சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்...

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய  நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச  அருள்மொழிகள்..🙏🏼🙏🏻🙏🏻.

ஶ்ரீசீரடி சாய் பகவான் இன்றும் முழு சக்தியோடு,  தன் சூட்சம சரீரத்தில் அண்ட சராசரமெங்கும் இயங்கிக் கொண்டு இருக்கின்றார் என்பதில் ஐயம் வேண்டாம....சீரடி பகவான், நாம்  எண்ண அதிர்விற்கு ஏற்றாற் போல் தீர்வைத் தர முழு வீச்சுடன் செயல்பட்டு ஆசிர்வதிப்பார்... பாபாவை புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் சீரடி பாபாவின்  பேராற்றலையும், பேரன்பையும் அனுபவித்து தான் உணர வேண்டும்..பகவான் பாபா  இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறாரா என்று பலருக்கு சந்தேகம் எழலாம்..அவர் வாழும் காலத்தில் இருந்த வீர்ய பேராற்றலை விட ,அதாவது  மகாசமாதி ஆனபிறகு, இன்னும் அதிக சுறுசுறுப்பாக  எங்கும் உலா வருகின்றார்..இது பலரது சாய் பக்தர்களின் வாழ்வில் நடந்து வருகின்றது....

ஆத்மார்த்தமான அன்புடன், நிலைமாறாத பக்தியுடன், உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தர்கள், இன்றும்  பாபாவுடன் தொடர்பு கொள்கின்றனர்.. எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் , பகவான்  தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்  தெரியுமா....தாமோதர் ராசனேயிடம் ," என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் " என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் "தாயே! நான் எங்கும் போகவில்லை என்றும், என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்" என்றும், " என்னுடைய சமாதியிலிருந்தும் நான்முழு வீச்சுடன்  இயங்குவேன்" என்றும் கூறியிருக்கின்றார்...

பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து விபூதியை  உண்டு பண்ணுவது போன்றவற்றைச் செய்தும், சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, போன்ற தோற்ற மாயையால் எதையோ  உருவாக்கினால் மட்டும்  பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது...பாபாவின் பேராற்றல் ஆராயாச்சிக்கு அப்பாற்பட்டது... அதனை உணர்ந்து தெளிந்து அனுபூதி அடைந்தால் மட்டுமே, அவரின் எல்லையற்ற பேராற்றலை கணித்துச் சொல்ல முடியும்.. அவர் எங்கும்  நிறைந்த பரஞ்சோதியாய், பரமாத்மாவாய்,  கற்பக விருக்ஷமாய், ஏகாக்ஷரமாய் எகாந்தமாய்,ஏகமாய் அண்ட சராசரமெங்கும் நீக்கமற வியாபித்து கொண்டிருப்பவர்...அவரின்  ஈடு இணையில்லா ஆற்றலை உணர,அவரின்பால் ஆத்மார்த்தமாக தூய சத்திய  அன்புடன், அவர் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, நம்மை அவரின் பால்  பிணைத்துக் கொள்ள வேண்டும்....நாம் எதையும் கேட்காமலேயே விரும்பியது அனைத்தையும் கிடைக்கச் செய்வார்..

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்..🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥சீரடி பகவான் தன் பக்தர்களிடம் எவ்வாறு மிகுந்த விழிப்புணர்வுடன் உற்று நோக்கி கடைத்தேற்றம் அடையச் செய்கின்றார் என்பதை சுட்டிக் காண்பிக்க உவமானத்துடன் விளக்கம் இங்கே....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின்  உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥சீரடி பகவான் தன் பக்தர்களிடம் எவ்வாறு மிகுந்த விழிப்புணர்வுடன்  உற்று நோக்கி கடைத்தேற்றம் அடையச் செய்கின்றார் என்பதை  சுட்டிக்காண்பிக்க உவமானத்துடன் விளக்கம் இங்கே...🔥

தன் இளங்கன்றை பசு எவ்வாறு நேசிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள்...அதன் மடி எப்போதும் நிறைந்திருக்கின்றது...கன்று பால் வேண்டி மடியை முட்டும்போது தடையின்றி பால் பெருக்கெடுக்கின்றது..அவ்வாறாகவே  தாயாரும் தக்க தருணத்தில் தன் குழந்தையின் பசியறிந்து முலையமுது தந்து ஊட்டுகின்றாள்.. அதற்கு ஆடை அழகுற அணிவிப்பதிலும், சிறப்புச் சிங்காரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகின்றாள்...குழந்தை எதைப்பற்றியும் அறிவதுமில்லை, கவலையுறுவதுமில்லை... ஆயின் தன் குழந்தை நன்றாக உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கபட்டு இருப்பதைக் கண்ணுறும் தாயின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை....

தாயன்பு விசித்திரமானது.. அசாதாரணமானது,. பற்றில்லாதது,...இணையில்லாதது...ஈடு இல்லாதது...எதிலும் ஒப்பிட முடியாதது.. தமது அடியவர்களிடம்  சத்குருவும் இத்தகைய தாயன்பை விட மேலான  அன்பை  காண்பிக்கின்றார்கள்...இத்தகைய அன்பே சாய்பகவான்  என்னிடம் கொண்டிருந்தது...  அதைப் பற்றிய நிகழ்ச்சியே கீழ்வருமாறு....

பகவானை   ஆத்மார்த்தமாக அன்புடன் பூஜித்த பக்தர் ஒருவர் கூறுகின்றார்....

நான்  அரசாங்க வேலையிலிருந்து 1916-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்...கௌரவமாக என் குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குத் தீர்மானித்துத் தரப்பட்ட உதவித்தொகை  போதவில்லை...குருபூர்ணிமா அன்று நான் சீரடிக்குச் சென்றிருந்தேன்...அங்கு அண்ணா சிஞ்சணீகர் அவராகவே பகவானிடம் எனக்காக வேண்டினார்..."தயவு செய்து அவரை அன்புடன் நோக்குங்கள்...அவர் பெறும்  உதவித்தொகை  அறவே போதாது...அவரது குடும்பமோ வளர்ந்து வருகிறது...அவருக்கு வேறு வேலை ஏதும் கொடுங்கள் என்று வேண்டுகின்றார்..."

பகவான்  பதில் அளிக்கின்றார்.. "அவர் வேறு ஏதாவது வேலை பெறுவார்...ஆயின், இப்போது எனக்குப் பணி செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்...அவரது உணவு எப்போதும் நிறைந்திருக்கும்....ஒருபோதும் காலியாய் இராது...அவர் தனது கவனம் அனைத்தையும் என்பால் திருப்பி நாத்திகர்கள், மதப்பற்று அற்றவர்கள், கொடுமையாளர்கள்  இவர்களின் கூட்டுறவைத் தவிர்த்து, எல்லோரிடமும் பணிவாகவும், அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும், உயிராலும் எம்மை  வணங்க வேண்டும்...  இதைச் செய்வாராகில் அவர் எல்லையற்ற பேரின்பத்தை அடைவார் என்று அறிவுருத்தினார் பகவான்...உடனே  அதற்கு கீழ்படிந்து பகவான் பாதகமலத்தில் சரணாகதி அடைந்தார் பக்தர்..நாமும் இவ்வாறாக நமது தாயுமானவர் சத்குருநாதர் சீரடி பகவானின் அன்பைப் பெற ஆழமாக தூய்மையான அன்புடன், ஆத்மார்த்தமாக நிலைமாறாது தன்மையில் பூஜித்து, நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டு பிணைத்துக் கொண்டோமேயானால் சாய் மாதாவின் தாயன்பைப் பெற இயலும்...ஆகவே சாயீயைப் பணிவோம்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥ஶ்ரீசீரடி பகவானின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும் என்பதை மறவாதீர்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச   அருள்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻.

🔥ஶ்ரீசீரடி  பகவானின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு  (தலையெழுத்துக்கு) ஒப்பாகும்  என்பதை  மறவாதீர்...🔥

சீரடி பகவான்  தேகத்துடன் இல்லை...ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் செய்து பாதுகாத்து வருகின்றார்...  தேகத்தை விடுத்துவிட்டதால்  பகவான்  வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் என்று  நினைக்க வேண்டாம்... ஏனெனில் பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும்..நம்பிக்கையுடன் அற்புத அனுபவத்திற்காக காத்திருங்கள்... .உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில் நடக்கும்...எதிலும் பொறுமை அவசியமாகிறது...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

🔥🔥ஶ்ரீசீரடி பகவான், தன்னுடைய பேராற்றலாள் தன்னை நாடி வந்த பக்தர்களின் வேண்டுதலை ஏற்று, எவ்வாறு தீர்க்க முடியாத நோய்களுக்கு தீர்வு வழங்கினார் என்பதன் விளக்கம்🔥🔥.

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥ஶ்ரீசீரடி பகவான், தன்னுடைய பேராற்றலாள்  தன்னை நாடி வந்த பக்தர்களின் வேண்டுதலை    ஏற்று, எவ்வாறு  தீர்க்க முடியாத நோய்களுக்கு தீர்வு வழங்கினார் என்பதன் விளக்கம்...🔥

மும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்..அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது...  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். தன் கால் ஊனத்திற்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்...அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.

1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார்..அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார். பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார்..

 பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார்.. இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை...ஆதவே சாயீயைப் பணிவோம்.. அண்ட சராசரமெங்கும் சாந்தி நிலவ துணைப்புரிவோம்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்  .🙏🏻🙏🏻🙏🏻.

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥 உங்களுடைய மனதில் துன்பத் துயரங்கள், அச்சம், பயம், சோகம், விரக்தி போன்றவைகள் அழுத்துகிற வேளையில், பகவானை நினைத்துக் கொள்ளுங்கள்..சாயீன் நாமத்தை உச்சரித்து வாருங்கள்... 🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥 உங்களுடைய  மனதில் துன்பத் துயரங்கள், அச்சம், பயம், சோகம், விரக்தி போன்றவைகள்  அழுத்துகிற வேளையில், பகவானை  நினைத்துக் கொள்ளுங்கள்..சாயீன் நாமத்தை உச்சரித்து வாருங்கள்... 🔥

எனக்கு மட்டும் ஏன் இப்படி  என்று புலம்பாதவர்களே இல்லை. ‘நான் ஒரு தப்பும் செய்யவில்லை...’ என்று கண்ணீர் விடாதவர்களே இல்லை எனலாம்...எவ்வளவு சம்பாதித்தும் நாலுகாசு சேர்க்க முடியலையே’ என்று கலங்காதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்?..ஆகவே இது போன்ற தருணங்களில், எதற்கும் கவலைப்படாமல் மேன்மேலும்  பகவானுடன் ஆழமாக பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்....

தினமும் காலையிலும் மாலையிலும்  சீரடி பாபாவின் காயத்ரி மந்திரத்தைக் கூறவும்.... மனக்கலக்கத்தில் இருந்து உங்களை விடுவித்து , உங்களுடைய  துக்கத்தையெல்லாம் போக்கி அருளுவார் பகவான்.... உங்கள் மீது விழுந்த  தேவையற்ற  பழிகளைப் போக்கி  மாற்றி, அப்பழுக்கில்லாதவர் என்பதை உலகுக்கு உணர்த்துவார்....

சீரடி பகவான்  காயத்ரி மந்திரம் இதோ உங்களுக்காக...

🔥ஓம் ஶ்ரீ சீரடி  சாயீநிவாஸாய வித்மஹே சர்வ தேவாய தீமஹி தந்நோ  சர்வ ப்ரசோதயாத் 🔥

மேலும் மேற்க்கண்ட பகவானின் தியான சுலோகத்தைக் கூறி  பத்து நிமிடமாவது அமர்ந்து, கண்கள் மூடி, பகவானை  பிரார்த்தனை செய்யுங்கள்...

🔥 பத்ரி க்ராம  ஸமத் புதம் துவாரகா மாயீ வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் சாயீ  நாதம் நமாமி...🔥

மேற்க்கண்ட  பகவான் சுலோகத்தையும் ஆத்மார்த்தமாக  கூறி வாருங்கள் ...பகவானின் ஆசியும் அனுக்கிரகமும் எளிதாகக் கிடைக்கும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏

🔥🔥எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது..... ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும்...வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது என்பதை மனதில் இருத்திக்கொள்வீராக.🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏

🔥எவ்வளவு துன்பம் தரும்  சோதனையாக இருந்தாலும், ஒரு  சிஷ்யன் தன்  குருதேவரைத் துறந்துவிடக்கூடாது..ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும்...வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது என்பதை மனதில் இருத்திக்கொள்வீராக...🔥

குருவின் கிருபை பக்த வத்சலனான சத்குரு தன கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார் ..அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை.உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்.....

பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடிஅலைகிறேன்.... வெளிவேஷம் போடுபவர்களுக்கு நான் என்றுமே அகப்படுவதில்லை....

உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக..மனத்தில் அணுவளவு தயக்கமும் வேண்டா....என்னுடைய வார்த்தைகளில் முழுவிசுவாசம் வைத்து மனதை திடப்படுத்திக் கொள்வீராக"...

என்னுடைய  காரியங்களை  நானே செய்கிறேன்  என்று சொல்லுவது அகங்காரம்... சூத்ரதாரி சாயீயே...இயக்கம் முழுக்க முழுக்க சாயீநாதனைச் சேர்ந்ததே....அகங்காரத்தை பாபாவின் பாதத்தில் சமர்பித்துவிட்டால் அபாரமான சுகம் கிடைக்கும் என்பதனை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ  சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥ஏன் விழிப்புணர்வுத் தியானத்தை, நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதனால் நமக்கு கிடைக்கப்போகும் பலாபலன்கள் என்ன என்பதனையும், மேலும் அதில் உள்ள மூல சூட்சமம் என்ன என்பதன் விளக்கம்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥ஏன் விழிப்புணர்வுத் தியானத்தை, நாம் அனைவரும்   மேற்கொள்ள வேண்டும். அதனால்  நமக்கு கிடைக்கப்போகும்  பலாபலன்கள் என்ன என்பதனையும்,  மேலும்  அதில் உள்ள மூல சூட்சமம் என்ன என்பதன் விளக்கம்...🔥🔥

விழிப்புணர்வு தியானம் என்பது.. நீங்கள்  செய்கின்ற அன்றாட செயல்பாடுகளையும்,  மனதில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பையும்,  நீங்கள் அதனோடு செயல்புரியாமல், பற்றில்லாமல், சாட்சியாக இருந்து கவனிப்பது என்பதாகும்....உங்களது   வாழ்க்கை செல்பாடுகளை, சாட்சியுடன் கூடிய  விழிப்புணர்வோடு   பற்றில்லாமல் செய்வீராக.... நீங்கள் தான் அதனை செய்வதாக   எண்ணாமல் , கடவுளின்   கைகளில்  ஒரு கருவியாக   அதாவது சாட்சியாக இருந்து  செயல்படுவீராக.. அந்த  செயலின்  பலனை கடவுளிடம்  சமர்ப்பித்து விடுவீராக...அதனால்  அந்த  செயல்களின் நன்மையோ அல்லது தீமையோ  உங்களைச் சாராது...அது  கட்டுப்படுத்தாது.. அதன் தாக்கமானது உங்களை எவ்வித  துன்பத்திற்கும் உள்ளாக்காது....எந்த செயலைச் செய்தாலும், நீங்கள் செய்கின்ற செயலையும் கவனித்துக் கொண்டே ,உங்களுடைய   மனதில் தோன்றும் எண்ணங்களையும் கவனித்தல் வேண்டும்... 

இவ்வாறு கவனிக்க, கவனிக்க உடலும், மனமும்  வேறாகின்றது. இவ்வாறு நீங்கள் செயலை சாட்சியாக கவனிக்கும் போது ,  நான் என்ற தன்மை மாற்றமடைந்து, நீங்கள் செய்த செயலோடு ஒன்றி விடுவீர்கள்..அந்தச் செயல் செய்த களைப்பு ஏற்படாது...ஏனெனில்  நான் என்பது இங்கு  இல்லாமல் போகின்றீர்கள்.... நீங்கள் அங்கே வெறும் சாட்சியே... மூன்றாவதாக ஒன்று அதாவது நான் என்பது நீங்கி,  சாட்சியாக  உள்ள  நிலையில் மூல இறையாற்றல் உங்களை இயக்க ஆரம்பித்து விடும்...அதே சமயத்தில்,  நீங்கள் மனதையும் கவனித்தீர்களேயானால் மனதில் தோன்றும் எண்ண அலைகளும் அழிந்து செயலிழந்து விடும்..ஏனெனில் நீங்கள் மனதை  சாட்சியாக, விழிப்புணர்வோடு,தோன்ற கூடிய அனைத்து எண்ணங்களை மறுப்பின்றி, எந்த  எதிர் சலனமும் இன்றி,  எதிர்ப்பின்றி  கவனிக்கும் போது மனதில் தோன்றும் எண்ண அலைகளை  ஏற்றுக் கொள்கிறீர்கள்...இது ஒரு மாயை செயலிழப்பு  தன்மையாகவே இருக்கும்.. ஆனால் இவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது, எண்ண அலைகள்  போராடாமல் ஒரு சுழற்சியில் செயலிழந்து விடும் ...ஏனென்றால் மனதில் தோன்றிய  எண்ணங்களை  ஏற்றுக் கொண்டதால், தோன்றிய அனைத்து விதமான எண்ணங்களின் தொகுப்பு செயல்புரியாமல் அமைதியடையும்... நீங்கள் அந்த எண்ணத்தின் அதிர்வை அனுமதித்ததன் காரணமாக , அதன் வீர்யம் இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பிக்கும். 

