ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

🔥🔥சீரடி பகவான் தன் பக்தர்களுக்கு நவ வித பக்தி என்றால் என்ன என்பதையும், அதன் மூல சூட்சமத்தையும் எவ்வாறு உபதேசம் செய்தார் என்பதைப் பற்றிய விளக்கம்... 🔥🔥🔥

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏

 🔥சீரடி பகவான் தன் பக்தர்களுக்கு  நவ வித பக்தி என்றால் என்ன என்பதையும், அதன் மூல  சூட்சமத்தையும்  எவ்வாறு  உபதேசம் செய்தார் என்பதைப் பற்றிய விளக்கம்...🔥

புனே நகரிலிருந்து ஆனந்தராவ் பதங்கர் என்பவர் சீரடி  வருகை புரிந்திருக்கின்றார்..வேதங்கள், புராணங்கள் யாவும்  கற்றும்  நிம்மதியும், மனதில்  தெளிவுமின்றி  காணப்பட்டார் பதங்கர்...பகவானை  வணங்கி நிம்மதிக்கு வழி என்ன என்று கூறுங்கள் என்று பிரார்த்தனை செய்கின்றார்....இதற்கு பகவான் அவரிடம் இவ்வாறு கூறினாராம்..

எமது குழந்தையே ஒன்றைக்கேள்.."இங்கு ஒரு வியாபாரி வந்தார்..அவர் முன் ஒரு குதிரை ஒன்பது சாணம் முட்டை  இட்டது..அவன் அதை கவனத்துடன் தனது  வேட்டி நுனியில் இட்டுக் கொண்டான்..இதனால் அவனுக்கு மன நிம்மதி கிட்டியது " என்று பகவான் சூட்சமமாக அறிவுருத்தினார்...பதங்கருக்கு ஒன்றும் விளங்கவில்லை ...பதங்கர் தன்னருகில் இருந்த  தாதா கேல்கரிடம்  கேட்டாராம்..எனக்குப் புரியவில்லை பகவான் உரைப்பது...உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் என்று கூறுகின்றார்...அதற்கு  கேள்கர் எனக்குப் புரிந்ததைக் கூறுகிறேன்..ஒன்பது சாண முட்டைகள்..என்பது  என்ன தெரியுமா..?

அவை உண்மையான பக்தியின்  ஒன்பது வடிவங்களாகும்....இறைவனின் நாமத்தை கேட்டல், நினைத்தல்,துதித்தல், பாதங்களில் வீழ்தல், அர்ச்சித்தல், சேவை செய்தல்,  பணிந்து வணங்கல் ,இறைவனுடன் தோழமை கொள்ளல், ஆத்ம நிவேதனம் செய்தல் ஆகியவை என்றாராம் ....பக்தி இல்லாத பூஜை,, இறை துதி, வேத புத்தகம் படித்தல்  இவை வீணே....நீங்களும் அந்த வியாபாரியாக உங்களைக் கருதி அந்த ஒன்பது நவவித பக்தியைப் பின்பற்றினால்,  இழந்த  நிம்மதி கிட்டும் என்றாராம் கேள்கர் பதங்கரிடம்.....

மறுநாள் பதங்கர்,  பகவானை  சந்தித்த பொது" அந்த ஒன்பது  முட்டைகளை சேகரித்தீரா.. ?"என்றாராம் பகவான்...."பதங்கர் கூறுகின்றார் பகவானே  உங்கள் கருணை இருந்தால் முடியும்" என்று உரைக்கின்றார்....மனம் ஒன்றாமல் ஒரு சடங்காகச் செய்வது பக்தி அல்ல....படிப்படியாக மனம், உடல் ,பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் பரிபூரணமாக இறைவனின் பாதத்தில் அர்ப்பணித்து சரணாகதி அடைவதே பக்தி என்பதே இதன் பொருள்....உண்மையான பக்தியின் மூல சூட்சமத்தை எளிமையான உவமானத்தை சுட்டிக் காண்பித்து பதங்கரை  கடைத்தேற்றம் அடைய வைத்து இருக்கின்றார் தாயுமானவர் சீரடி பகவான்....இன்றளவும் இவ்வாறே பகவான்,  தன் பக்தர்களை  உயரிய  சத்தியப் பாதையில் பயணிக்க வழிக்காட்டுகின்றார்..ஆகவே நாம்  பகவானிடம் முழுமையான  சரணாகதி அடைதலே,நாம் உயரிய நிலையை அடைய  அதிமுக்கியமாக   வழியாக கருத்தில் கொண்டு பகவானிடம் சரணாகதி அடைதல் வேண்டும்....ஓம்  ஶ்ரீ  சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...