ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

சென்னையிலிருந்து சிலர்  காசி யாத்திரை செல்ல முடிவெடுத்துள்ளனர்....அவர்கள் அற்புதமாக பக்தி பாடல்கள் பாடக்கூடிய திறமைகள் உள்ளவர்களாம்....அக்குழுவில் ஒரு கணவன்,மனைவியும் அவர் தமக்கையும்  இருந்தனர்..ஸ்ரீ சாயீயைப் பற்றி கேள்விப்பட்டு அவரைத் தரிசிக்க ஆவலுற்றனராம்...

கணவனுக்கு பகவான் அளிக்கும் தக்ஷிசிணையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது...மனைவியோ  பெரும்  பக்தி பகவானிடம்  கொண்டிருந்தாராம்...எனவே பகவான்  அந்த பெண்ணிற்கு மட்டும், அவள்  இஷ்ட தெய்வமான  சீதா ராமனைப்போல் காட்சி அளித்தாராம்...மறறவர்களுக்கோ சாயீநாதராக  காட்சி அளித்து இருக்கின்றார்..அப்பெண்மணி பரவச பேரானந்தத்தில் திளைத்தாராம்..தன் கணவனிடம் இதை மகிழ்வுடன் கூறினார்....கணவர் இந்த தெய்வீகக்  காட்சியை , அந்தப் பெண்மணியின்  கற்பனை என்று கேலி செய்திருக்கின்றார்..ஆனால் அப்பெண்மணி அதை பொருட்படுத்தவில்லை..உண்மையான பக்திக்கு விளம்பரமோ ஆடம்பரமோ தேவையில்லை...வெளிச்சம் போடவும் அவசியம் இல்லை பிறர் மெச்சவோ, புகழவோ பக்தி செய்ய தேவை இல்லை....மெய்யான பக்திக்கு ஸ்ரீ சாயீ தந்த பரிசும், ஆசியும்  என அறிந்து  ஸ்ரீ சாயீயின் பொற்ப்பாதங்களை வணங்குவோமாக..

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...