ஆனால்  விழிப்புணர்வுடன் சாட்சியாக  கவனித்தல் என்பதை, எவ்வித முன்னேற்பாடும் இன்றி   போராடாமல் கவனிக்க வேண்டும்.... இயல்பாக  முடிந்தளவு கவனித்தால் போதுமானது... உங்களை கவனிக்க வேண்டும் என்ற தன்மையை  திணிக்காதீர்கள்...நீங்கள் வலுக்கட்டாயமாக  கவனித்துத் தான் ஆக வேண்டும் என்று கவனித்தால், அது இயல்புத் தன்மை மாறிவிடும். இது ஒரு வித செயற்கைத் தன்மையை ஏற்படுத்தும்..இதன் காரணமாக பஞ்சேந்திரியங்களின் மூலமாக ஈர்த்த  எண்ணங்களின் தாக்கம் இருந்துக் கொண்டே இருக்கும்..விழிப்புணர்வுடன்  தான் இருக்கின்றோமா என்பதை  உங்களுக்குள்ளே கேட்டு நினைவுப் படுத்திக்  கொள்ளுங்கள்... இந்தப் பயிற்சியை,  எதிலும் பற்று வைக்காமல் சாட்சியாக இருந்து விழிப்புணர்வுத் தியானத்தை  மேற்க் கொண்டீர்கள் என்றால் வாழ்வே தியானமாகும். ..நீங்கள் செய்த அனைத்து செயலும் முழுமையடைந்து சிறந்த தீர்வைப்  பெற்றுத் தரும்....ஏனெனில் அந்தச் செயலை நீங்கள் செய்யவில்லை..சாட்சியாக  உங்களை நிலைநிறுத்திக் கொண்டு, இறையாற்றலை உங்களை இயக்க அனுமதிக்கிறீர்கள்....ஏனெனில் நீங்கள், நான் என்ற தன்மையை எடுக்காமல், பார்வையாளராக, விழிப்புணர்வுடன், பற்றில்லாமல் சாட்சியாக இருக்கும் போது, நான் என்பது முற்றிலும் மறைந்து, நாம் என்ற தன்மையில்  இறையின்  வசம்,  உங்களை ஒப்படைத்து விடுகிறீர்கள்... இந்த நிலையானது உங்களுக்குத்  தெரியாமலேயே, ஒருவித முழு சரணாகதி நிலையில்  மூல ஆற்றலோடு  சென்று விடுகிறீர்கள்...இப்போது உடலும், மனமும்  வேறாகின்றது...இந்த நிலையில் நமக்குள்ளே என்றென்றும்  நிலைத்து இருக்கின்ற   மூல சிவத்திற்குள் நிலைப் பெறுவோம் ....இந்த  நிலையில்   இறைசக்தி முழுவதும் உங்களை இயக்க ஆரம்பித்து விடும்ட இதுவே விழிப்புணர்வு தியானமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது....

இந்த நிலையைத் தான் குரு உபதேசம் செய்தின்றார்... எதிலும் பற்றில்லாமல் பற்றுங்கள் என்றும், சாட்சியாக இருங்கள் என்று குரு போதிக்கின்றார்.. .இந்த தியானத்தை கடைப்பிடிக்க.. உங்களுக்கு இறையாற்றலின் மூல  சூட்சமத்தைப் பற்றிய புரிதலும், உணர்தலும் வரும்.. நமக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தி என்கிற இறையாற்றல்  இயக்க ஆரம்பித்து விட்டால் உங்களின் வாழ்க்கை ஒரு விதமான தெய்வீகத் தன்மையை அடைந்து விடும்....நீங்கள் தொட்டது துலங்கும்..வாக்கு சித்திப்பெறும்....ஏனெனில் உம்மை இயக்குவது  இறையாற்றலாக  இருக்க எதிலும்  தோற்றுப் போக மாட்டோம்.....

நாம் அனைவரும்  செய்ய வேண்டியது விழிப்புணர்வு தியானத்தைக்  கடைப்பிடித்து, அதாவது விழிப்புணர்வோடு  செயல் மற்றும் மனதையும் கவனித்து, அனைத்தையும் குருவின் பால் ஒப்படைத்து நாம் வெற்றிடமாவோம்.... நானை இழந்து அதாவது நான் என்கின்ற சரீர பாவனை மற்றும் அகந்தையை இழந்து  வெற்றிடத்தை நமக்குள் உருவாக்குவோம்....வெற்றிடத்தில் மட்டுமே  குருத் தன்மை  இயங்க ஆரம்பிக்கும்.... .வெற்றிடமே வெட்டவெளி தரிசனத்தைப் பெறச் செய்யும். .ஆகவே இதனை உணர்ந்து,இத் தியானத்தை பின்பற்றி  குருவின் கரம் பிடித்து நம்மை மேன்மைப்படுத்திக் கொள்வோமாக....

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

🔥🔥தன் பக்தனுடைய மனதில் தோன்றிய கோவில் எழுப்பும் ஆவலை தீர்ப்பதற்காக பகவான் அறிவுருத்துகின்றார் ... உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு.. ! இனிமேல் இங்கு வராதே.. ! என்று குறிப்பால் உணர்த்திய விளக்கம்..🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥தன் பக்தனுடைய  மனதில் தோன்றிய கோவில் எழுப்பும்  ஆவலை தீர்ப்பதற்காக பகவான் அறிவுருத்துகின்றார் ... உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு.. ! இனிமேல் இங்கு வராதே...என்று  குறிப்பால்  உணர்த்திய விளக்கம்..🔥

மும்பைக்கு  அருகில் அக்ரூல்  என்னுமிடத்தில் வசித்த  திரு.கேசவ்பிரதான் என்பவர் 1916-ல் தன் நண்பரோடு  சீரடிக்கு பாபாவைத்  தரிசிக்க வருகின்றார்...அவர் பாபாவிடம், "பாபா..! என்னிடம் அன்பு கொண்ட எல்லோரும் என் குழந்தைகளே என்கிறீர்கள்..!  அப்படியானால் ஏன் நீங்கள் அக்ரூலுக்கு வரக்கூடாது..?"  என்று கேட்கின்றார்....

பகவான்  அவரிடம் தன் படம் ஒன்றைக் கொடுத்து,  "உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு..!  இனிமேல் இங்கு வராதே.. !"  என்கின்றார்...பாபாவின் உத்தரவுக்கு உட்பட்டு , கேசவ்பிரதான் தனது சொந்த ஊரான அக்ரூலில் பாபாவுக்கு கோவில் கட்டினார்.... அந்த கோவிலில் பாபாவின் தரிசனம் வேண்டி வந்தவர்கள் பலரும் "கோவிலின் எல்லையில் பாபா சகஜமாக நடமாடுவதைப் பார்த்ததாகக் கூறினார்கள்"... 

1940-ல் கேசவ் பிரதானின் காலம் முடிந்தது... பாபா ஆலயத்தைப் புதுப்பிக்க குப்தா,  நாராயண் புரோஹித், தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வேல்வால்கர் போன்ற பக்தர்கள் முயன்றனர்...ஆனால் அதற்கான போதிய நிதி வசூலாகவில்லை... 

நிதி வசூலுக்கு வேறுவித முயற்சியாக,  கோவிலில் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சப்தாக பாராயணம் செய்யப்பட்டது.  பாராயணத்தின் நான்காவது நாள் நாராயண் புரோஹித் கனவில்  பாபா  தோன்றி,  "என்னுடைய துனி எங்கே..?  துனி இல்லாத ஆலயத்துக்கு எப்படி ஆசி வழங்க முடியும்?...என்று பகவான்  கோபமாகக் கேட்டதாகவும், அதே சினத்துடன் அவர் மீது கற்களையும் வீசி எறிந்ததாகவும் நாராயண் புரோஹித் கூறினார்...

உடனடியாக  மற்ற கோவில் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து அனுமதி பெற்று ,  கோவில் வளாகத்திலேயே 8"*4" சதுர அடிப்பரப்பில் துனிக்கான கட்டிடம் எழுப்பி,  7-4-1949..ல் காலை பத்து மணி சுபமுகூர்த்த வேளையில் தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வால்வேல்கர் துனியை ஏற்றினார்....

துனியை நிறுவிய மறுநாள் அதிகாலை சுமார் மூன்று மணியளவில், "பாபா கோவிலின் கதவைத் திறந்து உள்ளே சென்று மீண்டும் கதவை மூடிக்கொண்டதைக் கண்கூடாகப் பார்த்ததாக" அந்த ஊர் மக்கள் பலரும் ஆச்சர்யத்தோடு கூறினர்...பகவானுடைய வழிமுறைகள்  அனைத்தும்  ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது...எதனையும் ஆராயமல் சரணாகதி அடைந்தால் போதுமானது. ..

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

🔥🔥ஶ்ரீ சீரடி சாயீன் பாமாலை..🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏

🔥🔥ஶ்ரீ சீரடி சாயீன் பாமாலை..🔥🔥

எங்கள் சாய் அன்னையே...

உம்மை யாசிக்கின்றோம்...

உம்மை சுவாசிக்கின்றோம்.

உம்மில் உயிருடன் ஒன்றாகின்றோம்....

உம் அன்பின் ஆதிக்க மூல பேராற்றலை உணர்ந்து.. தெளிந்து ....கரைந்து..... உம்மோடு கரைகின்றோம்....

அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் உம்மை எதில் இல்லையென்று தேடுவேன் எமது  சாய் அன்னையே.....

யான் காணும் அனைத்திலும் நிறைந்த உன்னை, எதில் நீ இல்லையென்றுத் தேடி... எந்த வஸ்துவை உமக்கு உவமானமாக கூறுவது எமது  சாய் அன்னையே.. ...

காட்சிப் பொருளும் நீர் தானே...

சாட்சியாகவும் இருப்பது நீர் தானே...

அண்ட சராசரத்தை ஆட்சி செய்யும் மூலப் பொருளாகவும் இருப்பது நீர் தானே சாய் அன்னையே......

எங்கே பார்த்தாலும் அதில் நீர் தானே உறைந்து இருக்கின்றாய்...

எதிலும் நீர் ...

எங்கு நோக்கினாலும் நீர்..

உயிரிலும் நீர்...

உணர்விலும் நீர்..

காற்றிலும் நீர்..

காலத்திலும் நீர்.....

காண்கின்ற பொருளிலும் நீர்...எண்ணங்களில் நீர்...

ஏற்றத்தில் நீர்....

சுவாசத்திலும் நீர்.. வாசத்திலும் நீர்....

நேசத்திலும் நீர்...

பரிவிலும் நீர்...

யான் பரிதவித்து நிற்கும் போதும் நீர்....

என் வாழ்விலும் நீர்...

என் வறுமையிலும் நீர்..

என் துன்பத்திலும நீர்...

இன்பத்திலும் நீர்..

யான் வீழும் போதும் நீர்.

யான் வாழும் போதும் நீர்...

அனைத்திலும் நீர் தானே. ...

எதில் பேதம் பார்ப்பேன்...

யாரை வெறுப்பேன்...

யான் வெறுப்பவரும் நீரல்லவா...ஏனெனில் யான் வெறுத்த மனிதரிலும் உயிராக நீர் தானே இருக்கின்றாயே...எனது சாய் அன்னையே...

யாராய் நினைக்கிறேனோ அவராய் நிற்கின்றாயே...

யாவரையும் காத்து அகிலத்தில் சிறக்கின்றாயே..

தோராயமாய்த் திரிந்த என்னைத் தூக்கி நிறுத்தி தோளில் சுமக்கின்றாயே...

பாராமல் நின்றாலும் பக்கத்தில் இருக்கின்றாயே..

பங்காளியாய் நின்று  எமது துயரங்கள் பகிர்கின்றாயே....எமது சாய் இரத்தினமே.....

வேராக நீயிருக்க பழமாக இனிக்கின்றேனோ.......

ஒன்றாக நினைத்தாலும் நூறாகத் தெரிகின்றாயே...

குருவாய் வந்து என்னின்  குறைகளைப்போக்குகின்றாயே...

குறைகளை நீக்கி குன்றின் மேல்லிட்ட விளக்கின் சுடரைப் போல் எம் உள்ளத்தை ஒளிர வைத்தாயே...

எமது சீரடி அரசரே....வாழ்க்கைப் பாடமதனைப் எனது மாயை  மனதிற்கு புரியும் படி புகட்டுகின்றாயே....

தந்தையாக இருந்து  தன்னந்தனியாக தவித்த என்னை பாதுகாத்து பாதுகாவலனாக இருக்கின்றாயே...

தனித்து கண்மூடி  கதறும் போது ஒளிச்சுடராக உள்ளத்தை நிறைக்கின்றாயே....

உன் தோள் மீதெனை வைத்து உலகைக் காட்டுகின்றாயே....

தாயாய் இருந்து  தரணியை  எம் எழுத்து மூலம் ஆள கற்றுக் கொடுக்கின்றாயே...

தாயாய் இருந்து யாரும் உணராத பேரன்பை எம்மீது  சொரிகின்றாயே...

தூய அன்பின்  மூலத்தை உணர்த்தி    எம்மை,  உன்னுள்  உறையச் செய்துவிட்டாயே... 

அன்னையே...உம் அன்பிற்குத் தான் நிகரிண்டோ இவ்வுலகில்  எம் சாய் அன்னையே....

உம் அன்பை உணரும் போது ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கின்றாயே...

இதுவே பரன்வசம் என்கின்றாயே... பேரானந்தமும் என்று உரைக்கின்றாயே..

அன்பே அனைத்தும் என்பதை உம் பேராற்றலை உணர்ந்த கணம் உறைந்து போனேன் என்னுள். உறைந்த கணம் அறிந்தேன்... என்னுள் ஏற்கெனவே இருந்துக் கொண்டு தான் இருக்கின்றாய் என்பதனை எனது அன்னையே...

எம் மாயை கண்ணோட்டத்தால் உம்மை  வேற்றுமைப் படுத்திப் பார்த்த என்னை, வேராக நானே இருக்கின்றேன் என உணரச் செய்தாயே அன்னையே....

எனக்குள் வேராக சாய்நாதமாக இருந்து மாயையின் பிடியில் இருந்து விலக்கினாயே...

சத்தியம், தர்மம், மனிதநேயம் ,மனிதம் என்பது என்ன என்று சூட்சமமாக உணர வழி நடத்தினாயே....

நீர் எம் இல்லத்தில் வாசம் செய்து இல்லத்தை இறையறமாக மாற்றினாயே....

என்னை உம்மை மட்டும் நோக்கச் செய்து மூல சூட்சமத்தை போதித்தாயே. 

பாசாங்கு செய்து வேஷம் போடும் மானிடரை இனம் கண்டு ஒதுங்கிச் செல்லக் கற்று கொடுத்தாயே...

பொருத்தார் பூமி ஆள்வார் என்பதனை உமது வாக்கின் மூலம் நடைமுறைப் படுத்தினாயே.....

குழந்தையாய் என்னை உன் மடியில் சீராட்டும் போது யான் வெள்ளேந்தி குழந்தையாகிறேனே...

கள்ளம் கபடமற்ற தூய உள்ளம் கொண்ட குழந்தைகளாக எங்களை உருவாக்குகின்றாயே....

சொற்களால் உமது பேராற்றலை உருவகம் செய்ய முடியாது எமது சாய் அன்னையே..... உம்மை  உணர்ந்தால்.... உம்மில் கரைந்தால் கலந்தால்...மட்டுமே முடியும்...ஆம் அன்பர்களே... 

ஆத்மார்த்தமாக கரைந்து அவரின்பால் அனைத்தையும் ஒப்படைத்து அவர் காட்டிய நேர் வழிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே இந்த சாய் இரத்தினத்தின் மகிமைப் புரியும் தானே......

நாங்கள் வாழ்நாள் முழுக்க உன்னடி கிடந்து தொழுது பணி செய்து கிடக்க வரம் தருவாயோ... எங்களின் சாய் அன்னையே...... சீரடியில்  வாழ்கின்ற சீராளனே...சீரடி அரசனே....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

சாயீயைப் பணிக...அண்ட சராசரமெங்கும் சாந்தி நிலவட்டும்....குருவே சரணம்..🙏🏻🙏🏻

தெளிவு  குருவார்த்தை கேட்டல்...🙏🙏

தெளிவு குரு நாமத்தை செப்புவது.🙏🏻🙏🏻..

குருவில்லாமல் திருவில்லை....🙏🙏

குருவின் பாதையே ஆதி மூலத் திருவை அடைய சிறந்தவழி....ஆம்....உணருங்கள்..போற்றுங்கள்...சாயீயை சுவாசித்து  வாழ்வோம் சாயீனில்..🙏🏻🙏🏻

ஓம்  ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

🔥🔥ஏன் சக உயிர்களை வெறுப்பு விருப்பின்றி நேசிக்க வேண்டும் என்று கூறுகின்றேன் என்றால்.....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏

🔥ஏன் சக உயிர்களை வெறுப்பு விருப்பின்றி நேசிக்க வேண்டும் என்று கூறுகின்றேன் என்றால்.....🔥

எமது குழந்தைகளே...அனைவரிலும் இருப்பது ஒன்றின் மூலமே..அது ஆதி மூல சிவப் பேராற்றல் என்கின்ற  ஏகத்தின் ஒரு துளியாக,  ஒவ்வொரு  மனித உயிரிலும் சிவமே சீவனாக  இருக்கின்றது.. இதனை சற்று கவனித்து  விழிப்புணர்வோடு உற்று நோக்குங்கள்.. அனைவரும் கடவுளே...பிண்டம் மட்டும் வேறாக இருக்கின்றது...ஏனெனில் அனைவரிலும் ஒன்றின் மூலமே நிறைந்து இருக்கின்றது.... உன்னில்  இருந்து யாரையும் வேறுப்படுத்திப் பார்க்க முடியாது...அனைவரும் ஒன்றின் மூல சிவப் பேராற்றலிருந்து உருவான உயிர்களே குழந்தைகளே....அண்ட சராசரத்தையும் இயக்குகின்ற ஆதி மூலமே உங்களிலும்,  மற்ற அனைத்துயிரிகளிலும்  நீக்கமற நிறைந்து இருக்கின்றது எமது குழந்தைகளே... 

இந்த அடிப்படையில் பார்த்தால் யார், யாரைப் பேதம் பார்ப்பது..பேதமின்றி மற்ற மனிதர்களை நேசித்தலே, நம்மை   படைத்தவனுக்கு  நாம் செய்யும் இறை வழிபாடு...அவன் போட்ட வித்தில்....அதுவாக அனைத்தும் இருக்கின்றதே. இந்த நிலையில்  யாரை குறைக் கூறினாலும், அந்த நபரிலும் மூல வித்தான சிவயேகத்தின் ஒரு துளியே  அடங்கியுள்ளது...இது தான் மூல சூட்சமம்  எமது குழந்தைகளே...மற்ற மனிதரை  உம்மில் வேறாகப் பார்த்தால், அது மூலத்தை உணராத அறியாமையைக் காட்டுகின்றது குழந்தைகளே.. ஏனெனில் உங்கள் அனைவரிலும் மூல வேர் என்ற ஆற்றலாக, ஆதி மூல சிவப் பேராற்றலே , உங்கள் யாவரிலும்  உயிராக இருந்து இயக்குகின்றது..ஆனால் அந்த மூல ஆற்றலானது  உங்களை உணர வைக்காமல்  தன்னை மறைத்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு காண்பிக்கின்றது.. இதுவே மூல சூட்சமம் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள் ...

ஆதி ஆற்றல்  தன்னை உணர வைக்கவே, வாழ்க்கை என்ற நாடக மேடையை கொடுத்து, பிண்டத்தை கொடுத்து, உயிரைக் கொடுத்து ,பற்பல பிறவிகளுக்கு ஏற்ப கர்ம வினைகளையும் சேர்த்து  கொடுக்கின்றது... இந்த வாழ்க்கை என்கின்ற மேடையில், நல்ல நடிகனாக  வேஷம் தரித்து சத்தியப் பாதையில் பயணம் செய்து, ,நல்ல நெறிமுறைகளைக் கடைப்பிடித்தும்,  சத்தியம், மனித நேயம், இறையச்சம், அஹிம்சை போன்ற நற்குணங்களோடு  வாழ்ந்தால் சித்தம் தெளிந்து குருவின்  பேராற்றலையும், மூல ஆதி சிவத்தையும் உணர முடியும்....இதனை உணர வைக்கவே குரு தேவைப்படுகின்றார்..  அனைத்து உயிர்களுக்கும்  அன்போடும் .. பரிவோடும்...சேவை  செய்வீராக... கடவுள் உங்களுக்கு மற்ற உயிர்களுக்கு  உதவி செய்யும்  சந்தர்ப்பத்தை கொடுத்து   இருந்தால்.  நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றே அறிவீராக... இந்த  சேவையை கடவுள் கொடுத்த வரமாக எண்ணி மகிழ்வீராக...ஆனால் உன்னை பற்றி அதிகமாக   பெருமையாக நினைத்துக்   கொள்ளாதே... கடவுளின்   விருப்பம் இல்லாமல்  இந்த   உலகில் எதுவுமே  நகராது.   நீங்கள் மிக்க

பாக்கியசாலிகள்..உங்கள் அனைவருக்கும்   யான் குருவாக அமைந்தது உங்களின் மூதாதையர் செய்த நற் புண்ணியங்களின் பலனே என்பதை அறிவீராக..மற்றவர்களுக்கு கிடைக்காத  பாக்கியம்  உங்களுக்கு கிடைத்துள்ளது..ஆனால்  அடுத்தவர்களை மறைத்துவிட்டு  நல்ல காரியம்  செய்ய முயலாதீர்கள்..என்னால் அனைத்தும்   முடியும் என்ற  அகங்காரத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்...அவ்வாறு ஏதாவது அகந்தை இருந்தால் அந்த  எண்ணத்தினை அறவே   விட்டு விடுவீராக....பிற உயிற்களை நேசிக்கும் போது எம்மையே நேசிக்கின்றீர்கள்..பிறரைக் காயப்படுத்தும் போது எம்மையே காயப்படுத்துகிறீர்கள்...வாயில்லா ஜீவன்களுக்கு உணவை வழங்கும் போது எமக்கே வழங்குகிறீர்கள்..

பிற  துன்பத்தைக் கண்டு மனம் வருந்தி, நீங்கள் எம்மிடம் வைக்கின்ற பிரார்த்தனையின் போது நான் உங்களுக்கு தேவையான அனைத்தையும் கேட்காமலேயே வழங்குவேன்...ஏனெனில் இந்த ஏகத்தன்மையைத் தான் உம்மிடம் எதிர் நோக்குகின்றேன்..தன்னுயிரைப்  போன்று பிற உயிரை நேசிக்கும் போது , உங்களுக்குள் ஏகத்தன்மை வெளிப்படும்..இறையாற்றலின் மூலத்தை உங்களுக்குள் உணர ஆரம்பிப்பீர்கள். இதனை அனைத்தையும் கடைப்பிடித்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு எக்காலமும் சேவை செய்ய உடன்பட்டவன் ஆவேன் எமது குழந்தைகளே...

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம் ..🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥ஶ்ரீசீரடி பகவான் எவ்வாறு தன்பக்தர்களை மிகுந்த தாய்மையுணர்வுடனும், கருணையுடனும், சத்திய அன்புடனும் வழிநடத்தினார் என்பதனை இங்கே பார்ப்போம்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்..🙏🙏🙏

🔥ஶ்ரீசீரடி பகவான் எவ்வாறு தன்பக்தர்களை மிகுந்த தாய்மையுணர்வுடனும்,கருணையுடனும், சத்திய அன்புடனும் வழிநடத்தினார் என்பதனை இங்கே பார்ப்போம்...🔥

ஒருநாள் மத்தியானம் ஆரத்தி முடித்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்...அப்போது பாபா கீழ்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார். அது என்னவென்றால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்....என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்..ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.... 

நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும்....நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன்...இந்த உலகின் கண் அசையும் - அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவணைக்கின்றேன்..இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன், ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.. முக்குணங்களின் கூட்டுறவும் நானே...

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம்... என்பால் கவனத்தை திருப்புபவர்களை  எந்தவிதமான துன்பம் விளைவிக்காது..ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்... எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை...அசையக்கூடிய, அசைய முடியாத உலகம் எல்லாம் என்னுடைய சூட்சமப்  பேராற்றலின் உள்ளடங்கியுள்ளது என்பதை உணர்ந்து சரணாகதி அடைவீர்களாக...

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

சீரடி பகவானை சத்குருவாக ஏற்றுக் கொண்டு வழிபடுவதன் மூலம், நாம் அடையப் போகும் நன்மைகள் என்ன என்பதன் விளக்க்ம்...🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

🔥சீரடி பகவானை சத்குருவாக ஏற்றுக் கொண்டு வழிபடுவதன்  மூலம், நாம் அடையப் போகும் நன்மைகள் என்ன என்பதன் விளக்க்ம்...🔥

ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக, அவர்களைத் தம் பக்கம் இழுத்து, உதவி  செய்து பண்படுத்தி,ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச் செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயிநாத்தின் முக்கியப் பணியாகும். எல்லா ஆத்மாக்களும் ஆன்மீக முன்னேற்றத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பது பற்றியும் அவர் தெளிவாக அறிந்திருக்கிறார்... எனவே அனைத்து ஆத்மாக்களையும் நற்பயன் அளிக்கும் முறையில் கட்டுபடுத்தி வழிகாட்டுகிறார்...பாபா அடிக்கடி கூறுவார்- 'ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் இருந்தபோதும், என் பக்தரில் எவரேனும் ஒருவர் இறப்பைச் சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லாரையும் பற்றி எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்.'

ஒரு உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவைப் பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்...இந்த மனிதப் பிறவியின் துன்பங்களிலிருந்தும்,குறைபாடுகளிலிருந்தும்  விடுபட்டு ஆன்மீக முன்னேற்றம் காண்பதற்காகத் தான்  எல்லாவிதமான பிரார்த்தனைகள், தியானமுறைகள், சாதனைகள், பூஜைகள், யோகப் பயிற்சிகளின் நோக்கமாகும். எனவே ஜீவாத்மாக்களை, முழுமையான  ஆதி மூல பேராற்றலோடு சேர்க்க அழைத்துச் செல்லக் கூடிய சக்தி  சத்குருவுக்கு மட்டுமே சாத்தியம்.. சத்குருவால் மட்டுமே முடியும்...

ஒவ்வொரு மனித உயிரையும் வாழ்கின்ற இயல் வாழ்க்கையிலேயே  சத்திய  நெறி முறைகளையும்  சூட்சமமாக  உணர்த்துவார்.... தன் பக்தர்களை  ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைத்து, ஒவ்வொரு தனி மனித உயிருக்குள்ளும்  உள்ள மூல சிவமே  சீவனாக இருக்கின்றது என்பதனை  உணர்த்தி பிறவா நிலையை அடையச்  செய்வதில் வல்லவரும் சத்குருவே...,பிறப்பு, இறப்பு அற்றவர் என்பதால் அவருடைய பக்தர்களின் பல பிறவிகளுக்கும் அவரே வழிகாட்டியாய் அமைகிறார்...

பெற்றோர்கள் ஒரு பிறவியில் நம்முடன் தொடர்புடையவர்கள். ஆனால் ' ஸ்ரீ சாயிபாபா ' பல பிறவிகளாக நம்முடன் தொடர்பு உடையவர். தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என எல்லா மனித உறவுகளும் இறப்பு வரையே ஒருவருடன் கூட வரமுடியும். ஆனால், பாபா ஒருவர் மட்டும் தான் தமது பக்தர்களாகிய நமது இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார்...நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🙏


ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏🙏

எமது குழந்தைகளே...தினமும் எதையோ தேடி .. ஓடி கொண்டு இருக்கிறீர்கள்.. ஏகப்பட்ட கெடுபிடிகள்.நித்தம் ஒரு போராட்டம்.. ஒரு நாள் நிச்சயம் விடியும் என்று காத்திருக்கிறீர்கள்..  அப்பா நான் செய்த தவறை நான் உணர்கிறேன். தயவுசெய்து  என்னை இதிலிருந்து விடுவித்து எனது கர்மாக்களை அடியோடு ஒழித்து என்னை காப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்துள்ளீர்கள் அல்லவா சரிதானே?

மகனே..மகளே.. உங்கள் போராட்டங்கள் எனக்கு தெரியாதா? எப்போது நீங்கள்  என்னை குருவாக  ஏற்றுக் கொண்டீர்களோ, எப்போது எனது நாமத்தை உங்களது நாவில்  உச்சரிக்க தொடங்கினாயோ, எப்போது நீ செய்த தவறை உணர்ந்து விட்டாயோ..அப்போதே  உங்களது  கர்ம வினைகளை போக்கி விட்டேன்...கவலைப் படாமல்  இருப்பீராக எமது குழந்தைகளே.. அப்பா நான் இருக்கிறேன்..

பொருமையைக் கடைப்பிடிப்பீராக.. படிப்படியாக நீங்கள்  நினைத்ததற்க்கு மேலாக உயரப் போகிறீர்கள்..நான் இருக்கிறேன்... கலங்காதீர்.. என்னிடம் அனைத்தையும் நம்பிக்கையோடு சமர்ப்பணம் செய்து விட்டு உங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யுங்கள். நான் விரைவில் தீர்வை வழங்குவேன்....

ஓம் ஶ்ரீ  சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

ஒம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்... எனதன்பு_குழந்தைகளே....

 ஒம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏

எனதன்பு_குழந்தைகளே....நீங்கள்  இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்வீராக.. உங்கள்  மீது முதலில்  திடமாக நம்பிக்கை கொள்ள வேண்டும் குழந்தைகளே... எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ள வேண்டும்...கவுரவத்திற்காக  வீண் செலவுகளில் ஈடுபடக் கூடாது...வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை...பணிவும், அன்பும் நிறைந்த ஒன்றே போதுமானது... வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்று கொண்டு நம்பிக்கையோடு செயல்படுவீராக...உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை உனக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கும். சுகமும் துக்கமும் வெளி யுலகில் இருப்பதாக நீ எண்ணுகிறாய்...அது உன் மனதில் இருக்கிறது. அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந் தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும்... .இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்ப மாக மாறலாம். துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும். இதை நீ உணர்ந்தால், வெற்றி நிச்சயம்...கடவுளை காண அனைவரும் விருப்ப படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கே வாய்ப்பு கிடை க்கிறது.... 

கடவுளை  தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் துாய்மை பெறும்.. சுயநலத்துடன் வாழ்வது பாவம்... தனக்கும், பிறருக்கும் பயனுள்ளவராக வாழ வேண்டும்... பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம்..பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம். இனிய சொற்களால் மற்றவர் களை மகிழ்விக்க அறியாதவர்கள் மவுனமாக இருப்பதே சிறந்தது....சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.....இவைகளை பின்பற்றுங்கள்.... நீங்கள்  எடுக்கும் அனைத்து  முயற்சிகளிலும் உங்களுக்கு  வெற்றி நிச்சயம்...என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவீராக.. உங்களுக்கு   என்றென்றும் நல்லதே நடக்க ஆசி புரிவேன் எமது குழந்தைகளே...எதற்கும் கவலைப்படாதீர்கள்..

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

🔥🔥எமது குழந்தைகளே..... உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் சாத்தியமில்லாதது கூட சாத்தியமாகும்!’ - சீரடி பகவான்..🙏🏻🔥🔥

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய   நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின்  உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥எமது குழந்தைகளே..உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் சாத்தியமில்லாதது கூட சாத்தியமாகும்!’ என்பதனை உணர்வீர்களாக.🔥

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் சீரடி சாயிபாபா.... தன்னுடைய சாந்நித்தியத்தை சீரடி எனும் கிராமத்தில் இருந்துகொண்டு, உலகம் முழுவதும்  தன் சூட்சம பேராற்றலை  படரவிட்டு வியாபிக்கச் செய்தவர் சாய்  பகவான்  என்று பக்தர்கள் போற்றுகின்றார்கள்...பாபா எனும் அற்புதமான மனிதரின் பேரன்பும், அவரின் சூட்சம  அருளாடல்களும் , அவரின் ஆசிர்வாதத்தில் உள்ள தீர்க்கமும் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்த்து அனைவரையும்  கொண்டாட வைத்தது...உலகை உய்விக்க வந்த மகான்களில் மிகச்சிறந்து விளங்குபவர் சாய்பகவான்.. எண்ணுகின்ற கணத்தில் தீர்க்க தரிசனமாக..பிரசன்னமாக கணம் நேரம் தவறாமல் தோன்றுபவர் சாய்நாதர்  என்று பக்தர்கள் கொண்டாடி பூஜை செய்து, குருவாக சீரடி சாயீ  பகவானை  ஏற்றுக் கொள்கின்றனர்....

சீரடி எனும் புனித நகரத்துக்குச் சென்று அங்கே பாபாவின் திருவடி பட்ட பூமியை, ஆஸ்ரமத்தை, ஆலயத்தை வணங்கி வருகிறார்கள்...சீரடி எனும் புனித பூமியில் இருந்து பிடி மண்ணெடுத்து வந்து, இந்தியாவில் பல ஊர்களில் பாபாவுக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளது...அந்தக் கோயில்களிலெல்லாம் பாபாவின் சாந்நித்தியத்தை உணர்ந்து வேண்டிக் கொள்கின்றார்கள் பக்தர்கள்..பாபாவின் சக்தியால், தங்களின் குறைகளும் கவலைகளும் நிவர்த்தியாகின்றன என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்...பாபா தன் பக்தர்களிடம் சொன்ன அருளுரைகள் ஏராளம்..‘நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை... இந்த நம்பிக்கையில் தான்  ஒருவருக்கொருவர்  அன்பாக நடந்து கொள்கின்றோம்.. அதே கடவுளிடம் வைக்கிற போது பக்தியாகச் சொல்லப்படுகிறது...

உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையைத் தான் தன்னம்பிக்கை என்று சொல்லுகிறோம்.. வாழ்வில்நம்பிக்கை என்பது மிக மிக அவசியம்... நம்பிக்கையை ஒருபோதும் புறந்தள்ளிவிடாதீர்கள். உங்கள் மனதில் இருந்து நம்பிக்கையை அகற்றிவிடாதீர்கள். இந்த நம்பிக்கைதான் உங்களை உயர்த்தும். ...வாழ்வில் உங்களுக்குத் தேவையானது அனைத்தும்  வழங்கும்...எனவே, நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நம்பிக்கை வலுவாக இருந்துவிட்டால், இங்கே சாத்தியமில்லாதது கூட உங்களுக்குச் சாத்தியமாகும்....உங்கள் நம்பிக்கை அனைத்தும் உங்களுக்குப் பலனாகக் கிடைக்கும் என்பது உறுதி...நம்பிக்கையை வலுவாக்கிக் கொண்டேஇருங்கள்...

அனைத்தையும் நான் நடத்தித் தருவேன் என சாய் பகவான்  அருளியுள்ளார்...ஆகவே குருவை  விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டு ஆத்மார்த்தமாக பூஜை செய்யுங்கள்...அவர் கற்பக விருக்ஷமாவார்...கேட்டதை அருளக் கூடியவர்...ஆனால் அதனை ஏற்றுக் கொள்பவர்களாக நாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓம் ஶ்ரீ  சாய்ராம்..🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏🙏

பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்ற பக்தர், பகவானின் கொண்ட குருபக்தியின் காரணமாக ... பாபா ஸ்நானம் (குளிப்பது) செய்ததும், கை, கால், முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார். .ஶ்ரீசாயீ சத்சரித்திரம்..🙏

பாபா தட்சிணை பற்றி காகா மஹாஜனி -யிடம் கூறியது, "உம்முடைய மனதில் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை;..ஆகவே நான் கேட்கவில்லை. இப்போது உமக்கு கொடுக்க மனமிருந்தால் கொடுக்கலாம்". உடனே காகா மஹாஜனி பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் வைத்தார்...ஶ்ரீசாயீ சத்சரித்திரம்...🙏

சீரடியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபா-விடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபாவின் வழக்கமாகியது.. பகவான்  "உதீ கொண்டு வா" என்று சொன்னாலே,  வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்து கொள்வார்கள். ஸ்ரீ  சாயீ சத்சரித்திரம்..🙏

பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும்..? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம்...." இதனை உணர்ந்து கொள்வீராக..ஸ்ரீசீரடி சாய்பாபா....🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

🔥🔥சீரடி பகவான் தன் பக்தர்களை கையாண்ட விதம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டான அனுபவ விளக்கத்தை பார்ப்போம் ....பகவான் தன் பக்தர்களை வழி நடத்தும் விதமானது அற்புதமானவை..! 🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..🙏🙏🙏

🔥ஶ்ரீசீரடி பகவான் தன் பக்தர்களை கையாண்ட விதம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டான அனுபவ விளக்கத்தை பார்ப்போம்...பகவான் தன் பக்தர்களை வழி நடத்தும் விதமானது அற்புதமானவை..! 🔥

நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும், குஷ்டமாகவும், வலியாகவும், கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்..? ஆகவே இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று பாபா எழை ஆம்ப்டேகர்-ரிடம் போதனை செய்தார்.. பகவானின் அதிதீவிர  பக்தர் சோல்கர் என்பவர், சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை விட்டுவிட்டார், இதனை அவர் எவரிடமும் கூறவில்லை...ஆனால் பகவான், அதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு, தன் பக்தனைப்  பார்த்து... "சோல்கர்! நீர் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது...ஆகவே உம்முடைய விரதமும் நிறைவேறி விட்டது" என்று குறிப்பால் உணர்த்தி இனிப்பை உணவில் சேர்த்துக்கொள் என்று தாய்மையுணர்வுடன் அறிவுருத்தியது குறிப்பிடத்தக்கது...நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு, பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன் என்பதை  மறவாதீர்.... ஸ்ரீசீரடி  சாய்பாபா.....🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பகவான் கூறுகின்றார்.... 🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏

🔥ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது,  பகவான் கூறுகின்றார் இங்கே.... 🔥

"ஒருபோதும்  எமது பக்தனை அப்படி கூறாதே... எனது பக்தர்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகின்றார்கள்..... என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக  இங்கே வரவழைக்கிறேன்... நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன்... அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை... நான் அவர்களை என்னிடம் இழுத்துக் கொள்கிறேன்" என்றார்...இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.ஆகவே ஆத்மார்த்தமாக தூய அன்புடன் பக்தி செய்து சரணாகதி அடைவோமாக....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

🔥🔥பகவான் அனைவரையும் பேதமின்றி நேசித்தார் என்பதற்குச் சான்றாக, தன் ஆத்ம பக்தன் பாகோஜியை எவ்வாறு வழிநடத்தினார் என்பதன் விளக்கம்... 🔥🔥

 ஓம் ஶ்ரீ  சாய்நாதாய  நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்..🙏🙏🙏

🔥பகவான் அனைவரையும் பேதமின்றி நேசித்தார் என்பதற்குச் சான்றாக,  தன் ஆத்ம  பக்தன்  பாகோஜியை  எவ்வாறு  வழிநடத்தினார் என்பதன் விளக்கம்.. 🔥

பகவான் தினமும் லெண்டிக்கு (தோட்டம்) நீர் ஊற்ற செல்லும் பொழுது, பாகோஜி அவருக்கு குடை பிடித்துக்கொண்டே செல்வார்... உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்டு புண்கள் நிறைந்திருந்தன..; இருந்தபோதும் பகவான்  அணுகத்தகுந்த தொண்டர்களில் முதல்வர் பாகோஜி என்பவரே..பின்னர் அவர் பாபாவின் அருளால் பரிபுரணமாக குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.... 

சீரடி பகவான் கூறுகின்றார்...நானும் கூட என்னிடம் வருகின்ற சாந்தியற்ற  மனத்தை உடையவர்களுக்கு நல்ல கதைகளை சொல்லுகிறேன், லீலைகளை செய்துக் காட்டுவேன்..அது ஒரு ஆனந்தம்...தாய்க்கு சிறுவனின் விஷயத்தில் இருக்கும் சுயநலமே என்னிலும் இருக்கும்....

பாபாவுக்கு தோதீ-போதி (யோகசாதனை) தெரிந்திருந்தது...எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்துவிட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டு வருவார்..... பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார்... 

இந்த  பந்தம்  நிரந்தரமாக இருக்க  வேண்டுமானால் வேறுமார்க்கம்  இல்லை... நீங்கள் என்னை பரிபுரணமாக  நம்புங்கள்.... ஒளிவு, மறைவு விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம்...யாருடைய இதயக் கதவுகள் எனக்காக திருந்துள்ளனவோ, அவர்களுடைய இதயத்தில் நானே நிறைந்திருப்பேன் என்பதை அறிவீர்களாக....

ஶ்ரீசீரடி சாய்பாபா....🙏🙏🙏

ஶ்ரீசாயீ  சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..🙏🙏🙏 

🔥பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம்....அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சனைகளை எதிர்க்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும்... சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும் என்பதை அறிவீர்களாக.....🔥

சத்குருநாதர்  மகாபலம் படைத்தவராக இருக்கலாம்...ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும், தம்மிடம் அசையாத நம்பிக்கையையும், சகிப்புத்தன்மையின்  துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து. எதிர்பார்க்கிறார்..

மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே.... மாயையின்  விளையாட்டில் தம்  பக்தர்கள்  தவறு செய்வார்கள் என்பது பகவானுக்குத்  தெரியும்...எனவே பகவான்  எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார்..... பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார்..

நீங்கள் எங்கேயிருந்தாலும், நீங்கள் என்ன செய்தாலும், நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுவது வழக்கம்...பகவான்  சகலமும் அறிந்தவராக இருந்திருக்கின்றார் என்பதை ஸ்ரீ சாயீ சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான உபதேச மொழிகள் உணர்த்துகின்றது.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

🔥🔥ஶ்ரீசீரடி பகவான் சாய்சத்சரித்திரத்தை எழுதுவதற்கு தன் பக்தன் ஹேமாட்பந்தை எவ்வாறு வழிநடத்தினார் என்பது பற்றிய விளக்கம்....🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்...🙏🙏🙏

🔥ஶ்ரீசீரடி பகவான்  சாய்சத்சரித்திரத்தை எழுதுவதற்கு  தன் பக்தன் ஹேமாட்பந்தை எவ்வாறு  வழிநடத்தினார்  என்பது பற்றிய விளக்கம்....🔥

ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கின்றார்...சிலர் கோவில், மடம் ஆகியவற்றை கட்டுவதற்கும் , சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கும் நியமிக்கப்படுகின்றார்கள்.  சிலர் ஷேத்ராடன  யாத்திரைக்கு அனுப்பப்படுகின்றார்கள்...ஆனாலும் எனக்கு ஶ்ரீசாய் சத்சரித்திரம் எழுதும் வேலை ஒப்படைக்கப்பட்டது  என்று கூறுகின்றார் ஹேமாட்பந்த் ...ஒன்றும் முழுமையாகத் தெரியாதவனாகிய யான்  இப்பணிக்குக் கொஞ்சமும் தகுதியுடையவன் அல்லன்....  பின்னர் ஏன் அத்தகைய கடினமான வேலையை மேற்கொள்ள வேண்டும்... எவர் சாயீபாபாவின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப முடியும்...?  சாயீபாபாவின் அருள் ஒன்று மட்டுமே இக்கடின வேலையை நிறைவேற்ற ஊக்கம் அளிக்க முடியும்...எனவே நான் எனது பேனாவைக் கையில் எடுத்தபோது பகவான் எனது அகங்காரத்தை அகற்றிவிட்டு அவரே தமது நிகழ்ச்சிகளையெல்லாம் வரையலனார்....  ஆதலின் இந்நிகழ்ச்சிகளை அனைத்தும் விவரிப்பதன் பெருமை பகவானை  அடைகிறது.என்னையல்ல....

பிறப்பில் மறையவனாக இருப்பினும் ஸ்ருதி, ஸ்ம்ருதி  என்ற இரண்டு கண்கள் (பார்வை அல்லது காட்சிகள்) தேவையுள்ளவனாக இருந்தேன்.  எனவே சத்சரிதத்தை எழுதவே இயலாத நிலையில் இருந்தேன்..ஆனாலும் ஆண்டவன் அருள், ஊமையைப் பேசவைக்கிறது.. முடவனை மலையைக் கடக்கச் செய்கிறது..அவரின் விருப்பப்படி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார்...புல்லாங்குழலோ, ஹார்மோனியமோ எங்ஙனம் ஒலி எழுப்புகிறது என்பதை அறியா...இது அவற்றை வாசிப்பவனையே சார்ந்தது...சந்திரகாந்தக்கல் கசிவதும், கடல் பொங்கியெழுவதும் சந்திரோதயம் காரணமாகவே...அவற்றின் தன்மையால் அல்ல...நம்மை கனகச்சிதமாக இறையாற்றல் இயக்குகின்றது...ஆகவே நான் என்கின்ற சுவற்றை இடித்து, பற்றில்லாமல் சாட்சியாக  இக வாழ்வியலின் இயக்க செயல்களை மேற்க்கொள்ளல் வேண்டும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்....🙏🙏🙏

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும்,  பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும்.. மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம்...ஆனால்  மகாராயரான பகவானுக்கு  உடனே தெரிந்துவிடும்...நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம்...அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும்... ஒருமுகப்பட்ட மனத்தில் சாயீ சிந்தனை பின்தொடரும்...இதைத்தான் பகவான்  நம்மைச் செய்ய வைக்கிறார்....எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகின்றது...

இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்.. இதைத் தடுக்க இயலாது...ஆனால், அந்த நாட்டங்களை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்...உன் அகந்தை, ஆணவம், இறுமாப்பு இவைகளை விடுத்து, சற்றே குனிந்து மலர்களை பொறுக்கி மாலையாக்கி, மீண்டும் நீ எம்மை  நோக்கி வருவீராக...நான் இன்னும் உம்மை  கூராக்குவேன்...உம்மை  எனக்கு மிகவும் பிடிக்கும்...தயவு செய்து என்னிடம் நடித்து விடாதீர்கள்.... பரவசப்படாதே..!  நீ புண்ணிய ஆத்மாவாக உன்னை மாற்றிக் கொண்டால், நான் நினைத்தது மிக விரைவில் நடக்ககூடும்...நீர் வேண்டியது அனைத்தும் கிடைக்கப்பெறும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🏻🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் பாமாலை....

 ஓம் ஶ்ரீ  சாய்நாதாய நமஹ..🙏🙏🙏

🔥ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் பாமாலை....🔥

எமது சத்குருநாதா.....தாயுமானவரே....

மலர்களை தூவி பூஜை செய்தோம்..

 மனம் உருகி வேண்டினோம்....

மனதில் உள்ள குறைகளை தீர்த்து வைத்தாயே....

தடுமாறி நிலை குனிந்து நின்றோம்..... நிலையான தெய்வமாக நான் இருக்கிறேன் என்று வந்தாயே.... 

எந்த நிலை வந்தாலும் உன்னை தவிர வேறு துணை இல்லையே இந்த உலகில் எங்களுக்கு....

நித்தம் நித்தம் உன்னை  காண கோடி புண்ணியம் செய்தோம்... .

இந்த மானிட உலகில் நீயே முதன்மையான  குரு  என்று மனதில் பரவசம் அடைந்தோம்....

என்றும் உயிர் உள்ள வரை உன் நாமம்  ஜெபிப்போம் எங்களது சாய் அன்னையே....

 சாயீயே  சாஸ்வதம்...

சாயீயே சத்தியம்.....

சாயீயே நித்தியம்.....

ஓம் ஶ்ரீ  சாய்ராம்.....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥கலங்கரை விளக்காக பாபாவின் உபதேச மொழிகள் பக்தர்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றது என்பதன் மூல விளக்கம் என்னவென்றால்...🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏

🔥🔥கலங்கரை விளக்காக பாபாவின் உபதேச மொழிகள் பக்தர்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றது என்பதன் மூல விளக்கம் என்னவென்றால்...🔥🔥

🔥மாலுமிகள், படகோட்டிகள் ஆகியோர்கள், பாறைகள், அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி பத்திரமாக பயணம் செய்வதற்காக, கடலின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கம் கட்டப்படுகிறது..அதேப்போல்   சம்சாரம் என்னும் சாகரத்தில் பகவானின்  கதைகள் அத்தகைய பயனை நல்குகின்றன.  அவைகள் அமிர்தத்துக்குச் சுவையூட்டுகின்றன..நமது உலகப் பாதையை மிருதுவாகவும், கடப்பதற்கு எளியதாகவும் ஆக்குகின்றன என்பதே சத்தியம்..... 🔥🔥

ஞானிகளின்  கதைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள்...நமது செவிகளின் வழியாக உள்ளத்தினுள்  புகும்போது சரீராபிமானம் அல்லது அகங்காரம், த்வைத உணர்ச்சி ஆகியவை மறைகின்றன....நம் உள்ளத்தில் அவைகள் தேக்கப்படுமானால் சந்தேகம் பறந்தோடும்.., சரீரத்தின் பெருமை உணர்ச்சி கீழே இறங்கும்.  ஏராளமாக விவேகம் சேகரிக்கப்படும்....

பாபாவின் தூய புகழை விவரிப்பதும், அதையே அன்புடன் கேட்பதும் அடியாரின் பாபங்களை அழிக்கும்... கிருதயுகத்தின் ஆன்மீகப் பயிற்சியானது சமதமா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை), த்ரேதாயுகத்திற்கு தியாகம், த்வாபரயுகத்திற்கு வழிபாடு, கலியுகத்திற்கு இறைவனின் புகழையும், நாமத்தையும் இசையாகப் பாடுவதுமாகும்.  கடைசிப் பயிற்சியானது நான்கு வர்ணத்தைச் சேர்ந்த எல்லாருக்கும் உரியதாகும்.... 

மற்றைய பயிற்சிகளான யோகம், தியாகம், தியானம், தாரணை (ஒரு முகப்படுத்துதல்) ஆகியவை பழகுவதற்கு மிகவும் கடினமானவை.  இறைவனாகிய சாய்பகவானின்  புகழைச் செவிமடுப்பது மிகவும் எளியதாகும்...நாம் நமது கவனத்தை அவைகள் மீது திருப்ப மாத்திரமே வேண்டும்.... கதைகளைக் கேட்பதும், கீர்த்தனையாகப் பாடுவதும் புலனுணர்வுப் பொருட்கள் மீதுள்ள உறவை நீக்கி, அடியவர்களைப் பற்றறுத்தவர்களாக்கி முடிவில் ஆன்ம உணர்வுக்கு வழிநடத்திச் செல்லும்....

இக்குறிக்கோளையே கருத்திற்கொண்டு பகவான்  'சத்சரிதாம்ருதா' என்னும் அவரது கதைகளை எழுதச்செய்தார், அல்லது உதவி செய்தார்.  அடியவர்கள் இப்போது இக்கதைகளை எளிதாகப் படிக்கவோ, கேட்கவோ செய்யலாம்.  அங்ஙனம் செய்யும்போது அவரைத் தியானம் செய்வீராக..

ஓம் ஶ்ரீ சாய்ராம் ....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏

🔥🔥ஶ்ரீசீரடி பகவான் எவ்வாறு அனைத்து பக்தர்களையும் பேதம் பார்க்காமல் சமமாக பாவித்து வழிநடத்தினார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ரோஹிலாவின் கதை.....🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய  நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏🙏

🔥🔥ஶ்ரீசீரடி  பகவான் எவ்வாறு அனைத்து பக்தர்களையும்  பேதம் பார்க்காமல்  சமமாக  பாவித்து  வழிநடத்தினார்  என்பதை எடுத்துக்காட்டும்  விதமாக   ரோஹிலாவின் கதை.....🔥🔥

சீரடி பகவானின் மீது ஆத்மார்த்தமான பக்தி கொண்டவர் ரோஹிலா என்ற பக்தர்..இவர்    உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவராக இருப்பார்... இவர் பகவானை தரிசிக்க சீரடிக்கு  வந்தார்....  நீண்ட கஃப்னி என்னும் உடை அணிந்திருந்தார்.. பாபாவிடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தார்...இரவும், பகலும் கலிமாவை (திருக்குரானின்) பாடல்கள் சத்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து 'அல்லாஹு அக்பர்' (கடவுள் பெரியவர்) என்று கத்துவான்....  சீரடியின் பெரும்பாலான மக்கள் பகலெல்லாம் தங்கள் வயலில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்குத் திரும்பும்போது ரோஹிலாவின் குரூர இரைச்சல்களாலும், கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள்...அவர்கள் தூங்க முடியாமல் மிகுந்த தொல்லையும், அசௌகரியமும் அடைந்தனர்.... மௌனமாக இத்தொந்தரவைச் சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் இத்துயரம் படமுடியாது என்னும் நிலை வந்தவுடன், பாபாவை அணுகி இதைக் கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டனர்..... 

பகவான் அவர்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை..மாறாக அவர்களைக் கடிந்தார்...அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியும், ரோஹிலாவைக் கவனிக்கவேண்டாம் என்றும் கூறினார்... மேலும் பகவான் கூறினார், ரோஹிலாவுக்கு மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும், அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும், தம்மையும் தொந்தரவு செய்கின்றாள்..ஆனால் ரோஹிலாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ளே  நுழையத் துணியவில்லை. ஆதலால் அவர்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்... உண்மையில் ரோஹிலாவுக்கு ஒரு மனைவியும் கிடையாது...அவனுக்கு மனைவியாக பாபா குறிப்பிட்டது துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும்...ஏனெனில் வேறெதைக் காட்டிலும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதிலும், முறையிட்டுப் பேரிரைச்சல்கள் செய்வதையும் பகவான்  விரும்பினார்...அவர் ரோஹிலாவின் பக்கம் இருந்து ரோஹிலாவின் இரைச்சல்களையும், கூக்குரல்களையும் பொறுத்துக் கொள்ளுமாறும் அவை சீக்கிரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்....அங்கு கூடியிருந்த மக்களும் பகவான் உத்தரவை ஏற்றுக்கொண்டனர்...உண்மையான  பக்தியுடனும் ஆத்மார்த்த அன்புடனும்  அனுகுகின்ற பக்தர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்குகின்றார்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥யாருக்கு பொறுப்பாளரோ, பாதுகாப்பாளரோ இல்லையோ, அவரையே சாயீ மாதா ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இடுக்கண்ணில் மாட்டிக் கொண்டவர்களும், துன்பப்படுபவர்களும், வேண்டாமென்று ஒதுக்கப்பட்டவர்களும் பகவானை புகலிடமாகக் கொண்டனர்....🔥🔥

ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..🙏🙏

🔥🔥யாருக்கு பொறுப்பாளரோ, பாதுகாப்பாளரோ இல்லையோ, அவரையே சாயீ மாதா ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இடுக்கண்ணில் மாட்டிக் கொண்டவர்களும், துன்பப்படுபவர்களும், வேண்டாமென்று ஒதுக்கப்பட்டவர்களும்  பகவானை  புகலிடமாகக் கொண்டனர்..🔥🔥

பாபாவிற்கு எவ்விதமாக சேவை செய்ய வேண்டுமென்று பக்தர்கள் தீர்மானம் செய்தாலும், வாஸ்தவத்தில் பாபா தம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கின்றார்... இதுவிஷயத்தில் உணர்வூட்டுதலை பாபாவே செய்கின்றார்...பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே..! நான் மற்ற எல்லோரையும் விட கீழ்மையானவன்...என் சக்தி கட்டுக்குள் அடங்கியதாகும், நான் தெரிந்து கொள்ள வேண்டியது அளவற்றதாகவுள்ளது" என்று யார் எண்ணுகின்றார்களோ அவர்களுக்கு அகம் (அகங்காரம்) மிகுந்த தொலைவிலேயே இருக்கும்."..செயல் புரியும் கடமை மாத்திரம்  என்னுடையது...பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன் என்னும்  திடமான நம்பிக்கை  எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்...மாமரத்தில் இருக்கும் அனைத்து பூக்களும் மாங்கனிகளாவதில்லை...சில பூக்கள் மட்டுமே மாங்கனிகளாகின்றன...அதே போல் சில மக்கள் மட்டுமே என்னிடம்  வருகின்றனர்.....ஸ்ரீ சாய் சத்சரித்திரம்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏🙏 🔥🔥ஶ்ரீசீரடி சாய் நாதரின் பாமாலை...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏🙏

🔥🔥ஶ்ரீசீரடி சாய் நாதரின் பாமாலை...🔥🔥

உம் பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா.... அனைத்திலும் நீக்கமற நிறைந்தவர் என்று உணர்ந்தோம் பாபா...

எம்மில் நீர் இருப்பதை உணர்ந்த கணம் அனைத்தையும் மறந்தோம் பாபா...

எங்களைத்  தாயுமானவராக காத்திட வந்த  நீரே...எங்களுக்குத்  தாயன்பைத் தந்தாயே பாபா...

உம்  சத்திய பேர் அன்பில் திளைத்தோம் பாபா...அதனால் அனைத்தும் ஓம் வெறுமையாக இருக்கின்றதே பாபா..

எதிலும் பற்றாமல் பற்றிரு என்பதனை உணர்த்தி விட்டாயே பாபா....

உங்கள் ஆசியால் நாங்கள் விழிப்புணர்வோடு  சாட்சியாக எதையும் அனுகுகின்றோம் பாபா..

இதனால் எங்களின் கர்ம வினைகள் பின்தொடராமல் எங்களை விடுவித்தாயே பாபா...

உம் ஆசிர்வாதத்தாள் வெற்றிடமாக எங்களை நெறிப்படுத்தி வெற்றி வாகை சூட அனுக்கிரகம் செய்தாயே பாபா..

மந்திரமானது உன் பெயர் பாபா...மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா....

ஜென்மங்கள் யாவிலும் துணை நீங்கள் பாபா...மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா........

எங்களை மீளாத்துயரத்திலிருந்து மீட்டிடும் பாபா....எங்களை  நேர்ப்படுத்தி  இகத்தோர் புகழ பாற் போற்றி பறைச்சாற்ற வைத்த பேராற்றலே சாய்பாபா...

மன்னுயிர்க்கெல்லாம் தலைவன்  நீர் தானே பாபா...பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா....

திவ்ய மூர்த்திகள் வடிவே பாபா.....தீவினை அகற்றும் திருவே பாபா....

எங்களின்  பாவத்தை  நீக்கிடும் பாபா...சீரடி மண்ணில் தோன்றிய பாபா... செய்தாயே பற்பல அற்புதங்கள்  பாபா.....

பூவடி தந்து அருள்வாய் பாபா..சர்வேஸ்வரனே சாயி பாபா....தாய்மடி தேடி தவித்தோம் பாபா..தாங்கிட வந்தாய் நீயே பாபா...

ஆதரவான உறவே பாபா...சர்வேஸ்வரனே சாயி பாபா....பரம்பொருள் நீயென அறிந்தோம் பாபா...

பக்தியில் உன்னைத் தொழுதோம் பாபா...கரங்களை நீட்டி காத்திடும் பாபா..தடைகளை நீக்கும் பேரரருள் பாபா...

தன்னிகரில்லா எங்களின் தவைவன் நீ தானே  பாபா...இடர்களை களையும் வளம் தரும் பாபா......

குழந்தை உள்ளம் கொண்டாய் பாபா.....எங்களையும் வெள்ளந்தியாய் இருக்கச் செய்த பாபா.. குறைகளை நீக்கும் குருவே பாபா.....

நிழல் தரும் மரமாய் நின்றாய் பாபா.... விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா....

விதை விடும் பயிராய் பயன் தரும் பாபா.எழுந்திடும் கதிராய் சுடர்விடும் பாபா..

நீரினில் தீபம் ஏற்றிய பாபா...நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா.....

நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா..பூரணமான அருளே பாபா...பூமியை காத்திட வந்தாய் பாபா.

யார் உன்னை போற்றினும் போற்றாவிட்டாலும்  பேதம் பார்க்காமல் நலங்கள் அனைத்தும் வாரி வழங்கும் பாபா...

ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா..அடியவர் கெல்லாம் நலம் தரும் பாபா...

தாமரை பூவாய் சிரித்திடும் பாபா..வாழ்வினில் உன்னை வணங்கிட்டோம் பாபா...

வரும் வினையாவும் போக்கிடும் பாபா.தாழ்வுகள் அகன்றிட செய்திடும் பாபா..

காலையில் விழித்ததும் உன் முகம் பாபா...காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா...

பாலேனும் உள்ளம் படைத்தவர் பாபா...நாளைய பொழுதை நலமாய் பாபா...

நடத்திட அருளும் இறைவா பாபா....தாழ் பணிந்தோமே அன்புடன் பாபா...சர்வேஸ்வரனே சாயி பாபா...

உதி நீர் நோய்களை போக்கிடும் பாபா...உலகோர் போற்றிடும் பகவான் பாபா.....

நீதியை மண்ணில் காத்திடும் பாபா... சத்தியத்தை என்றும் உரைத்திட்ட பாபா...

சோதனைகள் அனைத்தையும்  நீக்கிடும் பாபா..சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா

சாதனை புரிந்திட துணை வரும் பாபா.எளியவர் கெல்லாம் எளியோன் பாபா...

ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா..தலைமுறை காக்கும தயாபரி பாபா...நிலைத் தரும் நிம்மதி நின்பதம் பாபா.....

நினைவுகள் எல்லாம் உன் வாசம் பாபா..... சலனத்தை வெல்லும் சக்தியே.. பாபா....

சுடு மணல் பாறையில் நிழல் தரும் பாபா... சுழ்ந்திடும் இருளை விளக்கிடும் பாபா...

கடலென கருணை கொண்டாய் பாபா...விடை தெரியாத விளக்கம் பாபா...விண்ணும் மண்ணும் ஆழ்வது பாபா...

சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா....அடைமழை நாளில் குடையாய் பாபா...

அன்பரைக் காத்திட வருவாய் பாபா... சரணடைந்தொமே உன்னிடம் பாபா..

இமயத்தை போலே உயர்ந்தாய் பாபா.... இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா...

சமயத்தில் வந்து உதவிடும் பாபா.... சர்வேஸ்வரனே சாயீபாபா..சர்வேஸ்வரனே சாயீபாபா......🙏🙏🙏

ஓம் ஶ்ரீ  சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥 ஒவ்வொரு தனி மனித உயிரும் சீரடி சாய் நாதரின் ஆசியைப் பெற, என்னென்ன உயரியப் பண்புளைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குருவானவர் தன் பக்தர்களிடம் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்பதைப் பற்றி விளக்கம்.....🔥🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின்  உபதேச  அருள்மொழிகள்....🙏🏻🙏🏻

🔥 ஒவ்வொரு தனி மனித உயிரும்  சீரடி சாய் நாதரின்  ஆசியைப் பெற, என்னென்ன உயரியப் பண்புளைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும்  குருவானவர் தன் பக்தர்களிடம்  எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்பதைப் பற்றி விளக்கம்.....🔥

ஒவ்வொரு தனிப்பட்ட மனித உயிர்களும்  தான் கடைத்தேற்றம் அடைய. அவரவர் வாழ்வியல்  இயக்க முறைகளுக்கு ஏற்ற வகையிலும்,பல பிறவிகள் மூலம் பெற்று வந்த கர்ம  வினைகளுக்கு ஏற்ற வகையில் தான் சத் குருவின் உயரிய பேராற்றலை உணர்ந்து பின்பற்றிட முடியும்...ஏனென்றால் ஒரு நற்குரு கிடைப்பது என்பது பூர்வ ஜென்ம புண்ணியப் பலன் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.... ஒவ்வொரு தனி மனித உயிரும்  தனக்கென்று, ஒரு குருவைக் கண்டடைய வேண்டும் என்ற தீராத தாகமும்,ஏக்கமும்  இருப்பவர்களுக்கு  குருவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்.. அது எவ்வாறு என்றால் நான் என்ற அகந்தையும்,கர்வத்தையும்,அகங்காரத்தையும் விடுத்து,  சிறு குழந்தை தன் தாயின் வருகைக்காக காத்திருப்பது போல   குருவின் சூட்சம தரிசனத்திற்கும், ஆசிர்வாதத்திற்கும்  காத்திருக்க வேண்டும்...

மேலும் நமக்கு நாமே நெறி முறைகளை வளர்த்துக் கொண்டு, குருவிடம் ஆத்மார்த்தமான அன்புடனும்,பூரண நம்பிக்கையுடனும்,நிலைமாறாத பக்தி மற்றும் திடமான விசுவாசத்தோடு சத்குருவின் சத்சரித்திர  வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொள்பவர்களுடைய வாழ்வில்  எத்தகைய இடர்கள் வந்தாலும் , குருவானவர் தன் பக்தனுக்குப்பதிலாக, அந்த சுமைகளை தானே ஏற்றுக் கொண்டு பக்தர்களைக் காப்பாற்றுவார்.. குருவை  நம்பால் ஈர்க்க, நாம் அவர்கள் வகுத்த நெறி முறைகளைப் பின்பற்றி , சத்திய கோட்பாடுகளோடும் ,இறைபண்புகளோடும் வாழ்ந்து, ,மனித நேயம் காத்து , தெய்வீகத் தன்மையை வளர்த்துக் கொண்டு, இறையச்சத்துடன் வாழ்ந்து , இறையதிர்வின் மூலக் கோட்பாடுகளை அறிந்து , அண்ட சராசரத்தில் அனைத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பது ஆதி சிவ மூல பேராற்றலே என்பதை உணர்ந்து, அந்த மூலப் பேராற்றலின் முழுத் தன்மையில் தானே குருவின் பேராற்றலும் அடங்கியுள்ளது என்கிற மூல சூட்சமத்தை   உணர்ந்து, அதன் வழி நடந்துக் கொண்டோமேயானால் குருவின் பேர் ஆசியை எளிதாக பெற முடியும்..

மேற்க்கூறிய  மூல சூட்சம வீர்யமிக்க  கோட்பாடுகளையும், சத்திய நெறி முறைகளையும் கடைப்பிடிப்பவர்களுக்கு  குருவின் ஆசியும், அனுக்கிரகமும்  தானாகத் தேடி வரும்....நாம் இறை மற்றும்  குருவின் ஆற்றலைத் தேடி போகத் தேவையில்லை...நாம் மேற்கூறிய  நெறிமுறைகளைப்  பின்பற்றினால் இறையாற்றல் நம்மை தானாக ஆட்கொள்ளும்.. .ஏனென்றால் அனைத்தும் நம்மிடமே இருக்கின்றது ..ஆதி மூல சிவமானது. சீவனாக, உயிராக நம்மிடமே  இருக்கின்றது.. நாம் தான் அதனை உணராமல் மாயையில் நம்மை ஆட்படுத்திக் கொண்டு மூலத்தை உணராமல் இருக்கின்றோம்...குரு என்கின்ற மூல சூட்சம பேராற்றலின் தன்மை  எவ்வாறு சூழப்பட்டு இருக்கின்றதென்றால்.தூய அன்பினாலும் ,  சத்தியத்தாலும், மனித நேயத்தாலும், தெய்வீகத்தாலும்,நேர்மையினாலும்,ஒழுக்க நெறி முறைகளினாலும்,  சாந்தத்தினாலும், தவத்தாலும், தானத்தாலும்,தியாகத்தாலும், நன்னெறி கோட்பாடுகளாலும், நேர்மறை  செயல்களாவும், அகிம்சையினாலும்  சூழப்பட்டு இருக்கின்றது....

மேலும் மனித உயிரின்  இயல் பண்புகளான  மனித நேயமும், தானமும், தவமும் ,ஒழுக்க நெறி முறைகளாலும், ஏற்றத் தாழ்வின்றி அனைவரையும் சமமாகக் கருதுதல், மற்றும்  தனக்கு சொந்தமான பிண்ட உயிர்களைப் போன்று பிற உயிர்களையும் சமமாக  நேசிக்க வேண்டும் என்ற  ஏகத் தாய்மை உணர்வாலும் தான்  குருவின்  சூட்சம பேராற்றல் உருவாக்கப்பட்டுள்ளது..ஆகவே மேலே கூறிய பண்புகளை பெற்று இருந்தோம் என்றால்,  நமது சித்தம் தூய்மையடைந்து சித்தத்தில் உள்ள சித்தம் பரம் என்ற   ஆதி மூல பேராற்றலாகிய சிவம் வெளிப்படும்...சித்தம் செத்தவர்கள் சித்தனாகிறான்... சிவமாகின்றார்கள்...ஆகவே சித்தம் தூய்மை அடைந்து விட்டால் குருவின் பேராற்றலும் ஆதி மூல பேராற்றலும் நம்மை ஆட்படுத்திக் கொண்டு, அந்த ஆற்றல்  தானாக நம்மில் இருந்து நம்மை இயக்கவும் இயங்கவும் ஆரம்பிக்கும்.. 

மேற்க்கூறிய பண்புகளைப் பெற்றவர்கள்  எதனையும் தேடி ஓடி நாடத் தேவையிவ்லை. அவர்கள் நாவால் உச்சரிக்கின்ற நாமக்காரகனும், தெய்வ தேவதா சக்தியின் பேராற்றலும்  தானாக விழிப்புற்று  நம்மில் இயங்க ஆரம்பிக்கும்... சித்தம் தெளிவடைவதற்காக, நமக்கு  வகுக்கப்பட்ட இயல்  நெறிமுறைப்  பண்புகளோடு நாம் பின்பற்றாத  காரணத்தினால் தான்,  நம்மால் வாழ்வியல் இயக்க முறைகளில் நம்மை நேரியப் பாதையில் நம்மை  உட்புகுத்திக் கொண்டு வெற்றிக் காண முடிவதில்லை....இந்தப் பண்புகளையும் கோட்பாடுகளையும் பெற்றவர்களுக்கு பிரபஞ்சம் வாழ்த்தி அனைத்தையும் வாரி வழங்கும் ..பிரபஞ்ச ஆற்றல்  அன்பு மற்றும் மேற்கூறிய பண்புகளின் மூல வித்தாகத் தான் அமைந்துள்ளது . மேலும் ஏகத்தன்மையை நாம் வளர்த்துக் கொண்டோமேயானால்  பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடைவெளி இல்லாமல் ஒரு முழுமைடைந்த நிலையில் மூல ஆற்றலான பிரபஞ்சத்தோடு கலந்து விடுவோம்..நாமும் பிரபஞ்சமும் வேறல்ல....

விழிப்புணர்வோடு  பற்றில்லாமல் சாட்சியாக எதனையும் அணுகினால் குருவும்,இறையும், நமக்குத் தேவையானவற்றை  அனைத்தையும் வழங்கும் ... பிரபஞ்சம் என்ற மூல  ஆற்றலோடு நாம் கலந்து விடுவோம்... இதனால் நாம் எண்ணுகின்ற ஆக்கப்பூர்வமான , பிறரைப் பாதிக்காத  செயல் திட்டங்கள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கும்....இதனை உணர்ந்து தெளிந்து குருவழிப் பாதையை பின்பற்றி உயர்ந்த நிலையை அடைவோம் சாய் அன்பர்களே. ...

ஒம்  ஶ்ரீ   சாய்ராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு  தியான பீடம்..🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது..... ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும்... .வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது என்பதை மனதில் இருத்திக்கொள்வீராக.🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥எவ்வளவு துன்பம் தரும்  சோதனையாக இருந்தாலும், ஒரு  சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது...ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும்..வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது என்பதை மனதில் இருத்திக்கொள்வீராக.🔥

பக்த வத்சலனான சத்குரு தன கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார்... அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை.உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய்...முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்...பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடிஅலைகிறேன்...வெளிவேஷம் போடுபவர்களுக்கு நான் என்றுமே அகப்படுவதில்லை... 

உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக..மனத்தில் அணுவளவு தயக்கமும் வேண்டா....என்னுடைய வார்த்தைகளில் முழுவிசுவாசம் வைத்து,மனதை திடப்படுத்திக் கொள்வீராக"...என்னுடைய காரியங்களை நானே செய்கிறேன் என்று சொல்லுவது அகங்காரம்...சூத்ரதாரி சாயீயே...இயக்கம் முழுக்க முழுக்க சாயீநாதனைச் சேர்ந்ததே.. அகங்காரத்தை பாபாவின் பாதத்தில் சமர்பித்துவிட்டால் அபாரமான சுகம் கிடைக்கும் என்பதனை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

சீரடி சாயீன் புனித வேதநூலான சாய் சத்சரித்திரத்தில் அத்தியாயம் இரண்டில் அடங்கியுள்ள மறை ஞான மூல விளக்கவுரை.....ஹேமத்பந்த் என்ற பெயர் நாமத்தை, சாய் சத்சரித்திரத்தை எழுதிய ஆசிரியருக்கு பகவான் பெயரிடக் காரணம் என்னவென்றால்...🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥சீரடி சாயீன் புனித வேதநூலான சாய்  சத்சரித்திரத்தில்  அத்தியாயம்  இரண்டில் அடங்கியுள்ள  மறை ஞான மூல விளக்கவுரை....ஹேமத்பந்த் என்ற பெயர் நாமத்தை,  சாய் சத்சரித்திரத்தை எழுதிய ஆசிரியருக்கு பகவான் பெயரிடக் காரணம் என்னவென்றால்...🔥

 ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை எழுதிய ஹேமத்பந்த் இங்கே கூறுகின்றார்....என்னை ஏன் ஹேமத்பந்த் என்னும் பெயரால் அழைக்க வேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன்...இச்சொல் 'ஹேமத்ரியபந்த்' என்ற வார்த்தையிலிருந்து திருத்தப்பட்டதாகும்.. இந்த ஹேமத்ரியபந்த் யாதவ அரசவம்சத்தைச் சேர்ந்த ராமதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ்பெற்ற மந்திரியாவார்...கல்வி, கேள்வி நிரம்பப்பெற்று, நற்பண்புகள் நிறையப்பெற்ற அவர், ஆன்மீக விஷயங்கள் அடங்கிய 'சதுர்வர்க சிந்தாமணி' மற்றும் 'ராஜ ப்ரஷஸ்தி' போன்ற பல உயர்ந்த நூல்களின் ஆசிரியருமாவார்.  கணக்குப் பேரேடுகளில் புதியமுறைகளைக் கண்டுபிடித்துப் புகுத்தியவரும் மற்றும் மராத்தியச் சுருக்கெழுத்தின் கர்த்தாவுமாவார்.... ஆனால் நான் முற்றிலும் மாறுபட்டவன்....  அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர பாமர எண்ணத்தோன்...எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்காகச் சூட்டப்பட்டது என்பது விளங்கவில்லை..ஆனாலும் அதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து அது என் அகங்காரத்தை அழித்து, பணிவாகவும் , அடக்கமுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது  என நினைத்தேன்... விவாதத்தில் எனக்குள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப்பட்டதாகும்.

எதிர்கால  நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில், பகவானின் சொற்கள் ( ஆசிரியர் தபோல்கரை ஹேமந்த்  என்று  பகவான்  பெயரிட்டது) முக்கியமானதும் தீர்க்க தரிசனம்  நிறைந்ததும் ஆகும்..ஏனெனில்  மிகவும் புத்திசாலித்தனமாக சாயீ சமஸ்தானத்தின் நிர்வாகங்களைக் கவனித்தது, எல்லாக் கணக்குகளையும் நன்றாக வைத்திருந்தது, முக்கியமானதும் ஆத்மார்த்த விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை, 'நான்' அகந்தை தன்மையை  விட்டுவிடல், தன்னையுணர்தல் போன்றவற்றைக் குறிக்கும் சாய் சத்சரிதம் என்ற அத்தகைய சிறப்பான நூலின் ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்.ஹேமத்பந்த் பகவான் மீது அளவற்ற குருபக்தியும் பணிவும் அடக்கமும் கர்வமின்மையும் கொண்ட காரணத்தால் சாய்சத்சரித்திரம் எழுதுகின்ற புனிதமான பணியை பகவான் ஹேமத்பந்த் அவர்களுக்கு  வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

எமது குழந்தைகளே..நீர் யாவரும் சகல விதமான  ஐஸ்வர்யத்தை பெற்று ,  ஒழுக்கத்தோடும் சிறந்த நற்குணங்களோடு இருந்தாலும், வறுமையின் காரணமாக மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்  மனதூய்மையும்,தன்னலமற்ற சிந்தனைகளும், எண்ணங்களும் இல்லை என்றால் , எதையுமே நீ எதிர் கொள்ள முடியாது. சாதிக்கவும் முடியாது... மிகவும் முக்கியம் சகிப்புத் தன்மையோடு வாழக் கற்றுக் கொள்வீராக....

நான் பக்கபலமாக இருந்தாலும் நானே அனைத்திற்கும் சர்வாதிகாரி  என்றாலும் அனைத்தும் எனக்கு கட்டுப்பட்டு இருந்தாலும் உன்னிடம் நிலையான,உண்மையான, ஆத்மார்த்தமான,விசுவாச பக்தியும் இருந்தால் மட்டுமே, நான் உன்னை அனைத்திலும் இருந்து பாதுகாக்க முடியும்....நம்பிக்கையையும், சகிப்புத்தன்மையும்,  தைரியத்தையும், நேர்மையையும்,சத்திய நெறிமுறைகளை கடைப்பிடிப்பவர்களாக, மனித  நேயம் பேணி புனித நிலையை அடையக்கூடிய தன்மையில் உள்ளவர்களை  நான் சற்று உற்று நோக்கி அவர்களின் வாழ்வியலின் இயக்கத்தில்  செயல் நோக்கத்தை சரி  செய்கின்றேன்...உமது சித்தத்தை தூய்மைப் படுத்தவே இதை அனைத்து நற்குணங்களையும்,நல்ல நெறிமுறைகளையும் அறிவுருத்துகிறேன்.

இவை யாவும் வாழ்க்கைப் பாதையில் உம்மை விழிப்புணர்வோடு செயல்பட வைக்கும்... உம்மை முன்னேற்றப் பாதையில் கொண்டு சேர்க்கும்...ஆகவே உங்களுக்காகவே இதனை அனைத்தும் அறிவுருத்துகின்றேன்..இதில்   யான் எனக்கு எந்தப் பலனும் இல்லை ..உங்களை மிகச் சிறந்த கர்ம யோகியாக இந்த உலகம் எமது குழந்தைகளை செல்லாக் காசாக நினைத்து மதிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காகவே இதனை அறிவுருத்துகிறேன்.. உன்னிடம்  இருந்து இதைத் தான்,  நான் எதிர்பார்க்கிறேன்...ஆகவே புரிந்து உணர்ந்து செயல்படுத்துவீராக...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீட்ம்...🙏🏻🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻

வியாதிகளுக்கும், கவலைகளுக்கும், வலிகளுக்கும், இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும், தாகத்தாலும், முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ, எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் பயமற்று உலவுகின்றனவோ, அவ்விடமே துவாரகை (சொர்க்கம்) என்பதை அறிவீராக....           

புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை. செல்வத்தை தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது...அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை!...நிலைமை இப்படி இருக்க உன்னுடைய பணத்திலிருந்து  நீ மனமுவந்து  ஒரு  பைசா கொடுத்தாலும்  அது எனக்கு ஒரு லட்சத்திற்கு ஈடாகும்.... கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும்.... உனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை பெறுவதில் நான் திருப்தி அடைகிறேன்....

தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும், இரக்கமாகவும், கெஞ்சுகிறாய்... காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைபடுவதில்லை! என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்"... 

ஸ்ரீசீரடி சாய்பாபா...🙏

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻.

தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது.., குட்டிகள் அந்தக் கரையில் பாலும், அரவணைப்பின் கதகதப்பும் இன்றி இருக்கின்றன...தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கையளித்து வளர்ச்சியடையச் செய்கிறது.குட்டி ஆமைகள் எப்போதும் தாயைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டாம், புல்லும் வேண்டாம், வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்கு போஷாக்கு. .யான் இவ்வாறாகவே உங்களைப் பாதுகாக்கின்றேன்... 

நான் ஒன்பது வார விரதமிருக்கலாமா..? சப்தாகம் செய்யலாமா..? நேர்ந்து கொள்ளலாமா..? சீரடிக்கு போய் வரலாமா..? என்ன செய்தால் என் கஷ்டம் தீரும்? என்று யோசிக்கவே வேண்டாம் ..நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை... தாயான சாயீயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்போதும்! அது உங்களுக்கு போஷாக்கு தரும். வறுமையிலிருந்தும், பிரச்சினை போன்றவற்றிலிருந்தும் உங்களை மீட்டுவிடும்...

விதைத்தவுடன் அறுவடைக்கு செல்வது எப்படி மடத்தனமோ, அப்படித்தான் வேண்டியது உடனடியாக பலிக்க வேண்டும் என நினைப்பது. உனது வேண்டுதல் கேட்கப்பட்டாகிவிட்டது. அதற்கான வழிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்ற காலத்தில் எல்லாமே சுலபமாக, சுமூகமாக முடியும் என்பதை என்னிடம் வேண்டியவுடனே  தெரிந்து கொள்ளவேண்டும். ..எனக்கு படையல் போடுவதைவிட, பசித்தவனுக்கு உணவு கொடுப்பதையும், ஆதரவில்லாதவனுக்கு உதவி செய்வதையுமே நான் விரும்புகிறேன். ஏனென்றால், நீ சுகமாக இருப்பதால் உலகத்திற்கு நன்மை விளையும் என்பதால் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து நிறைவாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய ஆவல் எமது குழந்தைகளே.    

ஸ்ரீசீரடி  சாய்பாபா..🙏🙏🙏.

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

🔥🔥ஶ்ரீ சீரடி சாய்பாபாவின் புனித வேதமான சாய்சத்சரித்திரத்தின் அத்தியாயம் இரண்டில் அடங்கியுள்ள மறை ஞான மூல விளக்கவுரையில் இருந்து...... குருவின் முக்கியத்துவம் என்ன என்பதனை, தனது பக்தன் காகா சாஹேப் தீஷித்திற்கு பகவான் அறிவுருத்திய மறை ஞான சூட்சம உரை....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  அருள்மொழிகள்..🙏🙏 

குருவின் முக்கியத்துவம் என்ன என்பதனை, தனது பக்தன் காகா சாஹேப் தீஷித்திற்கு  பகவான் அறிவுருத்திய மறை ஞான சூட்சம உரை....🔥🔥

ஶ்ரீசீரடி பகவானின் அதி தீவிர பக்தர்   காகா சாஹேப் தீஷித்  என்பவர் ஆவார்...இவர் பகவானை சந்தித்து   தான் சீரடியை விட்டுப்போக வேண்டுமா என்று கேட்கின்றார்...அதற்கு  பாபா "ஆம்" என்று பதிலுரைக்கின்றார்...பிறகு "எங்கே போவது" என்று  தீஷித் கேட்கின்றார்...  பாபா "உயர... மேலே...!" போக வேண்டும்  என்று கூறுகின்றார்...அதற்கு தீஷித்  "வழி எப்படிப்பட்டது" என பாபாவிடம் கேட்கின்றார்...அதற்கு பாபா கூறினார், "அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன...  இங்கிருந்தும் (சீரடியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது....பாதை கடினமானது...புலிகளும், ஓநாய்களும்,  வழியிலுள்ள காடுகளில் உள்ளன.... அதற்கு தீஷித்   "ஒரு வழிகாட்டியை  என்னுடன்  அழைத்துச் சென்றால் என்ன...?"  என்று கேட்கின்றார்....அதற்குப் பாபா கூறினார், "அப்போது கடினம் இல்லை.... புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார்...வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம்... அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது."..

இப்போது தீஷித் உணர்கின்றார்....குருவின் முக்கியத்துவத்தை மறை ஞான விளக்கமாக, உவமானத்தோடு குருநாதர் அறிவுருத்தியதை உணர்ந்து தெளிகின்றார் தீஷித்.....

மேலும் குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதிலே என்று ஏற்றுக் கொள்கின்றார்...ஒரு மனிதன் சுதந்திரமானவனா அல்லது கட்டுப்பட்டவனா என்னும் விவாதம் ஆன்ம விஷயங்களில் உபயோகமில்லை என்றும், இவ்வத்தியாயத்தின் மராத்தி மூலப்பதிப்பில் விளக்கப்பட்டபடி பெரிய அவதாரங்களான ராமர், கிருஷ்ணர், முதலியோர் தமது குருக்களான வசிஷ்டர், சாந்தீபன் ஆகிய முனிவர்களிடம் தன்னையறிவதற்காக சரணடைந்தார்கள் என்றும், குருவினுடைய உபதேசத்தினாலேயே பரமார்த்திகம் அடையப்படுகிறது என்றும், நம்பிக்கையும், பொறுமையுமே அத்தகைய முன்னேற்றதிக்குத் தேவையான நற்பண்புகளாம் என்பதுதான்  பாபாவின் திருக்குறிப்பாகும் என்பதை அறிவோமாக...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

🔥எனது உபதேச மொழிகளை பின்பற்றுங்கள்...எம்மை ஆராய முற்படாதீர்கள்..உங்களுக்கு தேவையானதை எப்பொழுது வழங்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் உம்மை  உற்று நோக்குகின்றேன்...ஆகவே நம்பிக்கையை இழக்காதீர்கள்...🔥

எனது அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்....எனது லீலைகளை ஆனந்தமாக பார்த்துக் கொண்டு  உட்கருத்தை கிரகிக்கும் விதத்தில் மனதைத் என்னிடம் திருப்புங்கள்....என் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்...நான் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்..எனது லீலைகள் தென்பட்டுக் கொண்டிருந்தாலும் சிறிதும் விளங்காது....சிருஷ்டி தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருந்தாலும், எப்படி உண்டாக்கினார் என்பது மாத்திரம் விளங்காது....என் பக்தர்களின் ஷேமத்தை நான் காப்பாற்றி கொண்டே இருப்பேன்...ஆகவே அமைதியுடனும் நம்பிக்கையுடனும் எம்மை பின்பற்றி வரவும்...

ஸ்ரீசீரடி  சாய்பாபா..🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  அருள்மொழிகள்..🙏🙏

சீரடிபகவானுடைய நன்மதிப்பையும் பேரன்பையும் பெற்ற உயரிய பக்தன் மாதவராவ் தேஷ்பாண்டே கூறுகின்றார்..🙏

பகவானே  எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும், உண்பதற்கு இனிப்புக்களையும் வழங்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகின்றோம்.  தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலானவற்றையோ நாங்கள் வேண்டவில்லை.  தங்கள் பாதாம்புயத்தின்பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும், அதற்கு ஆசீர்வதியுங்கள் பாபா என்று கூறுகின்றார் மாதவராவ்...ஸ்ரீ சாய் சத்சரித்திரம்..🙏

இரவும், பகலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ எவன் ஒருவன் என்னைப் பற்றி நினைத்து வருகிறானோ, அவன் இனிப்பும் சர்க்கரையும்போல, அலையும் கடலும் போல, கண்ணும் ஒளியும்போல என்னுடம் முழுமையாக இணைகிறான். அப்படிப்பட்டவன் எதற்கும் பயப்படத் தேவையில்லை..என் நாமத்தை எப்போதும் கூறுகின்றவர்கள், என்னையே அனைத்திற்குமாக நம்பிகின்றோம் என்று கூறுகின்றவர்கள்  என் வார்த்தையின் மீது முழு நம்பிக்கையை வைத்து காத்திருப்பார்கள்..இந்த உலகமும் அதனுடைய மாயை  வலைகளால் உண்டான அனைத்தும் அழிந்துவிடும்...ஆனால் என்னை நம்புகிறவர்களின் நம்பிக்கை ஒரு நாளும் அழிந்துவிடாது...

ஜீவனத்திற்காக (வாழ்கையை சார்ந்து) நீங்கள் கவலைப்படுகிற எல்லா விஷயங்களும் அழிந்துவிடும்....என்னையே எப்போதும் பற்றிக் கொண்டிருப்பவர்களுடைய குறிக்கோளை நான் அழிப்பதே இல்லை...அவனுக்கும், எனக்கும் அவநம்பிக்கை என்ற தடையில்லாமல் இருப்பதால் நான் வேகமாக நுழைந்து அவனைக் காத்துக்கொள்ள என்னால் முடிகிறது என்ற மூல சூட்சமத்தை  உணர்வீர்களாக..

ஶ்ரீ சீரடி  சாய்பாபா...🙏

ஓம்  ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

🔥🔥ஶ்ரீசீரடி சாய் பகவான் தன் பக்தர்களை எவ்வாறு கடைத்தேற்றம் அடையச் செய்கின்றார் என்பதன் விளக்கம்....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏

🔥ஶ்ரீசீரடி சாய் பகவான்  தன் பக்தர்களை  எவ்வாறு கடைத்தேற்றம்  அடையச் செய்கின்றார்  என்பதன் விளக்கம்....🔥🔥

நமது சத்குருவான சீரடி சாய்நாதர் , நம்  சித்தத்தை மட்டுமே நோக்கி நம்மை  நல்வழிப்படுத்திக்  கடைத்தேற்ற காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.. அதாவது சொல், செயல், மனம்  அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இயங்கி சித்தம் தூய்மையாக இருக்கின்றதா  என்பதைத் தான் நோக்குகின்றார்கள்..

அவ்வாறு  நம்மில் பெரும்பாளரினர் குரு மற்றும் ஆதி மூல இறையாற்றல் வகுத்த கோட்பாட்டு நெறி முறைகளைப்  பின்பற்றிட,  ஒரு தனி மனித உயிரால் சாத்தியமில்லை  என்ற காரணத்தினால் தான் குருவை நாடுகின்றோம்..ஏனென்றால் குருவானவர் நம் சித்தத்தை சீர்செய்து, நம் கர்ம வினைகளை கரைத்து, நான் என்ற அகந்தையையும், அகங்காரத்தையும் , கர்வத்தையும் அகற்றி, நம்மை புடம் போட்டு நம் வாழ்வியல் இயக்கத்தில் எவ்வாறு மனிதமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை  கவனித்து ,அதனை சூட்சமமாக  நமக்கு உணர்த்தி  தாய்மையுணர்வோடு போதித்து அதன் படி நம்மை செயல்பட வைக்கின்றார்..மேலும்   தீய நிலைப்பாட்டிலிருந்து  நம்மை அகற்றி புனித நிலைக்கு உயரவும், வஞ்சகம், பேராசை, ,காழ்ப்புணர்ச்சி,பழி வாங்குதல், புறம் கூறுதல்,  பிறர் வாழ்வதை பார்த்து அதனை ஏற்றுக்கொள்ளாத நிலை, நன்னெறியைக்  கடைப்பிடிக்காமல் தான் தோன்றித் தனமாக வாழ்தல் , ,  

நான் என்கின்ற  அகந்தையில்  என்னால் தானே அனைத்தும் சாத்தியம் என்ற வீணான பிற்போக்குச் சிந்தனையில் இருப்பவர்களை சாய்  குருவானவர், ஒவ்வொரு பக்தனின் அகங்காரத்தை நீக்கி நல்வழிப்படுத்தி, தன் பக்தர்களின்  வாழ்க்கை முழுவதும்  தாய்மையுணர்வோடு இருந்து வழி நடத்துகின்றார்..அவ்வாறு குரு  நம்மை வழிநடத்த நாம் அவர்களோடு எவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டும் என்றால்... நம்மை  ஆத்மார்த்தமான குருவிடம்   ஒப்படைத்து, தூய்மையான நிலையான  அன்புடன் பக்தி செய்து, நம்பிக்கை, பொருமையைக் கடைப்பிடித்து அதனுடன் சேர்த்து நேர்மை, வைராக்கியத்தை மேற்கொண்டு, மேலும்   சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு, குரு கூறிய அருள்மொழிகளை நம் காதால் கேட்டு, குரு வழிப்பாதையில்  செல்ல வேண்டும்...மேலும் குருவின் சூட்சம பேராற்றலை உணர்ந்து,

அதனுடன்  கலந்து.. கரைந்து .. காதலாள் கசிந்து உருகி.. மனதை வெற்றிடமாக்கி பஞ்சு பொதியாய் வைத்துக் கொண்டு,  சிறு குழந்தையாக நம்மை  பாவித்து குருவின் மேல் தீராத ஏக்கத்தோடு நிவைமாறாத  அன்பால் அவரை நம்பால் ஈர்த்து  முழுமையாக ஒப்படைத்து சாட்சியாக குருவை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டும் ...குரு என்ற பேராற்றல் அன்பின் வடிவமாக இருக்கின்றது... தூய்மையின் வடிவமாக இருக்கின்றது..பேர் ஆனந்தத்தின் இருப்பிடமாகவும் , பேர் ஆதிக்கத்தின் பிறப்பிடமாகவும்  இருக்கின்ற காரணத்தினால்  குருவை அன்பினால் எளிதாக நம்மோடு பிணைத்துக் கொள்ள முடியும் ...இந்த மேற்கூறிய மூல சூட்சம தன்மைகளைப் படித்து உள்வாங்கி நாம்  அனைவரும் குருவழிப் பாதையைக் கடைப்பிடித்து பரிபூரணமாக குருவின்  ஆசிப்பெற்று.. இக வாழ்க்கையில் நன்றாக  வாழ்ந்து, சித்தத்தை தூய்மைப் படுத்தி சித்தத்தில் வீற்றீருக்கும் சித்தம் பரமான  ஆதி திரு  மூலத்தையும் ஒரு சேர அடையவே குருமார்கள்  வழி நடத்துகின்றார்கள்...நம் அனைவரும் குருவை சிரம் தாழ்த்தி  பணிந்து  அவர் வகுத்த பாதையில் பயணிப்போம்...குரு சேவைப்புரிவோம்...நாம் அனைவரும் சீரடி சாயீன் நாமத்தை  உச்சரித்து குருவழிப் பாதையில் பயணித்து, குருவின் ஆசியைப் பெற்று வாழ்வில் மேன்மை நிலையை அடைவோம்......

ஓம் ஶ்ரீசாய்ராம்...🙏🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்....🙏

🔥எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்யும் இயல்போ மற்றவர்களுடன் போட்டிப் போடுவதோ நற்குணம் அன்று.... உள்ளார்ந்த நம்பிக்கையும், தைரியமும்,  பொறுமையும், விசுவாசமும்  இல்லையனில் என்னை அடைவது சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்வீர்களாக....🔥🔥

நீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன்...நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப்  போதிக்கவே நான் தோல்வியை அனுமதித்தேன்..உனது சிந்தனை இன்றைய காலக்கட்டத்தை பார்க்கிறது.., எனது நோக்கமோ உனது  எதிர்காலம் தொடர்பானது... நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன்.  

ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான்.. அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான், அன்புக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனை தேடி அலைகிறான். பாஷாண்டிகளுக்கு (வெளிவேஷம் போடுபவர்களுக்கு) அவன் என்றுமே அகப்படுவதில்லை. 

எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்துவிடுகிறீர்.. அவ்வளவு மெல்லியதான நூலைப் பிடித்திருக்கிறீர். எப்படி இருந்தால் என்ன...? இந்த தேசத்தில் இருப்பினும், அல்லது வேறு தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந்நூலால் உம் திருவடிக்கு இழுத்து வந்துவிடுகிறீர். அவ்வாறு இழுத்துவந்து அவர்களை கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தையை பராமரிப்பதுபோல சிரமமின்றி அவர்களை சுலபமாக கவனித்துகொள்கிறீர். 

ஸ்ரீ சாயி சத்ச்சரித்திரம்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய  நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏

நமது முதலாளி தன்னைப் பிடித்து நெருப்பில் போட்டுவிடு..! என்று கூறினால் நாம் செய்வோமா...? உளைச்சேற்றில் இறக்கிவிடு என்று கூறினால் அதைச் செய்வோமா...? அப்படித்தான், பாபாவும் நாம்  எவ்வளவு அதிகமாக பிரார்த்தனை செய்து கொண்டாலும் கூட நமக்கு எது நல்லதோ, எது நன்மை உயர்த்துமோ அதை மட்டுமே  செய்வார்... தவறாக நாம் கேட்பதைத் தராமல் தட்டிக்கழிப்பதைப் போல காலம் தாழ்த்துவார்.

அந்த இடைக்காலம் வரை அனுபவங்களையும், உணர்வு மாற்றங்களையும் கொடுத்து நம்மை பக்குவப்படுத்துவார்...என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள்.... இல்லாவிட்டால் நான் செய்யும் அற்புதங்களின் காரணமாகவாவது என் மீது நம்பிக்கை வைத்து என் நாமத்தை துதி செய்யுங்கள்....உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் பிரார்த்தனை  அனைத்திற்கும்  பதில் கொடுப்பதற்காகவே  நான் அவதரித்து வந்தவன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்...ஶ்ரீசீரடி சாய்பாபா.🙏

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

 ஓம்  ஶ்ரீ   சாய்நாதாய நமஹ...🙏🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  அருள்மொழிகள்...🙏

எமது அன்பார்ந்த குழந்தைகளே....நீங்கள்  வீட்டிற்குள் நுழையும்போது உனக்கு முன் நான் வாசலில் வந்து வரவேற்பதும், நீ வெளியில் செல்லும்போது உன்னை வழியனுப்பி விட்டு, துணையாகவும் வருவதும், உன் குரலுக்கு பதில் கொடுப்பதும் நானே! உன் வேண்டுதல் தாமாக நிறைவேறும் என்பதை புரியவைக்க இனி வெளிப்படையாக நான் செயல்படுவேன்....அனைத்தும் இருக்கிறது என்ற  குணாதிசயமோ, இல்லை என்னும் பாகுபாடோ , இரண்டுமே இல்லாததும் லிங்க (ஆண்/பெண்) பேதம் இல்லாததும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒலியாலும், ஒலியினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டது எம்  ரூபத்தில் இருக்கிறது என்பதை அறிவீர்களாக.. .

நாயாயினும், பன்றியாயினும், ஈயாயினும் சரி, யாரையும் எதையும் அவ மரியாதையுடன்  வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்யாதீர்கள்... ஏனெனில் முன் ஜென்ம பந்தம் இல்லாமல் யாரும் எதுவும் நம்மிடம் வருவதில்லை... உனக்கும், எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக... அப்பொழுது நமக்குப் போகவும், வரவும் பயமில்லாத ஒரு பாதை கிடைத்துவிடும்.... 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே அந்த தடுப்புச் சுவர்.. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடையமுடியாது என்பதை மனதில் இருத்துவீர்களாக...  

தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும், இரக்கமாகவும், கெஞ்சுகிறீர்கள்..; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைபடுவதில்லை! என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்".பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை, சிருஷ்டியனைத்திலும்  (கண்களுக்கு புலப்படும்) சாயீ சூட்சுமத்தை விட சூட்சமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர். அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும், வடிவமும், வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது..

ஸ்ரீ சாய் சத்ச்சரித்திரம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

🔥🔥சாய்சரித்திர அத்தியாயம் இரண்டில் இடம்பெற்றுள்ள மூல விளக்கவுரை என்னவென்றால் ...சீரடி பகவான் எவ்வாறு தன் பக்தர்களை ஆழமாக உற்றுநோக்கி வழிகாட்டுகின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இரு பக்தர்கள் பேசிய அனுபவ உரை...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻

🔥🔥சாய்சரித்திர அத்தியாயம்  இரண்டில் இடம்பெற்றுள்ள  மூல  விளக்கவுரை என்னவென்றால் ...சீரடி பகவான்  எவ்வாறு தன் பக்தர்களை ஆழமாக உற்றுநோக்கி வழிகாட்டுகின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இரு பக்தர்கள் பேசிய அனுபவ உரை...🔥🔥

 குருவின் வழிக்காட்டுதலைப் பற்றி காகா சாஹேப் தீஷித்திற்கும்  பாலா சாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம்  நடைபெற்றது....  "நம் சுதந்திரத்தை நாம் ஏன் இழக்கவேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்" என்று நான் விவாதித்தேன்.  "நாம் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார்..?  ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்... தூங்குவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்..?"  இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன்...  பாடே கர்மத்திற்க்காக (தலைவிதி) வாதாடிக் கூறியதாவது, "நடப்பது நடந்தே தீரும்.  பெரியோர்கள் எல்லாம் தோல்வியுற்று இருக்கின்றார்கள்.  மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் வேறுவழியில் செயல்படுகிறது...  உம்முடைய புத்தி சாதூர்யத்தைத் தள்ளிடுக.  பெருமையும் அகங்காரமும் உமக்கு உதவாது"... கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்குமேல் நடைபெற்றும் வழக்கம்போல் ஒரு முடிவும் காணப்படாது முடிவாக களைப்படைந்து விட்டோம்... நானும் மன அமைதியை இழந்தேன்...வலிவான சரீர அபிமானம், அகங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையெனக் கண்டேன்.  அகங்காரமே விவாதத்தை வளர்க்கின்றது என்றே கூறலாம்...

பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து  பாபா பின்வருமாறு வினவினார்.   சாதே வாதாவில் என்ன நடந்துக் கொண்டிருந்தது..? விவாதம் எதைப் பற்றியது..?  என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, "ஹேமத்பந்த் என்ன கூறுகிறார்..?"  இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்... நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாதே வாதாவானது மசூதியினின்று சற்று  தூரத்திலிருக்கின்றது...  சர்வ வியாபியாகவும், அகத்திலிருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பகவான்  எங்ஙனம் அறிந்திருக்க முடியும்..? என்பதை உணரும் போது அண்ட சராசரத்திலும் நீக்கமற நிறைந்த ஆதி மூல சூட்சம ஆற்றலுக்கு நம்முடைய  உரையாடலை அறிய முடியாதா என்று உணர்ந்தேன்..  இதிலிருந்து பகவான் நம்மை கணம் நேரம் தவறாது உற்று நோக்கி கொண்டு இருக்கின்றார் என்பது உணர்ந்து நல்வழியில் செல்வோமாக...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻

🔥🔥என்னிடம் வரும் பக்தர்களுக்கு உடனடியாக நான் வாரி வழங்கி விடுவதாகச் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. யாருக்கு நான் அனுக்கிரகம் (அருள்) செய்ய விரும்புகிறேனோ அவனை முற்றிலும் பரிசுத்தப்படுத்தி  அவனிடமிருந்து அனைத்தையும் பறித்து கொள்கிறேன்... அது ஐஸ்வர்யமாகவும்  இருந்தாலும் சரி, கர்ம  வினைகளாக  இருந்தாலும் சரி, அல்லது புண்ணியமாக இருந்தாலும் சரி. 🔥🔥

நானே கர்த்தா (காரணமாவேன்)  என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துக் கொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக்  கொள்வேன். இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்...என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், என் நிகழ்ச்சிகளையும், வாழ்வைப்பற்றியும் எண்ணி என்னை நினைவில் இருத்திக் கொள்பவர் ஆகியோர் உலகப் பொருள்கள், உணர்ச்சிகளில் கவனம் செலுத்த மாட்டார்.என் அடியவர்களை சாவின் வாயிலிருந்து இழுத்து விடுவேன்.....

ஸ்ரீ சீரடி  சாய்பாபா..🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

🔥🔥குருவிற்குச் சமமான தெய்வமும் இல்லை.... பிதாவும் இல்லை..,பந்துக்களுமில்லை... குருவிற்குச் நிகரான சுவாமியும் இல்லை..... அவருக்குச் சமமான பதவியுமில்லை...🔥🔥

விவேகமுடையவர்களுக்கு விவேகமாயும், ஆராய்பவருக்கு ஆராய்ச்சியாயும், பிரகாசம் உடையவர்களுக்குப் பிரகாசமாயும், ஞானிகளுக்கு ஞான ரூபியாயும் உள்ளது குருவே...சிவனுடைய கோபத்திலிருந்து காப்பாற்றக் கூடியவர் குருவின் பேராற்றல்...குருவில்லாமல் திருவில்லை.... குருவினுடைய கோபத்திலிருந்து யாராலும்  காப்பாற்ற முடியாது... ஆகையால் முழு முயற்சியுடன் குருவின் கட்டளையை பின்பற்றிட முயல  வேண்டும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏.

புனிதத்தலமான சீரடியில் நாம் அனைவரும் இன்று வணங்கி மகிழ்ந்து இளைப்பாறும் இடமான சமாதி மந்திர் உருவானது எவ்வாறு என்பதன் விளக்கம்.🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🔥புனிதத்தலமான சீரடியில் நாம் அனைவரும் இன்று  வணங்கி மகிழ்ந்து இளைப்பாறும் இடமான  சமாதி மந்திர் உருவானது எவ்வாறு என்பதன் விளக்கம்...🔥

செப்டெம்பர் இருபத்தெட்டாம் நாள் பகவான்  உடல் நிலை மிக மோசமாக நலிவடைந்தது... ஆயிரத்து தொள்ளயிரத்து பதினெட்டாம் ஆண்டு பதினைந்தாம் தேதி விஜய தசமி நாளன்று,ஏகாதசி துவங்கியதும்  பூவுலகை நீத்தார் சீரடி பகவான்..அதற்கு முன் கோடீஸ்வரரான பூட்டி என்பவர் கனவில் பகவான் தோன்றி சீரடியில் ஒரு அழகிய கட்டிடம் கட்டி அதை  இறைவன் இருப்பிடமாக நிர்மாணிக்கும் படியும் அறிவுருத்தினாராம் பகவான்...அதே நேரம் உன்னத சீடரான ஷாமா கனவிலும் தோன்றி பூட்டிக்கு  உதவும்படி கூறினாராம்..பூட்டி உடனே பாபாவிடம் ஆசி பெற்று வேலையை துவங்கினாராம்..

அனைவரும் அழகிய ராதா கிருஷ்ணர் சிலையை வைக்க திட்டமிட்டார்களாம்.ஆனால் பகவானோ " நான் அங்கு தங்குவேன்... ஆடுவேன் ..பாடுவேன்.. என்று சூட்சமமாக கூறியிருக்கின்றார்....பகவான் உடல் நலிவுற்றபோது  வாகே என்பவர் , சீரடிக்கு பகவானைக் காண வந்தாராம்..அவரை ராம விஜயம் என்ற நூலை படிக்கும்படி அறிவுருத்தினாராம் பகவான்....தொடர்ந்து சில நாட்கள் படித்த வாகே களைப்புற்றாராம்...பாபா தன்னை பூட்டி கட்டியுள்ள கட்டிடத்திற்கு அழைத்து செல்ல கூறினாராம்.இவ்வண்ணம் கூறியவாறே  பாகோஜி  மீது சாய்ந்து  சமாதி நிலையை அடைந்து விட்டார்....இந்து முஸ்லிம் மத நல்லிணக்க செல்வரான பகவானின்  உடல் பூட்டி கட்டிய புதிய  ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது..அதுவே நாம் அனைவரும் தொழும் சமாதி மந்திர் ஆயிற்று...பகவான்  உடல் நலிவுற்ற நேரம் அவருடன் சிறு வயது முதலே அன்பு பாராட்டி அவர் சேவையிலே வாழ்நாளை கழித்த தாத்யா படேல் உடல் நலம் குன்றி ரத்த வாந்தி எடுத்து உயிர் பிரியும் நிலையில் இருந்தாராம்....ஆனால் பாபாவோ அவர் வேதனையை தான் வாங்கிக் கொண்டு தாத்யாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதுபோல் தன் உயிரைக் கொடுத்தாராம்...தன் பக்தருக்காக தன் உயிரை ஈந்தார் பகவான் ஏனென்றால் ...அப்படி தன் இன்னுயிரை அளித்து அவரைக் காத்தார் பகவான்  என்றால், தாத்யாவின் அன்னை  பாய்ஜாபாய், பாபா காடு மேடுகளில் திரிந்து கொண்டிருந்த காலங்களில் அவர் மேல் சாலப் பரிந்து  தாயினும் மேலான அன்புடன் அவரைத் தேடி அலைந்து அவருக்கு பசியாற உணவளித்தாராம்....பகவானும் பாயஜாவின் மகனை தன் உயிரினும் மேலாகக் காப்பேன் என்று அவருக்கு வாக்களித்தாராம்..பயஜாபாய்  செய்த தொண்டுக்கு நன்றிக் கடனாக தன் மேல் கொண்ட  பக்திக்காக  அவர் தந்த பரிசே  அவர் மகனை காக்க பகவான் தன் இன்னுயிரை அளித்தார்......இன்றளவும் கூட பகவான் தன் பக்தர்களைக் காப்பாற்ற எவ்வேடத்தையும் ஏற்பேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார்..ஆகவே சாயீயைப் பணிவோம்...

