ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

🔥🔥தன்னுடைய ஆத்மார்த்தமான பக்தனாகிய மாதராவிற்கு பகவான் எவ்வாறு விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய அறிவுருத்தினார் என்பதன் அனுபவ விளக்கம்.... 🔥🔥

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

🔥🔥தன்னுடைய ஆத்மார்த்தமான பக்தனாகிய  மாதராவிற்கு பகவான்  எவ்வாறு விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய அறிவுருத்தினார் என்பதன் அனுபவ விளக்கம்.... 🔥🔥

ராமதாசி என்பவர்  சீரடி வந்து இருக்கின்றார்...தினமும் குளித்தபின் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பாராம் ராமதாசி....பாபாவும் அவர் படிப்பதை கேட்பார்...ஒரு நாள் அவரிடம்,  தனக்கு வயிறு வலிக்கிறது அதனால் கடைக்குச் சென்று மருந்து வாங்கி வர வேண்டும் என ராம்தாசியைப் பணித்தாராம்....அவர் சென்றதும் சாமா  என்றழைக்கப்படும் திரு. மாதவராவ் தேஷ்பாண்டேயிடம் விஷ்ணு சகஸ்ரநாமம் என்ற புனித  புத்தகத்தைக் கொடுத்தாராம்...
மாதவராவ் என்பவர் பாபாவின் பேரன்பிற்குரித்தானவர்...இறுதிவரை பகவானுக்கு  தொண்டு புரிந்தவர்.."நீ இந்தப் புத்தகத்தை எடுத்துச் செல் மாதவராவ்...மேலும் தினமும் இதிலிருந்து ஒரு நாமமாவது கூறு என்றார்   பகவான் மாதவராவிடம் ...எனக்கு ஒரு முறை நெஞ்சு வலி ஏற்பட்டது....நான் ஹரி நாமம் கூறியபடி  இந்த புத்தகத்தை மார்போடு அணைத்துக்கொண்டேன் அப்போது எனது  நெஞ்சு  வலி நீங்கியது என்று கூறினார் பகவான்....திரும்பி வந்த ராமதாசி கோபம் அடைந்தார்...உடனே பாபா  உண்மையான பக்தன், ராம நாமம் சொல்பவர்  இப்படியா நடந்து கொள்வது என்று கூறினாராம் ராமதாசியிடம்.... நீ  அந்த புத்தகத்திற்குப் பதில் வேறொன்றை எடுத்துக் கொள் என்று கூறினார் பகவான் ராமதாசியிடம்.....

மாதவராவிற்கு  பகவான் ராமநாமம் பாராயணம் செய்யும்  பழக்கத்தை அன்று தான்  ஏற்படுத்தினார்...உயர்ந்த பக்தன் மாதராவிற்கு  நற்கதி அளிக்கவே சாயீ நாதர் புரிந்த லீலை  என நாமும்  உணர்ந்து தினமும் ராம நாமம் சொல்ல  உறுதி எடுத்துக் கொள்வோமாக....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...