ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

🔥சீரடி பகவான்  தன் பக்தர்களை  தன்பால் ஈர்த்து எவ்வாறு கடைத்தேற்றம் அடையச் செய்கின்றார் என்பதன் விளக்கம்...🔥

மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், அவரவர்கள் எடுத்த  பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக, அவர்களைத் தம் பக்கம் ஈர்த்து  உதவி செய்துப் பண்படுத்தி,ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச் செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயிநாதரின்  முக்கியப் பணியாகும்...அனைத்து  ஆத்மாக்களும், ஆன்மீக முன்னேற்றத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பது பற்றியும் அவர் தெளிவாக அறிந்திருக்கிறார்....

ஆகவே அனைத்து ஆத்மாக்களையும் நற்பயன் அளிக்கும் முறையில் கட்டுப்படுத்தி வழிகாட்டுகின்றார்... நம் சத்குருநாதராகிய பாபா அடிக்கடி கூறுவார் சத்சரிதத்தில்.. 'ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் இருந்தபோதும், என் பக்தரில் எவரேனும் ஒருவர் இறப்பைச் சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும் என்றும்,ஒவ்வொரு மனித உயிருக்குள்ளும் இருக்கின்ற மிக சூட்சமமான கருத்துக்களைக் கூட யான் அறிந்துக் கொள்ள முடியும்..ஏனென்றால் அனைவருக்குள்ளும் யானே வியாப்பித்து உள்ளேன் என்று கூறுகின்றார்....

ஒரு உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவைப் பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்....அவ்வாறு நல்ல சத்குரு கிடைத்து விட்டால் பிறவிப் பேற்றை எளிதில் அடையலாம். குருவானவர் நம் வாழும் வாழ்க்கை முறையிலும் கூட ,ஒரு சூட்சமத்தில் அங்கமாக மாறி நம்மை  நேர் வழியில் நடக்க நம்மை நெறிமுறைப் படுத்துவார்.. இந்த மனிதப் பிறவியின் துன்பங்களிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும்  விடுபட்டு ஆன்மீக முன்னேற்றம் காண்பதற்கே, நாம்  குருவையோ,தேவதா சக்திகளையோ பின்பற்றி,  அவர்கள் மூலமாக பிரார்த்தனைகள் , சாதனைகள், பூஜைகள் யோகப் பயிற்சிகள் செய்து  வாழ்வில் உயர்நிலையை அடைய முயற்சிக்கின்றோம். எனவே  மனித உயிர்களான ஜீவாத்மாக்களை, முழுமையான உண்மைப் பொருளாகிய ஆதி மூல சிவத்திடம்  அழைத்துச் செல்லக் கூடியவர்  சத்குரு மட்டுமே. . இத்தகைய சத்குருவானவர், ஆதி  மூல பேராற்றலோடு கலந்தவர் என்பதால்  என்பதால்  பிறப்பு, இறப்பு அற்றவர் ஆகின்றார்.. அவருடைய பக்தர்களின் பல பிறவிகளுக்கும் அவரே வழிகாட்டியாய் அமைகின்றார்.

பெற்றோர்கள் ஒரு பிறவியில் நம்முடன் தொடர்புடையவர்கள். ஆனால் ' ஸ்ரீ சாயிபாபா ' பல பிறவிகளாக நம்முடன் தொடர்பு உடையவராக இருக்கின்றார்.. தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என எல்லா மனித உறவுகளும் இறப்பு வரையே நம்மோடு தொடர்பில்  கூட வரமுடியும்... ஆனால், பாபா ஒருவர் மட்டும்தான் தமது பக்தர்களாகிய நமது இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும். அவரே முழுமுதற் கடவுளாக இருந்து அனைத்து நிலைகளிலும் உயர்ந்த தன்மைகளை  நமக்குள் வர வைப்பார்...எனவே குருவை எதிர்பார்ப்பில்லாமல் ஆத்மார்த்தமாக சரணடையுங்கள். ...அவர் தூயவழியில் நம்மை வழிநடத்தி அந்த திருவாகிய  ஆதி மூல சிவத்திடம்  கொண்டு சேர்ப்பார்..ஆகவே அன்பின் பிறப்பிடமான சாயீ நாதரை  குருவாக ஏற்று.,அவருக்கு அடி பணிந்து அகங்காரமில்லாமல், உள்ளன்போடு ஏற்றுக் கொண்டு வாழ்வில் உயரிய நிலையை அடைவோமாக...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...