ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

🔥🔥உயரிய பக்தர் மகல்சாபதி சீரடி  பகவானை சத்குருவாக ஏற்று,  நிலைமாறாத  சத்திய  அன்பினால்  தம்மை குருவோடு பிணைத்துக் கொண்டு,  எவ்வாறு  குருபக்தியைப் போற்றி   சேவையாற்றினார்   என்பதைப் பற்றிய விளக்கம்...🔥🔥

சிவனுக்கோர்  நந்தியைபோல் பாபாவின் உயரிய ஆத்மச்சீடர் மகல்சாபதி என்பவராவார்...மகல்சாபதி என்ற நற்குணவான் பாபாவின் அருளைப் பெற பக்தி, சிரத்தை, பூரண சரணாகதி என்று சிறந்து விளங்கினாராம்.....ஏழ்மை நிலையிலும் பிறரிடமிருந்து எதையும் பெற  மறுத்து விடுவார்...

ஒரு நாள் மகல்சாபதியை  தன் அருகே அழைத்தாராம் பகவான்....தான்  ஆழ்நிலை சமாதிக்கு செல்லப் போவதாகவும், தம் உடலைக் காக்க  பணிந்தாராம் பகவான், மகல்சாபதியிடம்..." முப்பத்தாறு  மணி நேரம் என் உடலருகே இருப்பீராக.

நான் திரும்பி வராவிடில் திறந்த வெளியில் புதைத்து விட்டு இரு கொடிகளை நட்டு விடு" என்றாராம்..பகவான்  வாக்கை தேவ வாக்காக எண்ணி மிக கவனத்தோடு  உடலைக் காத்தாராம் மகல்சாபதி.....ஊர் மக்கள் பாபா இறந்து விட்டார் என்று எண்ணினராம்.....

உடலை எரிக்கக் கூறி  மகல்சாபதியை ஊர் மக்கள்  வற்புறுத்தினார்களாம்....பக்த சீலர் மகல்சாபதியோ  வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்தாராம்...ஊண், உறக்கம், மனித உடல் தேவைகளை மறுத்து பாதுகாத்தாராம்....சமாதியிலிருந்து வெளி வந்து  பாபாவின் பரி பூரண ஆசியைப் பெற்றாராம்.

பாபாவுடன் சாவடியிலும், மசூதியிலும், இரவும் ,பகலும்  பகவான் சமாதியடையும் வரை  கழித்தாராம் மகல்சாபதி...பாபா அவரை வற்புறுத்தி மனைவியுடன் இருக்க பணித்தாராம்....வம்ச விருத்திக்கு வித்திட பணிந்தாராம்...மகன் பிறந்ததும் மீண்டும் பகவானிடமே வந்து சேர்ந்துவிட்டாராம்..

இத்தகைய உயரிய நற்குணத்தைப் பெற்று மிகச் சிறந்த சேவகனான மகல்சாபதியின் வரலாற்றை படித்து நாமும் அத்தகைய  நற் குணநலன்களைப் பெற்று, குருபக்தியைப் போற்றி, குருநாமத்தை ஜெபித்து, குருவின் பாதார விந்தங்களில் சரணடைந்து  குருவின் அருளாசிகளைப் பெற  முயற்சிக்க வேண்டும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...