ஓம் ஶ்ரீ  சாய்ராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ  சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏

🔥🔥எறும்பின் காலில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கூட துல்லியமாகக் கேட்கிற காதுள்ள அவர், உங்கள் கூப்பிடுதலைக் கேட்கமாட்டாரா என்ன.? பொறுமை, நம்பிக்கை,  விவேகம், விசுவாசம் மற்றும் வைராக்கியத்தோடு செயல்படுங்கள்...🔥🔥

ஒவ்வொரு சாயீ பக்தரும் தனது எண்ணம், செயல் மீது பாபாவைச் சார்ந்தே நம்பிக்கை வைக்கின்றார்கள்... எதைச் செய்தாலும் இதை பகவானே  செய்கின்றார் என நம்புகின்றார்கள், எதை சிந்தித்தாலும் பாபா சிந்திக்க வைக்கிறார் என்றே எண்ணமிடுகின்றார்கள்... அதே சமயம், சிறிது யோசிக்கவும் வேண்டும்...பாபாவின் பெயரால் தொழில் ஆரம்பிக்கலாம், கச்சேரி நடத்தலாம் என முன் பின் தெரியாதவர்கள், அல்லது புதியதாக அறிமுகமான நபர்கள் கூறினால் எச்சரிக்கையாக இருங்கள் சாய் அன்பர்களே....நம்முடைய ஆசையினால் நாம் ஏமாறுகின்றோம், நப்பாசையினால், நிறைய கிடைக்கும் என நினைத்து இருப்பதை முதலீடு செய்வதாக நினைத்துத் தந்துவிடுகிறோம்... பிறகு, பாபா பெயரில் பழியைப் போட முயற்சிக்கின்றோம்.எது கிடைக்கிறதோ அதுவே போதும் என நினைத்துக் கொண்டிருங்கள். விரைந்து கிடைக்க வேண்டும் என ஒரு போதும் குறுக்கு வழியை நாடாதீர்கள்.... உங்களைப் படைத்த சாயீதேவன், உங்களை எல்லா நேரங்களிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்...எதிலும் ஏமாறுவதை விட சற்று கால அவகாசம் கொடுத்துக் காத்திருந்து பார்த்தால், நமக்கு வரவேண்டியது வரும், வராமல் தட்டிப்போவது சுவடு தெரியாமல் ஓடிப் போகும்...இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு நிமிடம் பகவானிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் இழந்த பொருள் அவர்களுக்கு விரைவில்  கிடைக்கும் என்று கூறி நம்பிக்கையுடன் காத்திருக்க கூறவும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

🔥🔥எமது குழந்தைகளே ..எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌...உங்களின் ஒருவனாக உங்களுக்குள் இருந்து சேவகனாக செயலாற்றவே விரும்புகின்றேன்....🔥🔥

 ஓம் ஶ்ரீ  சாய்நாதாய  நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏

🔥🔥எமது குழந்தைகளே ..எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌...உங்களின் ஒருவனாக  உங்களுக்குள்  இருந்து சேவகனாக  செயலாற்றவே விரும்புகின்றேன்....🔥🔥

என்னிடத்தில் எப்போதும் நம்பிக்கையும் பொறுமையும்‌ கொண்டிருங்கள் !  குருவான நான் உங்களிடமிருந்து வேறெதையும் ஒருபோதும் எதிர்பார்க்கவுமில்லை .  நான் உங்களை ஒருபோதும் புறக்கணிக்கவுமில்லை.  எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌...நான் உங்களுடனே தங்கி வாழ்கிறேன். ஒரு சில சமயம் உங்களைப் பிரிந்து இருப்பேன் எனினும், என்னுடைய அன்புடமைக்குத் தேவையோ, அன்பின்மையையோ நான் காட்டுவதில்லை...தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன் அருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணி வளர்ப்பதைப் போன்ற‌ அதேவிதமாக, நானும் உங்களை என் கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் பேணிப் பாதுகாப்பேன் !

ஶ்ரீ சீரடி சாய்பாபா...🙏🙏🙏


🔥🔥அனைவரும் தமது வாழ்நாளிலேயே பாபாவைப் பார்க்கவும், தெளிவாக உணரவும் முடியும்...ஆனால் அதற்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன.... மனிதர்கள் அத்தகுதிகளைப் பெற்றால், நிச்சயம் பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும். ஆகவே அந்த தகுதிகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻

🔥🔥அனைவரும்  தமது வாழ்நாளிலேயே பாபாவைப்  பார்க்கவும், தெளிவாக உணரவும் முடியும்...ஆனால் அதற்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன.... மனிதர்கள் அத்தகுதிகளைப்  பெற்றால், நிச்சயம் பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும். ஆகவே அந்த தகுதிகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்...🔥🔥

1. முமுக்ஷை ...அதாவது சுதந்திர உணர்வுடன் கூடிய இறைவனைக் காண வேண்டும் என்ற விருப்பம். மனைவி, சமூகம், உறவு, வேலை என்று ஏகப்பட்ட விலங்குகளால், தான் பூட்டப்பட்டிருப்பதாக எண்ணுகிறான் மனிதன். முதலில் இந்த தடைகளிலிருந்து விடுபட வேண்டும்... தான் தடைகளாக நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் தடைகளே அல்ல என்பதை புரிந்து, பாபாவோடு இரண்டறக் கலந்தாக  வேண்டும் என்ற லட்சியத்தை மட்டும்  மேற்கொள்ளல் வேண்டும்...

2. விரக்தி... இந்த உலகப் பொருட்கள், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும்... மேற்கூறியவற்றின் மீது பற்று வைக்கவே  கூடாது என்று பொருள் அல்ல... பணம், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது....

3. அந்தர்முக்தா... உள்முகச் சிந்தனை.... மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது பாபாவை சிறிது நேரமாவது தியானம் செய்ய வேண்டும் அல்லது மனதை ஒருமுகமாக நிலை கொள்ள வேண்டும்..

4. தீவினைகள் கசடறக் கழிபடுதல் :.... கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது, தீங்கு விளைவிப்பது போன்ற கொடுஞ் செயல்களை செய்யக்கூடாது.

5. உண்மை : உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது, மனிதர்கள் தமக்கு தாமே நேர்மை கடைபிடிக்க வேண்டும்...

6. புலனடக்கம் :... புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி பாபாவிடம் நாட்டம் செலுத்த வேண்டும்..

.7. வைராக்யம் : ...மனதையும், உணர்வையும் அடக்கி ஆளுதல்...

8. தூய்மை : ...மனத் தூய்மை வேண்டும். மனதளவிலும் எவ்வித ஜீவ ராசிகளுக்கும் தீமை எண்ணாமை...

9. குருவின் இன்றியமையாமை.. நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காணவேண்டுமெனில் நல்ல குருவை நாட வேண்டும்...

10. பாபாவின் அனுக்கிரகம் :... முதல் ஒன்பது  கட்டளைகளையும் நிறைவேற்றினால், பகவானின் அருள் தானாகக் கிட்டும். .. ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றுபவரிடம் பாபா மகிழ்ச்சியுற்று தன்னை அடைய வழிகாட்டுவார் சீரடிசாய்பகவான் ..

இவ்வனைத்து கட்டளைகளையும் பெற ஒரே வழி பாபாவின் பால் சரணாகதி அடைவதே.என்பதனை நினைவில் கொள்வீராக....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻

🔥🔥சீரடி சாய்பாபாவின் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில், முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள மறைஞான சூட்சம உரை இங்கே ....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏

🔥சீரடி சாய்பாபாவின் புனித வேதமான  சாய்  சத்சரித்திரத்தில்,  முதல் அத்தியாயத்தில்  இடம் பெற்றுள்ள  மறைஞான சூட்சம உரை இங்கே.. கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதில் இடம்பெற்றுள்ள மறைஞான தத்துவ உட்கருத்தும் இங்கே ..🔥🔥

 ஒருநாள்  காலை நேரத்தில்  அண்ணாசாஹேப் மசூதிக்கு சாய்பகவானை  தரிசிப்பதற்காகச் சென்றிந்தாராம்.....சாஹேப் கூறுகின்றார்.... பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன்.  தமது முகம், வாய் இவற்றைக் கழுவிய பின்பு, பகவான்  கோதுமை மாவு அரைக்கத் தயார்படுத்துவதில் முனைந்தார்.... ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதன்மேல் திருகையை வைத்தார்.  பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து தம்  கஃனியின் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார்.  திருகையைச் சுற்றி கோதுமையை அரைக்கத் தொடங்கினார்....பிச்சை எடுத்து வாழ்ந்து,  எவ்வித உடைமையும்  சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியமென்ன என்றவாறு நினைத்தேன்....  அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள்.  ஆயின், ஒருவருக்கும் பகவான்  என்ன செய்கின்றார் என்று கேட்கத் துணிவு வரவில்லை.... 

பகவான்  மாவரைக்கும் இச்செய்தி உடனே சீரடி கிராமத்தில் பரவி ஆண்களும், பெண்களும் பாபாவின் செய்கையைக் காணப் பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர்.  கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய நுழைந்து, பகவானை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திருகையின் கைப்பிடியைப் பற்றி பகவானின்  லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர்.

முதலில் பகவான்  கடுங்கோபம் அடைந்தார்... ஆயின், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார்... அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க வேறு யாருமே இல்லை..அவர் பிச்சை எடுத்து வழ்ந்தவராதலாள் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவையிருக்கவில்லை...எனவே இவ்வளவு மாவை என்ன செய்வார்..?  ஒருவேளை பகவான்  அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்." என்றவாறு எண்ணமிட்டபடி, பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள்....

இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பகவான்  கோபமடைந்து, "பெண்களே..! உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா..?  யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கின்றீர்கள்....நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் இதற்கு  முன்னர் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன?  தயவுசெய்து இப்போது இதைச் செய்யுங்கள், இம்மாவை எடுத்துச்சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார்...  இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டு  கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடி அங்கே மாவைப் பரப்பிவிட்டார்கள்.

பகவான்  கோதுமை அரைத்ததைப் பற்றி  என்னக்  காரணம் என்று சீரடி  மக்களை வினவினேன்...காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டு இருப்பதாகவும்,  பகவான் கோதுமை அரைத்தது  அதனை  எதிர்க்க  செய்யும்  பரிகாரமே  என்றும் கூறினார்கள்.. கோதுமை அரைக்கப்படவில்லை, காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டது என்பது  தெளிவாயிற்று... இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.பகவான் எதனைச் செய்தாலும் அதில் மாபெறும்  மறைபொருள் சூட்சமம் அடங்கியுள்ளது .எனவே  பகவான் வழிமுறைகளை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளுதல் முக்கியமானது...நம்பிக்கை என்பது இங்கே பிரதானமாகக் கருதப்படுகின்றது... 

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

🔥🔥குருவின் மறை ஞாண அருள்மொழிகளும்,போதனைகளும் நமக்கு எந்த நிலையை உணர்த்துகின்றது என்பதனைப் பற்றியும், குருவின் ஆசியைப் விரைவில் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி விளக்கம்....🔥🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீ சீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

🔥குருவின் மறைஞான அருள்மொழிகளும், போதனைகளும்  நமக்கு எந்த நிலையை  உணர்த்துகின்றது என்பதனைப் பற்றியும், குருவின் ஆசியைப் விரைவில் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி விளக்கம்.🔥

சீரடிபகவான்  அளிக்கும் பயிற்சி, போதனைகள்   அனைத்தும்  ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.அவரை நாடி வரும் ஒவ்வொருவருடைய இயல்  நிலைக்கு ஏற்றவாறே குருவினுடைய உபதேசங்கள் இருந்தன...இப்போதும் தன்னை நாடி வரும் பக்தர்களின் சுயத்தன்மைக்கு ஏற்றவாறே ஆசிர்வாதமும், உபதேசங்களும் இருக்கிறது.....நாம் அனைவரும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு,  நாம் சாட்சியாக நின்று,  எவ்வித எதிர்பார்ப்புமின்றி குருவை உற்று நோக்க வேண்டும்..அப்போது தான் குரு  நம்மை வழிநடத்த தன் சேவகத்தன்மையோடு நம் முன் தோன்றுவார்.. எவ்வாறு குருவை  நாம் இயங்க இயக்க வைக்கின்றமோ அவ்வாறுத் தான் பகவான் நம்மை வழிநடத்த முடியும்...இதனை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்...குருவாக நம்மை நாடி வர நாம் தான் நம் சித்தத்தை தூய்மைப் படுத்தி, முதல் படி நிலையாக  நம் தூய்மையான அன்பினால்  நம்முடைய  மனதை நிறப்பி, அவரை ஆத்மார்த்தமாக அழைத்து நமக்குத் தெரிந்த  பூஜை முறைகளை செய்து அவரை உள்ளன்போடு நேசித்து, மதித்து, ஒளிவு மறைவின்றி  வேற்றுமைப் பாராமல்  குருவை ஏற்றுக் கொண்டு வழிபட வேண்டும்...இதுவே  குருவின் கருணைப் பார்வை நம் மீது செலுத்துவதற்கான முதல் நிலையாகக் கருத வேண்டும்... இதன் பிறகு நம்மை குருவிடம்  ஒப்படைத்து விட்டு குருவின் பால் பேரன்புக் கொண்டு அவரோடு சூட்சமமாக  கரைந்து.. கலந்து, அவரின் ஆசியைப் பெற குருவையே எதிர்நோக்கி  சிறு குழந்தையாக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும்..மேலும் குருவழிப் பாதையைப் பின்பற்றி அவர் கூறிய அருள்மொழிகளை படித்து அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.....உயர்ந்த  பண்புகள், இறையாளர்கள் கூறிய நெறி முறைகள்,வஞ்சகமின்மை,பேராசையின்மை, பிறர்க்கு தீங்கி இழைக்காத தன்மை,தானத் தருமத்தை  கடைப்பிடித்தல்,ஏழை எளியவர்களின் பால் நேசமாக இருத்தல்,பிறர் துயரத் துன்பத்தைக் கண்டு வருந்துதல்,பிறர் மகிழ்வைக் கண்டு நாம் மகிழ்தல்,அனைவரும் நன்றாக, ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல்,அனைவரின் பால் பாகுபாடு இல்லாமல் அன்பு வைத்தல்  மற்றும்  குருக் கூறிய மானிட  இறைப் பண்புகளையும் ,சத்திய ஒழுக்க கோட்பாடுகளைக் கடைப்பிடித்து இறையச்சத்தோடு வாழ்ந்து வந்தால் சித்தம் தெளிவடையும்....

சித்தம் தெளிவு பெறும் போது சித்தர்களும், மகான்களும் குருமார்களும் ..சித்தத்தின் இருப்பிடத் தவைனுமான ஆதி  சிவப்பரமும்  நம்மை நாடி வந்துவிடுவார்கள்...நீங்கள் கூறும் இறை நாமாக்களுக்கு ஏற்ப குரு முதல் அனைத்து உயர் ஆத்மாக்களும்  தானாக முன் வந்து  ஆசி வழங்கி உங்களை வழி நடத்துவார்கள்...இதுவே இறையை ஈர்க்கும் வழியாகின்றது அன்பர்களே. நாம் அனைவரும் இறையைத் தேடி ஓட வேண்டியதில்லை.  இறைத்தன்மை நம்மை நோக்கி வர நாம் நம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்...நாம் நமக்குள் சிவத்தை உணரவும் சித்தத்தை தூய்மை படுத்தவும் மட்டுமே  குரு  வழிக் காண்பிக்கின்றார்...குருவின் ஆற்றலானது நாம் நம்மை எந்தளவிற்கு நம்மை  ஒப்படைக்கின்றோமோ அவ்வாறே நமக்குள் குருவின் பேராற்றல் வந்து நம்மை ஆட்க்கொள்ளும்.. நமக்காக செயல் புரிய முன்வரும்..உங்களை ஒப்படைக்காமலும், சரணடையாமலும்,உங்களை வெற்றிடமாக்கிக் கொள்ளாமலும்,வெளிப்படையாக நீங்கள் உங்களை ஒப்படைக்காமல்   இருந்தால் குருவால்  கூட  ஒன்றும் செய்ய முடியாது...எவ்வாறு நாம் குருவை கரம் பிடித்து அவர் வழியில் சென்று நம்மை இயக்க அனுமதிக்கின்றோமோ அவ்வாறுத் தான் குரு நமக்கான  சேவகனாக பணியாற்றிட  முடியும்...இந்த மூல சூட்சமத்தினை நன்றாக புரிந்து கொள்ளவும் சாய் அன்பர்களே..நாம் தான் குருவைக்  நம்மை நோக்கி ஈர்க்க கைக்கொள்ள  முயற்சிக்க வேண்டும்...தூய்மையான அன்பால் அவரை நம் பிண்ட உறவினர்களைப் போல், உள்ளன்போடு நேசித்து வழிப்பட்டு,கலந்து, கரைந்து, ஒளிவு மறைவில்லாமல் நம் இருப்பை வைத்துக் கொண்டு குருவை நம் பால் வர  இறுக்கிக் கொள்ள வேண்டும்.. இவ்வாறு நாம் நம்மை குருவையும் இறைத்தன்மையையும்  ஈர்க்க நாம் சில நடைமுறைப் பண்புகளை  நமக்கு நாமே வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.. குரு, ஒரு உயர்ந்த  தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கி வாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக சீரடி பகவான்  அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு மட்டுமல்லாமல் .. அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்...குரு நம்மை மிகச் சிறந்தகர்ம யோகியாக செயலாற்ற வைத்துக் கொண்டே ஞான மார்க்கத்தையும் ஒரு சேர புகட்டுவார்..நாம் தான் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்..

ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென குரு  எதிர்பார்க்கவில்லை. .. தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம்... பாபா அவரை ஏற்றுக் கொள்கின்றார்....ஆனால்...பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம்..... உதாரணமாக "பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்" என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது  மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.....இதுவே அனைத்திற்கும் மூல சூட்சமமாகின்றது ...

ஓம் ஶ்ரீ  சாய்ராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