ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

🔥🔥பகவானின் அருட் பிரசாதமான உதீ என்கின்ற விபூதியின் மூலமாக எவ்வாறு பலவித நோயைக் குணப்படுத்தினார் என்பதன் விளக்கம்...🔥

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச  பொன்மொழிகள்....🙏🙏

🔥பகவானின் அருட் பிரசாதமான  உதீ என்கின்ற விபூதியின் மூலமாக எவ்வாறு பலவித  நோயைக்  குணப்படுத்தினார்  என்பதன் விளக்கம்...🔥

உயரிய பக்தர் சாந்தோர்கரின் மகள் பிரசவ வலியால் துன்புற்றார்...பகவான்  தக்க தருணத்தில்  தன்னுடைய  அருட்கரத்தால்  உதீ அனுப்பி  பிரசவ வலியிலிருந்து மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..சில  காலம் சென்றதும் சாந்தோர்கர் மருமகனும்  பேரனும் மேலுலகை அடைந்தனர்...இதனால் பெருத்த  சோகத்தில் மூழ்கிய சாந்தோர்கர்  "உங்கள் ஆசி கிட்டிய பிறகும்  இந்நிலை நேரலாமா  பகவானே " என்றாராம்...அதற்கு பகவான் "பிறப்பதும் இறப்பதும் முன்ஜென்ம கர்மாவின் பலன்....அதை என்னால் மாற்ற இயலாது....முன்கூட்டி நடப்பதை என்னால் அறிய முடிகிறது அவ்வளவே." என்றாராம்...நானா கூறுகின்றார் பகவானிடம்,  நான் சம்சார பந்தத்தை துறக்க விரும்புகிறேன்" என்கின்றார்......அதற்கு பகவான்  "நானா...!துக்கத்தினால் நீ பிதற்றுகிறாய்...இறுதிவரை அனைவருமே ஏதோ ஒரு தளையில் சிக்குகிறோம்..மற்றவர்கள் துயரை ஏற்கும் எனக்கே அது ஒரு தளைதான்....உலகில் மனிதன் ஏற்ற தாழ்வுடன் வாழ்வதாக நீ நினைக்கின்றாய்...ஆனால் அவரவர் கர்மா படிதான் அவை அமைகின்றன....

மனிதனுக்குப்  பகை, காம, க்ரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் ஆகியவை..இந்த ஆறும் மாயையால் தோன்றுவதாகும்..செல்வந்தர்கள் செடிகளைப்போல் பணிந்து நடக்க வேண்டும்....ஆனால் கொடியவர்களிடம் கடுமையாய்  நடக்க வேண்டும்....அற வழியில் பொருளீட்டி செலவு செய்ய வேண்டும்.ஆனால் அளவுக்கு மிஞ்சி தானம் செய்ய வேண்டாம்...பிறவிகளில் மானிட பிறவி உயர்ந்தது...அதுதான் தன்னைப் படைத்தவனை ஆராதிக்கிறது....உருவ வழிபாடு சிறந்தது..அதில்தான் மனம் லயித்து ஒரு நிலை படுகிறது....

ஹரி "யார்" என்று அறியாமல் பண்டரிபுரம் செல்வது வீண்...பிறர் மதிக்க பக்தியை பறை சாற்ற செல்வது வீண்....சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுங்கள்...ஆசையை அடக்கி மனத்தை இருத்தி ஆத்மாவை தூய்மையாய் வைத்திருங்கள்....நிம்மதி கிட்டும்"...இவ்வாறெல்லாம் பாபா செய்த போதனையால் நானா மனம் தெளிந்தாராம்...அடக்க வேண்டிய ஆறும் நாமெல்லாரும் கடக்க வேண்டியவை என்பதை உணர்ந்து சரணாகதி அடைவோம்..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...