ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

🔥யான் அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற வியாப்பித்து  இருக்கின்றேன் என்பதை எவ்வாறு பகவான்  உணர்த்துகின்றார் என்பதன் உவமானப் பெருள் விளக்கம்...🔥

ஒரு சமயம் சீரடியில் பலத்த மழை பொழிந்தது...பகவான்  அசராமல் சமாதி நிலையிலே இருந்தாராம்...வேப்ப மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாராம்.குப்பை கூளங்கள் மேல் விழுந்த போதும் அவ்வாறே இருந்தாராம்....அந்நிலையில் அவரைக்கண்ட மக்கள் வருந்தினாராம்....வற்புறுத்தி ஒரு பாழடைந்த மசூதியில் இருக்க வைத்தனராம்...அதுவே பின்னர் இந்துக்களின் துவாரகமாயி ஆயிற்றாம் முகமதியர் மசூதிக்கு வந்து அவர்கள் மரபில் தொழுவாராம்.

இந்துக்கள் துவாரகமாயீ  வந்து  வணங்குவார்களாம்....இருவரும் பாபாவை உறவும் உரிமையும் கொண்டாடினாராம்...இதனால் இருவரும்  விரோதம்  கொள்ள ஆரம்பித்தனராம்...ஒரு முறை மகல்சாபதி பாபாவிற்குச் சேவை செய்து கொண்டிருந்தாராம்....அங்கு வந்த இஸ்லாமியர் அவரைத் தாக்கினாராம்"பாபா..! பாபா..!" என்று மகால்சாபதி அலறினாராம் இதைக் கண்ணுற்ற பாபாமிகுந்த சினம் உற்றாராம்..சைத்தான்களே..! என்னை என் அடிக்கிறீர்கள்" என்றாராம் பகவான்...."நாங்கள் மகல்சாபதியைத் தானே அடிக்கிறோம்" என்றனராம்...மகல்சாபதியுள் நானல்லவா இருக்கிறேன் "என்றாராம்.....என்னிடம் சரணடைந்தவருள் நான் இருப்பேன் என்றாராம்.

"மதம் பிடித்தவருள் மாதவன் உறையான் என்றாராம்....தவறை உணர்ந்தவர்கள் பகவான்  காலில் வீழ்ந்தனராம்...

"எல்லார்க்கும் இறைவன் ஒருவனே" என்ற தத்துவ பொருளாம்.. சாயீ  மகாராஜனை  வணங்குவோம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...