ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏
ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏
🔥சீரடி பகவானின் தோற்ற வர்ணனை பற்றிய சிறு விளக்கம்...🔥
சீரடி பகவான் ஏறத்தாழ ஐந்தடி ஆறங்குலம் உயரமிருந்தார்..நடுத்தரமான தேக அமைப்பைக் கொண்டு இருந்தார்.. அவரது நிறம் சூரியனைப் போன்று பிரகாசமாக இருந்திருக்கின்றது...அவரது கண்கள் நீல நிறத்திலிருந்தன...அவை, கரும் இருட்டில் காரணம் காண முடியாத அளவுக்கு மாயப் பளபளப்பினைக் காட்டின. அவரது மூக்கின் தீர்க்கம் குறித்துக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கின்றது... சாய் ஷர்தநந்தாஜி, மேற்கூறிய சாய் பாபா பற்றிய தோற்ற விவரணைகளைத் தந்தபோது, மேலும் குறிப்பிடுபவை; அவருடைய சில பற்கள் விழுந்திருந்தன. மிச்சமிருந்தவை சுத்த வெள்ளையில் இருக்கவில்லை. அவர் என்றும் பற்களைத் தேய்த்தது கிடையாது. தினசரி காலை வேளையில் கொஞ்சம் தண்ணீரால் வாய் முழுவதையும் கொப்பளித்து மட்டும் வந்தார். அவர் காபி டீ போன்ற பானங்களை அருந்தியவர் கிடையாது. ஆனாலும் அப்படி பக்தர்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் தடை போட்டதில்லை. புகை பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்பது பற்றி ஒருவரிடத்தும் எப்போதும் அவர் காரணம் கூறியது கிடையாதாம்....
அவர் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த தலைப்பா என்கின்ற சிறிய துணி எப்போதாவது தான் மாற்றப்பட்டது. அது துவைக்கப்பட்டதே கிடையாது. அந்தத் துணியை மாற்ற விரும்பும்போது மட்டும் டெய்லருக்கு சொல்லி அனுப்புவார்: " எனக்கு ஒரு தலைத்துணி கொண்டு வா." தைத்து வரும்போது அதற்குத் தேவையான கூலியை விட அதிகமாகத் தந்தனுப்புவார். பகவான், மிகவும் குறைவாகத்தான் உரையாடுவாராம்... அமைதியாகவும் சாந்தமாகவும் தான் அநேகமாக இருப்பாராம்.. அவசியத் தேவை இருக்கும்போது மட்டும்தான் உரை.... வாய்விட்டு எப்போதுமே சிரித்தவரல்லர். ஆனால், மென்மையாய் ஓசையின்றி புன்னகைப்பது அதிகம்...
அதிகமான காலம் கண்களை மூடிய நிலையில் தான் அவர் அமர்ந்திருப்பாராம்...பக்தன் அவரது தரிசனத்துக்கு வந்திருக்கும்போது மட்டும் மெலிதான கடைக்கண் பார்வை விழிப்பாராம்... சில சமயங்களில் இதைக் கூட அவர் செய்ததில்லை.. குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியத்திலிருந்த அவர், அவைகளோடு சேர்த்துக் கொண்டு விளையாடுவதை இஷ்டப்பட்டிருக்கிறார்... மசூதிச் சுவரில் சாய்ந்தபடி ஆயாசமாய் ஒருமுறை கூட அவர் உட்கார்ந்திருந்தது கிடையாது. கால் நீட்டி உட்கார்ந்துக் கொண்டாலும் கூட சுவரில் சாயாது அதிலிருந்து ஓரிரு அடிகள் தள்ளி நடுவில் தான் அமர்ந்திருப்பார். சீரடியிலிருந்து கோயில்களை அவர் போய் பார்ப்பது அரிது.
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக