ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏

🔥 சீரடியில் இன்றைக்கு புனிதமாக கருதி  நாம் வணங்கும்  வேம்படி ஸ்தாபனமானது,  எவ்வாறு  அன்று  அம்மரத்தினடியில்  சீரடி பகவானின் புனித  பொற்பாதத்தை ஸ்தாபனம் செய்தார்கள் என்பதன் சூட்சம விளக்கம்...🔥

(பி .வி. தியோ என்பவர் "சாயீ சத்சரித்திரம்* என்ற புத்தகத்தில் எழுதியபடி)பாய் க்ரிஷஞ்சி அளிபக்கர் என்பவர் அக்கல்கோட்   மகாராஜ் என்ற மகானின் பக்தராம்...அவரின் பாதுகைகளை வணங்க வேண்டும் என்று  அக்கல்கோட்  செல்ல இருந்தாராம்...அப்போது அவர் கனவில் அக்கல்கோட் மகாராஜ் தோன்றினாராம்..."இப்பொழுது சீரடிதான் என் இருப்பிடம்...அங்கு செல் என்றாராம்...அதன் பின் ராம்ராவ் கோதாரி என்ற மருத்துவர் தன் கம்பவுண்டரையும் நண்பர் பாய் க்ரிஷஞ்சியையும் சீரடிக்கு வருமாறு அழைத்தாராம்...அங்கு சென்றதும் திரு சாய் நாதரின் பக்தர்களாக மாறினார்களாம்...

முதன் முதலாக சாயீ வந்தமர்ந்த வேம்பு மரத்தடியில் அந்த சம்பவத்தின் நினைவாக அவரின் பாதத்தை பிரதிஷ்டை செய்ய விரும்பினாராம்.மருத்துவர் ராமராவ் அழகிய வடிவமைப்பு செய்தாராம்...கண்டோபா கோவிலில் இருந்த உபாசனை மகாராஜிடம் ஆலோசனை கேட்டாராம்..அவர் அந்த பாதுகைக்கு அருகில் ஒரு தாமரை சங்கு சக்ரம் போன்றவற்றையும் வடிவமைத்தாராம்...

கீழ்வரும்  சுலோகத்தையும் எழுதி கொடுத்தாராம்...

"சதா நிம்ப வ்ருக்ஷச்ய மூலாதிவாசத்

சுதா ஸ்ரவினம் திக்தமபிஅப்ரியந்தம் ,

தரும் கல்ப வ்ருக்ஷாதிகம் சாதயந்தம்

நமாமீஷ்வரம் சத்குரும் சாய் நாதம் "

பிறகு பாதுகை வடிவமைக்கப் பட்டு கண்டோபா கோவிலிலிருந்து துவாரகாமாயீக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டதாம்....திரு சாய் அதை தொட்டு ஆசிர்வதித்து  'இது இறைவனின் பாதம்...ஆகவே "வேம்பு மரத்தருகே பதியுங்கள்" என்றாராம்...பகவானின் பொற்பாதம் சிரவண மாதம்  பவுர்ணமி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...