையாடுகிறது. ஆனால்,அந்த குழந்தையால் தன் அம்மாவைப் பார்க்க முடியவில்லை, அவர்கள் எங்கோ சென்றிருக்கிறார்கள் என்றால், தன் தாயைத் தேடி அழ ஆரம்பிக்கிறது சிறு குழந்தைகள் எப்போதும் தன் அம்மா அருகே இருக்கிறார்களா என்று பார்த்தபடியே இருக்கும். ஒரு கண் தன் அம்மா மீது வைத்தபடியே இருக்கும். இது ஏனென்றால், ‘எனக்காக ஒருவர் உண்டு, அவர் இருக்கிறார்’ என்று தெரிந்தால் அந்தக் குழந்தை வசதியாய் உணர்கிறது...சரணாகதி மந்திரம் இதுவே..!!
சரணாகதியின் மகிமையை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்...!
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

கர்ணன்_கற்றது வித்தை_அல்ல...வேதம்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிக....🙏🏻🙏🏻

கர்ணன் கற்றது..வித்தை அல்ல...வேதம்...

கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே...?

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு...அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்...மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்....

குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.. கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார்... !!!

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ... காட்டாதீர்கள்....

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஞாயிறு, பிப்ரவரி 11, 2024

சரியா தவறா.....!!ஞானம் உண்டு..அனுபவம் உண்டா...!!???



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

குரு தத்துவம் என்ன கூறுகிறது என்றால்...

ஆன்மீக குரு என்பவர் கைகளில் ஜப மாலையுடன் புலித்தோலில் அமர்திருப்பர் என்றும், எப்பொழுதும் அமைதியாக இருப்பார், கோபம் என்றாலே என்ன என தெரியாதவராக இருப்பார் என்று பலர் எண்ணுகிறார்கள் .குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்வது முட்டாள்தனம்...குருவானவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பரபிரம்மதின் வடிவமானவர் குரு. பரபிரம்மம் எப்படி எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறதோ அது போல குருவும் அனைத்து ரூபங்களிலும் இருப்பார்...உங்கள் வீட்டிக்கு வரும் குப்பை அள்ளுபவர் , உங்கள் மனைவி , உங்கள் குழந்தை , உங்கள் செல்ல பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம்..குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள்... அறியாமை இல்லா மனதை திறந்து வையுங்கள் உங்கள் குரு தானே வருவார்...

குரு உஙகளின் கரு...உங்களின் குருட்டை நீக்குபவர்..ஆன்மாவே குரு...குருவே.சிவம்...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


நம்பினால் நம்புங்கள்..........!!!!????

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நம்பினால் நம்புங்கள்..........!!!!????

வேதங்களே நமக்குப் பிரமாணங்கள் என்பதால் வேதத்தில் உள்ள மகா வாக்கியங்களே ஏதோவொரு வடிவில் நமக்கு குருவின் மந்திரமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். இருக்கும் ஆன்மா ஒன்றேயானாலும், ஒவ்வொரு மகா வாக்கியமும் வெவ்வேறு பார்வைகளில் சொல்லப்பட்டவை...அதனால் நாம் அவைகளையே எடுத்துக் கொள்வோம். ரிக் வேதம், ஐதரேய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள லக்ஷண வாக்கியமான “ப்ரக்ஞாநாம் ப்ரஹ்ம” என்பது “உணர்வே பிரம்மம்” என்ற இலக்கண வடிவில் சொல்லப்பட்டுள்ளது...யஜுர் வேதம், தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள அனுபவ வாக்கியமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பது “நான் பிரம்மமாய் இருக்கிறேன்” என்ற அனுபவ வாயிலாய் சொல்லப்பட்டுள்ளது. சாம வேதம், சாந்தோக்கிய உபநிஷத்தில் உபதேச வாக்கியமான “தத் த்வமஸி” என்பது “நீ அதுவாக இருக்கிறாய்” என்ற உபதேச வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதர்வண வேதம், மாண்டூக்ய உபநிஷத்தில் சாக்ஷாத்கார வாக்கியமான “அயம் ஆத்மா ப்ரஹ்ம” என்பது “இந்த ஆத்மன் பிரம்மம்” என்ற யுக்திக்குப் பின் வரும் அனுபவ முறையில் சொல்லப்பட்டிருக்கிறது...

இப்படியாக ஏதோவொரு முறையில் குருவினால் வழங்கப்படும் மந்திர உபதேசத்தைக் கேட்டு, அதன் பொருளையும், வீச்சையும், விளக்கங்களையும் அவரிடமே அறிந்துக் கொண்டு, பின்பு அதை மனத்தில் நன்கு அசைபோட்டு, தேவையானால் மேலும் விளக்கங்களைக் கேட்டு அதன் பின்பும் தன் அறிவால் அலசியதும் நன்கு உள்வாங்கிக் கொண்டு, அதை வெறும் அறிவால் மட்டும் அறிந்து கொள்வதை விடுத்து அதன் உண்மையை உணர்வதற்கு அதன் பொருளை மனத்தால் நன்கு தியானித்து அந்தப் பொருளாகவே இருக்க முயல்வதுதான் சாதகனின் முயற்சிகள்...இதற்கு மேல் அவனருளாலே அவன்தாள் வணங்கும் நிலை தானே வரும்....

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

சனி, பிப்ரவரி 10, 2024

இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரக்ஷிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை.

'கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்..'உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம்’ என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. 

கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார்...அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான்’ என்றுகருதி,, தன்னை தூய்மைபப் படுத்திக்கொண்டு,...தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

வெள்ளி, பிப்ரவரி 09, 2024

நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி...!

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி..ஓரிரு முறை சொல்லிப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம். எம்முடைய சொல்லைக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்துத் தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி." - ஸ்ரீசீரடி சாய்பாபா...🙏🏻🙏🏻

 கருணையே வடிவான பாபா இதுபோன்ற மொழிகளை கூறியிருக்க மாட்டார் என்று பலர் நினைப்பர். அனால், சில பக்தர்களின்  குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களை விடுவதற்காக மிகவும் அதிகார தோரணையில் பாபா ப்ரயோகித்த வார்த்தைகள் இவை. தெய்வீக அவதாரமான பாபாவின், வசவுகளும் மறைமுகமான ஆசிர்வாதமே என்பதை நினைவில் கொள்ளவும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


உனக்காக நான் ..எனக்காக யார்...என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுக்கொள்....


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் யார்...என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுக்கொள்....!

குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுபாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களை தேரோட்டியிடம்(புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளும்...தேரோட்டி நிபுணவாகவும் சாமார்திய சாலியாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனதின்) பிடியில் மாட்டிகொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


புதன், பிப்ரவரி 07, 2024

எப்போது உணரபோகிறாய்..!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

எப்போது உணரப்போகிறாய்..!

இயற்கையின் ஒரே தடவை மட்டும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஒன்றுமில்லை. எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாப் பொருள்களிடத்தும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. ஒரு தடவை மழையாக விழுந்த நீர் பல தடவை மழையாக விழவல்லது. அங்ஙனம் நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்..!

ஜீவன் என்பது ஓர் ஆத்மா, அதற்கு உடல்கள் மாறி மாறி அமைவது அதற்குப் புதிய புதிய அனுபவங்களைத் தருவதற்க்காக தான். ஒரே தடவை ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகும் மாணவர்கள் அதிகம் கற்க முடியாது. கல்வி பூர்த்தியாகும் வரையில் திரும்பத் திரும்ப அவன் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் இயற்கையின் பேரமைப்பாகிறது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது என்கிறோம்....!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது என்கிறோம்...எந்தெந்த உறுப்பும், உருவாகும் பொருள்களும் எந்த எந்த பூதத்திற்கு உரியவை என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்...நிலம் : உறுப்புகளில் பெரியதும், நிலையானதும், உருவுள்ளதும், பளுவுள்ளதும், கடின உறுப்புகளான நகங்கள், எலும்புகள், பற்கள், மாமிசம், தலைமயிர், தாடி உரோமங்கள், மலம் ஆகியவை நிலத் தாது சம்பந்தப்பட்டவை.

நீர்:... நகரும் இயல்புள்ள திரவம், ரசம் ஆகியவையும், பிசுக்குத் தன்மையுள்ள மந்தமான திரவமும், மென்மையான திரவமும், ஒட்டும் தன்மையுள்ள பிச்சிலம் என்ற இயல்புகொண்ட ரசமும், இரத்தம், மாமிசப் பசை, கபம், பித்தம், சிறுநீர், வியர்வை போன்றவை நீர் சம்பந்தப்பட்ட உறுப்புகள்.

நெருப்பு :... உடலிலுள்ள பித்தம், சூடு, பளபளப்பு இவற்றைச் சேர்ந்தவைகளும், நீலம், மஞ்சள் (பில்லிரூபின்கள்) போன்ற நிறங்களும், கண் புலன்கள் ஆகிய இவை அனைத்தும் அக்னி என்னும் பூதத்தைச் சேர்ந்தவை...

வாயு :... மூ்ச்சுக் காற்று, திறத்தல், மூடுதல், விரித்தல் சுருக்குதல், செல்லுதல், தூண்டுதல், தரித்தல், தொடுதல் மற்றும் தொடு புலன்கள் ஆகியவை காற்று என்னும் பூதத்தைச் சேர்ந்தவை...

ஆகாயம் :...  நாசித் துவாரங்கள், ரோமத் துவாரங்கள், செவித் துவாரங்கள் மற்றும் புலன்கள், ஓசைகள் இவை அனைத்தும் ஆகாயம் சார்ந்த உறுப்புகள்

ஆத்மா :... மனம், உணர்வு, அறிவு எனச் செயல்பட்டு உடலைத் தூண்டுகிற இதுவே ஆத்மா என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻.

செவ்வாய், பிப்ரவரி 06, 2024

உண்மையை உணர உனக்கு தகுதி உண்மையாகவே வந்ததா என யோசி...போலியாக நடிக்காதே....!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உண்மையை உணர உனக்கு தகுதி உண்மையாகவே வந்ததா என யோசி...போலியாக நடிக்காதே....!

மற்றோரிடம் கருணை காட்டும் போது, நாம் நம்மை மறந்து அவர்களுக்காக, அவர்கள் நன்மைக்காக என்று ஏதோ செய்வோம். அப்போது நாம் நம்மை இழப்பதால், நமக்கு ஆனந்தமே ஏற்படும். மாறாக துக்கம் வருகிறது என்றால், அந்தக் கருணையில் நான்-எனது என்ற மனோபாவம் இருக்கிறது, நாம் நம்மை இழக்கவில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

திங்கள், பிப்ரவரி 05, 2024

ரகசியம் பரம ரகசியம்

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ரகசியம் பரம ரகசியம் ...

ஒரு சமயம் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கடும் புயல் வீசியது. இதனால் மூன்று நீராவிக் கப்பல் தவிர மற்ற எல்லா கப்பலும் புயலில் சிக்கி கடலுக்குள் முழ்கியது. எங்கு தன்னுடைய கப்பலும் கடலுக்குள் மூழ்கிவிடுமோ என்று பயந்தார் அந்த கப்பலின் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா. இவர் சிறந்த பாபா பக்தர். எந்த நேரமும் மகான் சீரடி சாய்பாபா படத்தை தன் சட்டை பாக்கெட்டிலேயே வைத்திருப்பார். தன் பாக்கெட்டில் இருந்த பாபா படத்தை எடுத்து, “பாபா.. ஆபத்தில் இருக்கிறோம். இந்த ஆபத்தில் இருந்த எங்களை காப்பாற்றுங்கள் பாபா.“ என்று கண்ணீருடன் வணங்கினார். அப்போது உடன் இருந்த வெளிநாட்டு நண்பர் ஒருவர், “ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் நடுகடல் எல்லையில் இருக்கும் நம்மை, எங்கோ சீரடி கிராமத்தில் இருக்கும் பாபா காப்பாற்றுவார் என்று எப்படி நம்புகிறாய்.?“ என்றார்.

“ஒரு சிவபக்தை எங்கள் ஊரில் இருந்தாள். அவளின் மகள் நிறைமாத கற்பிணி பெண். ஒருநாள் பிரசவ வலியால் அவள் துடித்து அழுத போது, அவளின் தாய் அவள் அருகில் இல்லை. இதனால் அந்த பெண்ணின் ஊரில் இருக்கும் சிவபெருமான் அந்த பெண்ணின் தாயாக வந்து பிரசவம் பார்த்து சென்றார். அதனால் அவரை நாங்கள் “தாயுமானவர்.“ என்று அழைக்கிறோம். ஒரு குழந்தைக்கு வேதனை என்றால் அதன் தாய்க்கும் அந்த வேதனை அல்லவா. அதுபோல் ஒரு பக்தனுக்கு துன்பம் என்றால் அவனின் இஷ்ட தெய்வத்திற்கும் அந்த கஷ்டம் உண்டு. அதனால் நம்மை காப்பாற்றும் ஒரே தெய்வம் நம் இஷ்ட தெய்வமாகதான் இருக்கும். நம்பிக்கை இருக்கிறது. என் சாய்பாபா நம்மை காப்பாற்றுவார்.“ என்றார் கேப்டன். அதே சமயம் ஷீரடியில் – “ஓ…“ என்று கூச்சல் இட்டார் சாய்பாபா. பாபாவை தரிசிக்க வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சில நிமிடத்தில் பாபாவின் மீது தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. எப்படி – எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது.? என்று அதிசயித்தார்கள் பக்தர்கள்.

அங்கிருந்த பலர், அந்த தணணீரை ருசி பார்த்து, “இது கடல் நீர்.“ என்றனர். கடல் நீர் பக்தர்களின் கால் பாதம் அளவு நிரம்பியது. உடன் இருந்த ஷாமா, பாபாவின் உடலை துணியால் துடைத்துக்கொண்டு இருந்தார். இப்படியே மூன்று நாட்கள் இந்த அதிசயம் நடந்து கொண்டு இருந்தது. ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பினார்கள் பக்தர்கள். அதை பாபாவிடம் கேட்கவும் தயக்கம். மூன்றாம் நாள், வெளிநாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்து உள்ளது என்று பாபாவிடம் ஷாமா ஒரு கடிதத்தை கொடுத்தார். அதை வாங்கிய பாபா, தன் அருகில் இருப்பவரிடம் கடிதத்தை கொடுத்து படி என்றார். அது கப்பல் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதிய கடிதம். சாய்பாபாவை நலம் விசாரித்துவிட்டு, “பாபா புயல் காற்றால் பல கப்பல்கள் கடலில் முழ்கியது. கடலில் எங்கள் கப்பலும் முழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. என் வாழ்நாளின் கடைசியாக உங்களை பிராத்தனை செய்யலாம் என உங்கள் படத்தை வைத்து பிராத்தனை செய்தேன்.

அற்புதம் நடந்தது பாபா… எந்த பாதிப்பும் இல்லாமல் எங்கள் கப்பல் பாதுகாப்பாக நாடு வந்து சேர்ந்தது. எல்லாம் உங்கள் கருனைதான். உங்கள் மகிமை எனக்கு தெரியும் பாபா.“ என்று கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதி இருந்தார். பிறகுதான் பாபாவுடன் இருந்த பக்தர்களுக்கு புரிந்தது. மூன்று நாட்களாக அந்த கப்பலை காப்பாற்றவே பாபா போராடினார். பாபா வசிக்கும் இடத்தை கடல் நீர் கொஞ்சம் சூழ்ந்ததற்கும் அவர் உடலை கடல் நீர் நனைத்ததற்கு காரணம் இதுதான். மனிதர்கள் ஸ்ரீசாய்பாபாவின் மகிமையை சொன்னால் அது பக்தி நிலை. ஆனால் விஷ்ணுபகவானே, “சாய்பாபாதான் உன் இன்னல்களை தீர்ப்பார்.“ என்றால், அதன் காரணம் ஸ்ரீசாய்பாபா இறைவனின் ஓர் அம்சம். இறைவனின் மகத்துவங்களின் ஒரு வடிவம்தான் சீரடிசாய்பாபா என்பதே உண்மை...

ஓம் ஸ்ரீ சாயீராம்... 🙏🏻🙏🏻

ஞானம் என்றால் என்ன....? ஞானத்தை எப்படி விளக்குவது...?


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஞானம் என்றால் என்ன....? ஞானத்தை எப்படி விளக்குவது...?

ஞானம் என்பது ... ஒரு பிரமாண்டமான அனுபவம் அல்ல. ஞானம் என்பது ஒரு எளிய அறிவு ப்பூர்வமான புரிதல் மட்டுமே...ஞானம் பெறுவதற்கு பயிற்சியும் தேவை இல்லை, முயற்சியும் தேவை இல்லை. ஒரு நொடிபொழுது போதும் இதனை புரிந்துக் கொள்வதற்கு...

ஞானம் என்பது ... நம் அறிவு தன் எல்லையை புரிந்து கொள்ளுவது …. நம் அறிவு ... தனக்கு எங்கே வேலை இருக்கிறது... தனக்கு எங்கே வேலை இல்லை என்று புரிந்து கொள்ளுவது தான் ஞானம்...

நாம் நமது மனோ இயக்கம் சம்பந்தமாக, நாமாகச் செயல்படுவதற்கு எதுவும் இல்லை என்பதைக் கண்டுகொள்வதே 'ஞானம்'...நம்முடைய மன உணர்வுகளைச் சீரமைக்கும் வல்லமை நமக்கு கிடையாது என்ற நமது இயலாமையை  நாம்  அறிவுப்பூர்வமாகப்  புரிந்துக் கொள்வது தான் ஞானம்'....நம் அறிவு புறச்செயல்களை நிர்வாகம் செய்யலாம். மனதையும் நிர்வாகம் செய்ய முயலுவது தான் நம் எல்லா மன பிரச்சனைகளுக்கும் காரணம். நம் அறிவு நம் மனதை நிர்வாகம் செய்ய முடியாது என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’....

மனதில் எண்ணங்கள்....அதன் போக்கில் தான் வரும்... அவை நம் அறிவின் கட்டுபாட்டுக்குள் இல்லை என்று புரிந்துக் கொள்வது தான் … ‘ஞானம்’...நாம் தூங்குவதற்கு செல்கிறோம் ...எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன..." எண்ணங்களே...! நான் தூங்க போகிறேன்.... நாளை வாருங்கள் " என்று சொன்னால் கேட்குமா...? "மனசே, இன்று முழுவதும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மட்டுமே வர வேண்டும் ... கோபம், துக்க எண்ணங்கள் வர கூடாது" என்று நம் மனதிடம் நம் அறிவு ஒரு கோரிக்கை வைத்தால் … நம் மனது கேட்குமா?நம் மனம் நம் அறிவின் கைகளில் இல்லை என்று அறிவுபூர்வமாக புரிந்து  கொள்வது தான் ‘ஞானம்’....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

பாபா தன் நெருக்கமான மகல்சாபதயிடம் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பாபா தன்   நெருக்கமான  மகல்சாபதயிடம் ஆன்மிக முன்னேற்றத்துக்குப் பணத்தை ஒரு அபாயமாக, தடையாக அவர் கருதினார்.  தமது பக்தர்களை அதன் பிடியில் விழ அனுமதிப்பதில்லை..இது விஷயத்தில் பகத் மஹல்ஸாபதி ஓர் உதாரணம் ஆவார்...அவர் பரம ஏழை...வரவையும் செலவையும் ஒன்றாக்க அவரால் இயலவில்லை.  பாபா அவரை ஒருபோதும் எந்தப் பணத்தையும் சம்பாதிக்க அனுமதிக்கவில்லை.  தமது தஷிணைப பணத்தினின்றும் ஏதும் கொடுக்கவுமில்லை.  ஒருமுறை ஹம்ஸ்ராஜ் என்ற தயாளமும், தாராள குணமும் உள்ள ஒருங்கிணைத்து வியாபாரி பாபாவின் முன்னால் மஹல்ஸாபதிக்கு ஒரு பெருந்தொகை அளித்தார்.  ஆனால் பாபா அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கவில்லை...

1886ல் பாபா எல்லைக்கோட்டை (ஆயுள் என்ற எல்லை) தாண்ட முற்சித்தார்.  ஒரு மார்கழிப் பௌர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டார்.  அதைத் தொலைப்பதற்கு பாபா தனது பிராணனை மிகஉயர எடுத்துச்சென்று சமதிநிலையை அடையத் தீர்மானித்தார்...பகத் மஹல் ஸாபதியிடம் "எனது உடலை மூன்று நாட்கள் பாதுகாப்பாயாக...நான் திரும்பினால் எல்லாம் சரியாகிவிடும்...நான் திரும்பவில்லை என்றால் அந்த திறந்தவெளியில் (சுட்டிக்காண்பித்து) எனது உடலைப் புதைத்துவிட்டு அதன்மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு" என்று கூறினார்...

இதைக் கூறிவிட்டு இரவு சுமார் பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார்.  அவரது மூச்சும், நாடியும் நின்றுபோயின.  உடம்பை விட்டுவிட்டு உயிர் அகன்றுவிட்டதைப்போல் தோன்றியது.  கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் அங்குவந்து விசாரணை ஒன்றை நடத்தி, பாபாவால் சுட்டிக்காண்பிக்கபட்ட இடத்தில் அவரை அடக்கம்செய்ய வந்தனர்...ஆனால் மஹல்ஸாபதி இதைத் தடை செய்தார்.  தமது மடியிலேயே வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் விடாமல் காத்திருந்தார்.  மூன்று நாட்கள் கழிந்ததும் காலை 3 மணிக்கு பாவாவிடம் உயிரின் அறிகுறிகள் தெரிந்தன.  அவரது சுவாசம் ஆரம்பித்து, அடிவயிறு அசையத் தொடங்கியது.  கண்கள் திறந்தன.  தனது அங்கங்களை நீட்டிக்கொண்டு மீண்டும் உணர்வுக்கு வந்தார்.மகல்சாபதி அப்பேற்பட்ட பாக்கியம் செய்தவர்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

கர்மம், ஞானம், யோகம், பக்தி...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன.  இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும்,  கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது.  ஆனால் நீங்கள் சாயியையே சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் (கடவுளிடத்தில்) அழைத்துச் செல்கிறது.  இவ்வாறாக சாயிபாபா நிச்சயம் கூறுகிறார்.  அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயிபாபாவின் மொழிகளை ஆசிரியர் கூறுகிறார். 

"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்  வீட்டில் இருக்காது.  தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழு இதயத்துடன் வழிபாடு செய்யும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எத்தனை தடவை சொன்னாலும் இது தான் உண்மை...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

எத்தனை தடவை சொன்னாலும் இது தான் உண்மை...!

மாயை, ஒரு மலைப் பாம்பைப்போல் உடலைச் சுற்றிக் கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்தில் இருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்து விடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது...?"நான் கேட்ட ஐந்து ரூபாயைப் போல ஐம்பது மடங்கு வைத்துக் கொண்டு, எதிலுமே சம்பந்தபடாதவர் போல் அங்கு உட்கார்ந்து இருக்கிறீர்..! அதை இப்பொழுது வெளியே எடும்...! அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறது..!"

பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை  எடுத்தார்... இருபத்தைந்து பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணினார்...மனதின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிபோனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.

பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், "உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக் கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

ஜி.கே. ரேகேயின் நினைவலைகள்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஜி.கே. ரேகேயின் நினைவலைகள்...!

நான் இந்தூரில் தாசில்தாராக பணி செய்து ஓய்வு பெற்றவன். 1912 ல் நான் இடுப்பு பிடிப்பால் மிகவும் அவதிப்பட்டேன். அடிக்கடி காய்ச்சலும் வந்து என்னை பாடாய்ப்படுத்தியது. என்னால தூங்கவோ, ஓய்வெடுக்கவோ, முடியவில்லை. ஆகவே நான் ஹர்தா அருகில் உள்ள ஜிக்காம் என்ற கிராமத்தில் இருந்த என் மாமனார் வீட்டிற்குச் சென்றேன்..என் மாமனார் தீவிர சாயி பக்தர். நான் அவரிடம் சென்ற அன்று சாயி பாபாவின் உதியை எனக்கு இட்டுவிட்டார். அன்றே  பிற்பகல் இரணமணிக்கு நான் கட்டிலில் படுத்திருக்கும் போது காவி கட்டிய சன்யாசி ஒருவர்  என்னருகே வந்து என் தோள்களில் தட்டி, " குழந்தாய் கவலைப்பட வேண்டாம். இன்னும் மூன்று தினங்களில் நீ குணமடைவாய்.  என்று கூறினார்.

நான் உடனே, ஒரு சன்னியாசி வந்திருப்பதாகவும், அவர் கூறியதையும் கூறி என் மாமனாரைக் அழைத்தேன். அவர் அந்த சன்யாசியை காண விரும்பினார். ஆனால் அவர் வருவதற்குள் சன்யாசி சென்று விட்டார். அது சாயிபாபாவகத்தான் இருக்க வேண்டும் என உறுதியாக அவர் கருதினார்..அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள். நான் வியப்புறும் வகையில் என் வலி முழுமையாக குணமடைந்தது. நான் பூரணமாகக் குணமடைந்தேன். என் மாமனார் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்குமாறு என்னிடம் கூறினார்...ஆனால் அதன் பின் இரண்டு வருடங்களாக என்னால் சீரடிக்கு செல்ல முடியவில்லை.1914 ஆம் ஆண்டில் மண்டலாவில் என் மூன்றாவது பெண்ணின் திருமணத்திற்காக நான் விடுமுறை எடுத்துக் கொண்டேன். பாபாவிற்கு நாங்கள் திருமணப் பத்திரிக்கை அனுப்பி வைத்தோம். அதற்கு பாபாவிடம் இருந்து, நான் நேரில் வந்து திருமண்ததில் பங்கு கொள்வேன் என்று பதில் வந்தது...

திருமண விழா நடந்துக் கொண்டிருந்தபோது, பாபாவிடம் இருந்து உதியுடன் ஒரு கடிதமும் வந்தது. திருமணத் தம்பதிகளுக்கு உதியை இட்டுவிடும் படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினத்திலேயே, ஒரு பக்கீர் வந்து ஒரு பைசா கேட்டார். ஆனால் என் மாமனார் அந்த வாய்ப்பை உதாசீனம் செய்து விட்டு பின்னால் வருந்தினார்..அந்த பக்கீர் பாபாகத்தான் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அது பாபாவேதான். ஆனால் அவர் மீண்டும் வருவார் என நான் கூறினேன். மறுநாள் வேறொரு பக்கீர் ஒருவர் வந்து என்னிடம் ஒரு பைசா மட்டுமே கேட்டார். நான் அதைக் கொடுத்தேன். அதை மட்டும் பெற்றுக்கொண்ட பக்கீர் என் மாமனார் அளித்த விருந்தை ஏற்காமல் சென்று விட்டார்.

திருமணம் முடிந்த உடன் நான் சீரடிக்குச் சென்று அங்கு நான்கு நாட்கள் தங்கினேன். என்னைப் பார்த்தவுடன் பாபா, "ஏன் இவ்வளவு தாமதம்..?" எனக்கேட்டார். அதற்கு நான் ஏழ்மை குமாஸ்தா என்றும், எளிதில் வர இயலாது என்றும் பதிலளித்தேன். அவர் என்னிடம் தட்சிணை கேட்டார். நான் ஐந்து ரூபாய் அளித்தேன். அவர் மேலும் ஐந்து ரூபாய் வேண்டும் என்று கேட்டார். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆயினும் மேலும் ஐந்து ரூபாய் தட்சிணை அளித்தேன்.

அப்போது பாபா, உன்னிடம் இருந்து வரவேண்டிய பாக்கிகள் ஏதுமில்லை என்றார். சீரடியில் இருந்து என் வீட்டிற்கு திரும்பிய போதுதான் அதற்குண்டான விளக்கம் எனக்குத் தெரிந்தது. என் மனைவி எனக்குத் தெரியாமலே பாபாவிற்கு காணிக்கையாக ஐந்து ரூபாயை மணியார்டர் செய்திருக்கிறாள். அது பின்னர் நேரில் பெற்றுக்கொள்ளப் படும் என்ற குறிப்புடன் திரும்பி வந்து விட்டது. பாபா நேரில் அதிகமாக ஐந்து ரூபாய் பெற்றுக்கொண்டது அதனால் தான்...நான்கு வயதான என் கடைசிப் பெண் பிரேமாபாய்க்கு காய்சல் வந்து நிலமை கடுமையாகி விட்டது. அவள் எலும்பும், தோலுமாகி விட்டாள். மருந்துகளும், சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. பாபாவின் பக்தையான என் மனைவி, குழந்தைக்கு உதவும்படி பாபாவிடம் பிரார்த்தித்தாள்.

அவள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போதே," மூன்றாம் நாள் எல்லா கஷ்டத்தையும் அகற்றி விடுவேன்" என்ற பாபாவின் குரலைக் கேட்டதாகக் கூறினாள். மூன்றாம் நாள் தாயின் மடியிலேயே எங்கள் பெண் குழந்தை உயிரை விட்டது எங்களுக்கு வியப்பளித்தது.ஆபீசில் இருந்த எனக்கு என் மனைவி தகவல் அனுப்பினாள். உடனே வீட்டிற்கு வந்த நான், என் பெண் இறந்து விட்டதைக் கண்டேன். என் மனைவி அழுது கொண்டிருந்தாள். நான் குழந்தையை தூக்கி மடியில் இருத்தி, பாபாவின் உதியுடன் சேர்த்து கங்கா நீரை ஓரளவு வாயில் ஊற்றினேன். நீர் வெளியே வழியவில்லை. ஆகவே நான் மேலும் சிறிது நீரைப் புகட்டினேன். அப்போது குழந்தையின் கண்கள் திறந்தன.


அவள் உயிருடன் இருப்பது உறுதியாயிற்று. அதன் பிறகு அவளுக்கு தொடர்ந்து உதியும் தீர்த்தமும் அளித்தோம். ஒரு மாதத்தில் அவள் பூரண ஆரோக்கியம் பெற்றாள்...இப்போது திடகாத்திரமாக இருக்கும் அவள் இந்தூர் பள்ளி ஒன்றில் தலைமைச் செவிலியராக பணிபுரிகின்றாள்...1926..ஆம் ஆண்டு என் மனைவி காலமானாள். அதன்பின் என் உடல் நிலைப் பாதிக்கப்பட்டது. என் முன் பாபாவின் புகைப்படத்தை வைத்திருந்தேன். அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அதில் இருந்து ஒரு குரல் வருவது போன்றிருந்தது. "இனியும் வேலைக்குப் போக வேண்டாம்"  தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தக் குரல் கேட்டது. பேசியது யாராக இருக்கும் என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை...என் நண்பர் மருத்துவர் பர்னேர்கர், அந்தக் குரல் கண்டிப்பாக பாபாவுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினார். ஆகவே நான் 1926 ல் ஓய்வூதியத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்....அதற்கு முன்பு எனது நான்காவது பெண் மீனாபாய்க்கு மணம் முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். வரன் எதுவும் கிடைக்கவில்லை. நான் ஏற்கனவே அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டேன். மத்திய பிரதேசத்தில் உள்ள என் என் மைத்துனர் வீட்டிற்கு நானும் என் மனைவியும் சென்றோம்.

அங்கு போய் சேர்ந்த மூன்றாவது தினம், "ஜீராப்பூருக்கு போ" என்றொரு குரல் கேட்டது. நான் உடனே இந்தூருக்கு திரும்பினேன். ஏற்கனவே அலுவல் நிமித்தம் என் மகனுக்கு ஜீராப்பூர் போக உத்தரவு வந்தும் அவனது மனைவி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவனால் போக முடியவில்லை. அப்போது ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. நான் இந்தூருக்கு வந்தவுடன் என்னை ஜீராப்பூருக்கு மாறிறியதாகவும் நான் உடனே ஜீராப்பூருக்கு செல்ல வேண்டும் என்றும் என் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆகவே நான் ஜீராப்பூருக்கு சென்று வேலையை ஒப்புக்கொண்டேன்...அங்கிருந்து நான் வேலை விசயமாக இர் வாரங்களுக்கு டூர் செல்ல வேண்டியிருந்தது. நான் ஸயாத் என்ற ஊரில் தங்கினேன். அங்கே குவாலியர் சமஸ்தானப் பணியில் என் சகோதரர் இருந்தார். நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவருடன் பலவந் என்ற ஒருவரைக் கண்டேன். அவர் உண்மையில் பலவானாக இருந்தார். பருமனாகவும் அழகாகவும் இருந்தார். நான் அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் என் மகளுக்கு பொருத்தமான வரன் எனக் கருதினேன். அது நிச்சயமாகி திருமணம் சிறப்பாக நடந்தேறியது.இவ்விதம் என் வாழ்க்கை முழுவதிலும் சாயிபாபாவின் கருணை எனக்கும் என் குடும்பத்திற்கும் இருந்தது என்பதை பெருமையாக கருதுகின்றேன்...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்...!?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்

அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்

அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு

அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்....!!??

கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் ஜுவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்...

முதலில் சாதகனுக்குத் தன் உடலின் மேல் ஒரு அபிமானம் இருக்கும். அப்போது அவனுக்கு ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை அறிவு பூர்வமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பான். அதனால் அவன் தன் உடலுக்கு வரும் நன்மை, தீமைகள் எல்லாம் ஆன்மாவுக்கும் வருகிறது என்று தவறாக நினைக்கிறான். ஆன்மா எதுவும் செய்வதும் இல்லை, அந்தச் செயலால் வரும் விளைவுகளை அனுபவிப்பதும் இல்லை என்று அவனுக்குத் தெரியாததால் உடலையும் ஆன்மாவையும் பிணைத்து ஒன்றாகக் கருதுகின்றான். அதுதான் இங்கு கலங்கிய நீர் என்று கூறப்படுகிறது. இது அறியாமையால் வந்த விளைவு.

அறியாமையால் விளைந்தது என்றாலும், அறியாமை போகும் வரை அதைப் போக்க முயற்சிகள் தேவை. முயற்சிகள் சிரவண, மனன, நிதித்யாசன முறைகளில் செய்யப்படும். அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தியானித்தல் என்பதாகும். குருவிடம் ஆன்மாவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிதல் முதல் படி என்றால், மற்ற இரண்டு படிகளையும் ஒருவன் தன் முயற்சியால் விடாப்பிடியாகத் தாண்டவேண்டும். எப்போதும் குருவின் அருள் சாதகனுக்கு உண்டு என்பதால், அவனுடைய தனிப்பட்ட முயற்சிகளின் போதும் அவரது அருள் இருக்கும். முன்னது தூல வடிவில் இருந்தால், பின்னவை இரண்டும் நுண்ணிய வடிவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரமணர் சொல்கிறபடி புலியின் வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்ப முடியாதோ, அப்படியே குருவின் அருட்பார்வையில் வந்த சீடனும் முக்தி நிலையை அடையாது மீள முடியாது...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஞானம் என்றால் என்ன...? ஞானத்தை எப்படி விளக்குவது...?




ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஞானம் என்றால் என்ன...? ஞானத்தை எப்படி விளக்குவது...?

🔥புறத்தில் நடப்பவற்றை  எல்லாம்  பிரதிபலிப்பது நம் மனதின்  இயற்கை. நம் அறிவு முயற்சி செய்து  தான்  விரும்பியதை நம் மனம் பிரதிபலிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும்  போராடுகிறது..இந்த முடிவில்லா போராட்டம், ஒரு வீண்முயற்சி என்று நம் அறிவு புரிந்துக் கொள்ளும் பொழுது  தன் முயற்சியை முழுமையாக கைவிடுவது தான் ஞானம். இதுவே  அகசரணாகதி.... ஞானம் என்பது ஒரு 'அறிவுபூர்வமான புரிதல்' மட்டுமே.🔥

எல்லாம் அவன் செயல் - நம் மனதில் தோன்றும் இன்ப துன்பங்கள் எல்லாம் அவன் செயல் என்று பக்தி மார்க்கம் போதிக்கும் சரணாகதியும், இந்த அகசரணாகதி தான்.சும்மா இருப்பது என்பது நம் முயற்சியால் வருவதன்று...முயற்சியை கை விடுவதால் வருவது...இந்த உண்மையை  எவரும் கடை பிடித்து புரிந்துக் கொள்ள முடியும் ... இது நம் மனதிற்கானது...

இந்த 'ஞான புரிதலின்' விளைவு...?

ஞானப் புரிதலுக்கு பின் ... நம் மனம் விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது....சதா மகிழ்ச்சியையும் நிம்மதியையும், மனதிடம் தேடி கொண்டு இருந்த நம் அறிவு, தேடுதலை நிறுத்தி விடுகிறது. மனதில் ஓடும் உணர்வுகளுடன் போராடி புதுப்பித்துக் கொள்வதை நிறுத்தி விடுகிறது...அறிவின் குறுக்கீடோடு இல்லாத நம் மனம் நின்று விடுவதில்லை ... அது விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது.இதுவே விடுதலை ... இதுவே ஆன்மீகத்தில் உயர்வாக கருதப்படும் ... முக்தி ... இதுவே ஞான விடுதலை...இந்த விடுதலை ஒரு அனுபவம் அன்று. எல்லா  அனுபவங்களும் சுதந்திரமாக வந்து போவது தான் விடுதலை.

ஒரு குழந்தையானது இந்த விடுதலையுடன் தான் இருக்கின்றது. எல்லா ஞானிகளும் இந்த மன விடுதலையுடன் தான் வாழ்கின் றார்கள்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.. !

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