ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏
🔥எமது அன்பார்ந்த குழந்தைகளே ...உங்ளைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருக்கும், பொருளுக்கும் தினமும் ஒரு முறையேனும் இரு கரம் கூப்பி நன்றியை செலுத்துங்கள்..🔥🔥
உனக்கு உதவிய உள்ளங்கள் நலமும், வளமும் பெற நன்றியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. உங்களுக்கு வார்த்தையாலோ, சொல்லாலோ, செயலாலோ பலப்படுத்தியவர்களுக்கு நன்றியை செலுத்துங்கள்.. ஏதாவது ஒருவிதத்தில் உங்களின் நன்றியுணர்வை திரும்ப செலுத்தி விடுங்கள்.. நீங்கள் திருப்பி செலுத்தாத ஒன்று கடனாக நிற்கும்... கடனாளியை இறைக்கூட மன்னிப்பதில்லை... எனது தாரக மந்திரம் நன்றியுணர்வே.. இந்த ஒன்று மட்டும் உங்களைப் பிடித்துக் கொண்டால்.. அதனின் மாயாஜால வித்தையில் நீ மெய் மறந்து தான் போவாய்... ஆம் உந்தன் மெய்க்குள் ஆடும் பொய்யான ஆணவம், அகங்காரம், கோபம், குரோதம், வெறுப்பு, காமம், மதம், இனம், ஜாதி, ஏழை, பணக்காரன் என அனைத்தையும் கொன்று பித்தாக்கி சித்தனாக்கும்.. இதை செயல்படுத்திப்பார் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் ஆற்றலும் உன்னை நோக்கி வருவதை காண்பாய்... அருளும், பொருளும், உறவுகளும் உன்னை நோக்கி குவியும்.....சகஸ்ரா விழிப்படைய நன்றியுணர்வின் அலைகளை பரவ விடுங்கள்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.. 🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக