ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..🙏🙏🙏
🔥🔥ஸ்ரீசீரடி சாய்பாபாவின் சாவடி ஊர்வலம் பற்றிய வர்ணனை விளக்கம்...சீரடி பகவான் வாழ்ந்த காலத்தில் உருவான சிறப்புமிக்க நிகழ்வாக இதனை குறிப்பிடலாம்.. ...🔥🔥
சூரியன் உதித்ததும் துதி செய்ய வேண்டிய நாமம் ஓம் ஸ்ரீ சாய்ராம் என்பதாகும்...நடக்கும் போதும் நிற்கும்போதும் துதி செய்யுங்கள்...எல்லாம் நீயே... என்றும் நீயே...என்று கூறி அனைத்தையும் பகவான் பாதகமலத்தில் அர்பணியுங்கள்...நீங்கள் உறங்குமுன் சாய் சத்சரித்திரத்தை படித்து விட்டு உறங்கச் செல்லுங்கள்...மகிழ்ந்தே உறங்கிட படியுங்கள்...பாபா ஒரு நாள் மசூதியிலும் ஒருநாள் சாவடியிலும் உறங்குவதுண்டு...சாவடிக்கு பகவான் ஊர்வலம் செல்லும் காட்சியை நித்தம் மனதில் எண்ணியே பக்தர்கள் அனைவரும் உறங்குவார்கள்...சாவடிக்கு செல்லு முன் பக்தர்கள் கீதங்களும், வேத கோஷங்களும் ,வண்ண பட்டாசுகளும் முழங்கி ஒளிருமாம்..ஒருபுறம் பல்லக்கு ஒன்றை அலங்கரித்து வைத்திருப்பார்களாம்...அருகே தெய்வீக துளசி மாடத்தருகே பாபா ஆசனத்தில் வீற்றிருப்பாராம்...தபலா , மிருதங்கம், தாளக்கட்டை, ஆகியவற்றை பக்தர்கள் இசைப்பார்கள்...பகவானின் குதிரை சியாமாவையும் அலங்கரித்திருப்பார்கள்...
தாத்யா பாடீல் பகவானைக் கைத்தாங்கலாகப் பிடித்து கைவேலைப்பாடு செய்த சால்வையை அணிவிப்பாராம்...பகவான் அவரது வழக்கமான கப்னி ஆடையை அணிந்திருப்பாராம்...கைத்தடியையும் எடுத்துக்கொள்வாராம்...மகல்சாபதியும் தாத்யா பாடிலும், பகவான் இரு புறமும் காவலாக இருப்பார்களாம்...பக்தர்கள் திரளாக நின்று நாம கோஷமிடுவார்கள்...ஹரிநாமத்தையும், சாயீ நாமத்தையும் முழங்கியபடி ஊர்வலம் செல்வார்களாம்..சாவடி வந்ததும் பாபா ஒளி பிழம்பாக காட்சி தருவாராம்..சாவடியையும் பக்தர்கள் சிறப்பாக விளக்குகளுடன் அலங்கரித்திருப்பார்கள்...பாபா ஆசனத்தில் அமர்ந்ததும் அவர் தலையில் கிரீடம் சூட்டியும் ...ஆரத்தி எடுத்தும் வணங்கி மகிழ்வதுண்டு.... பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக வணங்கி விடை பெருவார்கள்...பகவான் இந்த சேவைகளை தன் பக்தர்களை மகிழ்விக்கவே ஏற்றுக்கொண்டாரே அன்றி அதில் அவருக்கு எந்த ஈடுபாடும் இணக்கமும் இல்லை என்பதை உணர வேண்டும்....பகவான் சாட்சிநாதராக இருந்துக் கொண்டு எதிலும் இணக்கமாக்கிக் கொள்ளாமல் வீற்றிருந்தார்...ஆகவே சாட்சி நாதராகிய சீரடி பகவானை சரணாகதி அடைந்து உயரியத் தன்மையைப் பெறுவோமாக..
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக