ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏
🔥🔥சீரடிபகவான் எவ்வாறு குணப்படுத்த முடியாத நோய்களைக் கூட எளிமையான வழியைக் கையாண்டு குணப்படுத்தினார் என்பதைப் பற்றிய விளக்கம் இங்கே..🔥🔥
தினமும் பாபா வீடுகளில் இரந்தே உண்பாராம் .....எனவே இவர் யாருக்காக அரைக்கிறார் என எண்ணி அனைவரும் வியப்பில் உற்று நோக்கினர்...ஊர் மக்களும் கூட சிலர் பகவானுக்கு அரைக்க ஒத்துழைப்பு கொடுத்தனர்...தங்களுக்கு தான் பகவான் அளிக்கப்போகிறார் என்றே எண்ணி அரைத்ததும் மாவை பங்கிட ஆரம்பித்தனராம்...இதைக் கண்ணுற்ற பகவான் பெருங்கோபம் கொண்டார்.....
"யாரைக் கேட்டு இதை எடுக்கின்றீர்கள்..?" என்று கூச்சலிட்டாராம்....மாவைக் கொண்டு போய் ஊர் எல்லையில் கொட்டக் கூறினாராம்.. ..அச்சமயம் நிலவிவந்த கொள்ளை நோயைத் தான் அவர் வெளியே கொட்டினார் என்பதை அனைவரும் அறிந்தனர் ....எல்லையில் கோதுமையை கொட்டி வியாதியை விரட்டினார்...பகவானின் வழிமுறை விநோதமானது.....ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டது...ஆனால் அனைத்து தீய வினைகளையும் அகற்றக்கூடியது என்பதை உணர வேண்டும்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக